Posts

Showing posts from 2014

கையில் தொடுதிரை புதிய முயற்சி..

Image
ஸ்மார்ட் போனில் உள்ள தொடுதிரை வசதி எல்லாம் ஒன்றுமே இல்லை. பிரான்சைச் சேர்ந்த சிக்ரெட் எனும் நிறுவனம் உங்கள் கைகளேயே தொடுதிரையாக மாற்றுவதற்கான கருத்தாக்கத்தை முன் வைத்துப் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிறுவனம் இதற்காகப் புதிய ஹைடெக் பிரேஸ்லெட்டை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  “உங்கள் சருமத்தை புதிய டேப்லெட்டாக மாற்றுங்கள்” எனும் கோஷத்தை முன்வைத்துள்ள இந்நிறுவனம் இந்த நவீன் பிரேஸ்லெட் செயல்படும் விதத்தை விவரிக்கும் வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக 40 லட்சம் முறைக்கு மேல் பார்த்து வியக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டு, சிப், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், அக்ஸலோமீட்டர் ,வை-பை மற்றும் புளுடூத் கொண்டதாக இந்தச் சாதனம் உருவாக்கப்பட உள்ளது. இதற்குத் துணையாக ஒரு செயலியும் உண்டாம். மெயில் படிப்பது, போன் பேசுவது,நோட்டிபிகேஷன் பெறுவது என எல்லாமே இந்தக் கை தொடு திரையில் சாத்தியம் என நிறுவனம் கூறுகிறது. இந்த பிரேஸ்லெட் மற்றும் அதற்குத் துணையான செயலியை உருவாக்க இணையம் மூலம் நிறுவனம் நிதி கோரியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் முன்னோட்ட வடிவை உருவ

புத்தாண்டில் மைக்ரோசாப்ட்டின் திட்டம்..

Image
வரும் 2015 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சவால் நிறைந்ததாக இருக்கும். விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஏற்பட்ட நற்பெயர் இழப்பினை, விண்டோஸ் 10 மூலம் சரி செய்திட வேண்டிய நிர்ப்பந்தத்தில் மைக்ரோசாப்ட் உள்ளது. ஆனால், நிச்சயம் மைக்ரோசாப்ட் இந்த சவாலைச் சந்தித்து வெற்றிக் கொடி நாட்டும். சென்ற 2009 ஆம் ஆண்டில், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இதே போல, மைக்ரோசாப்ட் இழந்த பெயரை ஈட்டுத் தந்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் வேறு விற்பனைச் சந்தையில் இருந்து வந்தாலும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதில் முக்கிய இடம் கொண்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், சர்வர்களிலும் இயங்கும் விண்டோஸ் சிஸ்டம், வருமானத்தை அள்ளித் தந்து வருகிறது என்றால் அது மிகையாகாது. எனவே, எந்தச் சூழ்நிலையிலும், மைக்ரோசாப்ட் இதனைத் தேய்ந்த நிலைக்குச் செல்லவிடாது.  வரும் ஆண்டில், வர இருக்கும் விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல வகைக் கட்டமைப்புகளில் செயல்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்கும். போன், டேப்ளட் பி.சி., பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் எக்ஸ்பாக்ஸ் உட்பட அனைத்திலும் இணைந்து இயங

வேர்டில் ஸ்கிரீன் டிப் செட்டிங்ஸ்

Image
வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள்  மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.  1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.) 2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். 3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிட

தகவல் பரிமாற்ற புரட்சிக்கு என்ன தேவை?

அண்மையில் டில்லியில் ''பிராட்பேண்ட் டெக் இந்தியா 2014” (Broadband Tech India 2014) என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மொபைல் சேவைப் பிரிவில் இயங்கும் பல நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.  தற்போது செயல்பட்டு வரும் பிராட்பேண்ட் சந்தையை எப்படி எல்லாம் விரிவு படுத்தலாம்; அதற்கு என்ன தேவையாய் உள்ளது என்று பலவிதமான கருத்துகளைத் தெரிவித்தனர்.  இதில் கலந்து கொண்ட, மத்திய அரசின் தகவல் தொழில் நுட்ப துறையின் ஆலோசகர் ஏ.கே. பார்கவா உரையாற்றுகையில், “புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதிகமான தகவல் பதிவு மற்றும் பரிமாற்றம் காரணமாக, டேட்டா பரிமாற்ற கட்டணம் வெகுவாகக் குறைக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.  மத்திய அரசு 3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றை வரிசைக்கான ஏலத்தினை நடத்துவதில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், டேட்டா பரிமாற்ற கட்டணத்தைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறது.  அலைக்கற்றை வரிசை அதிகமாகவே கிடைக்கும் வாய்ப்புகள் இருப்பதால், டேட்டா பரிமாற்ற சேவையில், பைபர் ஆப்டிகல் துணையுடன் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். இதனால், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்க

தடங்கலுக்கு வருந்துகிறேன்..! :-/

அன்புடைய நண்பர்களுக்கு.,     கடந்த இரு மாதங்களாக நான் மிகுந்த அலுவல் பணி இடுக்குகளில் சிக்கிகொண்டிருந்ததால்,  நமது இந்த வலைப்பூவை மேம்படுத்த புது இடுகைகளை இட முடியவில்லை.          அதனால் மிகுந்த வருத்தமடைகிறேன், இன்று முதல் நமது வலைபூவை வழக்கம்போல மேம்படுத்தப்படும் நண்பர்களே..!            தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறேன்..!

எக்ஸ்சல் பார்முலா ஒரு பார்வை..

அடிக்கோடு : எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது.  இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cell s என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும்.  இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும். COMBIN பார்முலா : எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்க

கணணியை சிதைக்கும் எபோலா வைரஸ்

Image
உலக அளவில், உயிர்க் கொல்லி நோயைப் பரப்பும் எபோலா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும், மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், கம்ப்யூட்டரை இது பாதித்து வருகிறது என்ற செய்தி வியப்பைத் தந்து கொண்டிருக்கிறது.  உண்மை என்னவென்றால், எபோலா வைரஸ் குறித்து பல போலியான இமெயில்கள், உலகெங்கும் வலம் வருகின்றன. ”எபோலா பற்றி, உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் தந்துள்ளது. இதை அவசியம் படியுங்கள்.  மற்றவர்களுக்கும் பரப்புங்கள்” என்ற எச்சரிக்கை மெயில் ஒன்று வருகிறது. அறிக்கை குறித்துப் படிக்க லிங்க் ஒன்றும் தரப்படுகிறது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், உடன் மால்வேர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, கம்ப்யூட்டரின் இயக்க கட்டுப்பாட்டினை, அஞ்சல் வழியாக இன்னொருவருக்கு அனுப்புகிறது.  உங்கள் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், அதற்கான பாஸ்வேர்ட் எண், கிரெடிட் கார்டு எண் என அனைத்து தனி நபர் தகவல்களும் செல்கின்றன. இதனால், அனைத்து வழிகளிலும் இழப்பு ஏற்படுகிறது.  எனவே, இத்தகைய மெயில் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தாலோ, அல்லது உங்கள் ஸ்மார்ட் போனில் இது போன்ற செய்த

சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கு இலவச ஹியர் மேப்ஸ்

Image
சென்ற ஆகஸ்ட் மாதம், ஹியர் (HERE) நிறுவனம் சாம்சங் நிறுவனத்துடன் தான் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.  அதன் அடிப்படையில், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன்கள், இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹியர் மேப்ஸ் அப்ளிகேஷன் ஒன்றின் சோதனை பதிப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளது.  எந்த ஒரு இடத்திற்கும் செல்லும் வகையில், போக்குவரத்திற்கான வழிகாட்டுதல்களை இந்த மேப் காட்டுகிறது.  விண்டோஸ் போனில் கிடைக்கும், போன் இயங்கும் இடம் சார்ந்த அனைத்து வழி காட்டுதல்களும் இதில் கிடைக்கின்றன.  இதன் சிறப்பு அம்சங்கள்: இணைய இணைப்பின்றி, கார் ஓட்டும் போதும், நடந்து செல்லும் போதும், குரல் மூலம் வழி காட்டுதல், நூறு நாடுகளில் வழி காட்டும் வகையிலான வரைபடங்களை தரவிறக்கம் செய்து, அமைத்துக் கொள்ளும் வசதி மற்றும் 46 நாடுகளில், 766 நகரங்களில், பொதுத்துறை வாகனங்கள் செல்லும் வழி மற்றும் திசை காட்டும் வரைபடம் ஆகியவை ஆகும்.  ஆண்ட்ராய்ட் 4.1 மற்றும் அதன் பின்னர் வெளியான ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் கொண்ட சாம்சங் மொபைல் ஸ்மார்ட் போன்களில், இதனைப் பதிந்து இயக்

விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு

Image
ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன.  இருப்பினும், ஸ்டார்ட் மெனுவில் தற்போது தரப்பட்டுள்ள வடிவமைப்பு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தைய ஸ்டார்ட் மெனுவின் வசதிகளைக் காட்டிலும் கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் வடிவமைப்பும் மிக எளிதாக அதனை இயக்குவதற்கு வழிகள் தருவதாக அமைந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம். ஸ்டார்ட் மெனு தற்போது லைவ் டைல்ஸ் என்று அழைக்கப்படும், எப்போதும் இயக்கத்தில் உள்ள அப்ளிகேஷன்களின் நிலையைக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.  இதன் வலது பக்க பிரிவில், நீங்கள் விரும்பும், அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை பின் செய்து வைக்கலாம். விண்டோஸ் போன் மெனுவில், நாம் அடிக்கடி அழைப்பவரின் எண்ணை பின் செய்வது போல, இங்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷனை பின் செய்து அமைக்கலாம்.  லைவ் டைல்ஸ் என்பவை உயிர்த்துடிப்புள்ளவை. அதாவது, அதன் இயக்கம் அந்த டைலில் காட்டப்பட்டு கொண்டே இருக்

ஸ்மார்ட்போன் உபயோகிப்பவருக்கு அதிர்ச்சி தகவல்

Image
ஸ்மார்ட்போன்கள், டேப்லட்களை இரவில் அணைத்துவிட்டுத் தூங்கவில்லை என்றால் தூக்கம் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியில்  தெரியவந்துள்ளது. அமெரிக்க நாட்டின் வேதியியல் சங்கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பிரையன் ஸோல்டோவ்ஸ்கி இது குறித்து கூறியிருப்பதாவது:- "நாம் இருக்கும் சூழல் இரவா அல்லது பகலா என்று அனிச்சையாக நாம் உணர்வதில் வெளிச்சத்தின் பங்கு முக்கியமானது. பொதுவாகவே, மாலை நேரம் செல்ல செல்ல புறச்சூழலில் சிவப்பு நிறம் அதிகரிக்கிறது. கண்ணின் ஆழப்பகுதியில் இருக்கும் செல்களில் உள்ள மெலனாப்சின் என்ற புரோட்டீன் மீது இந்த சிவப்பு நிறம் விழும்போது, ‘சூரியன் மறைந்துவிட்டது, என்று அந்த செல்கள், மூளைக்கு உத்தரவிடுகின்றன. எனவே, இரவு நேரம் என்றால் கண்ணில் சிவப்புநிற ஒளிதான் படவேண்டும். இந்த செயல்பாட்டை ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றிலிருந்து வெளியேறும் நீல நிற ஒளியானது தொடர்ந்து கண்ணில் பட்டுக்கொண்டே இருந்தால், ‘இன்னும் இரவு வரவில்லை’ என்ற தவறான தகவலைத்தான் கண் செல்கள், மூளைக்குக் கடத்தும். ஏனென்றால், நீலநிறம் என்பது அதிகாலை நேரத்திற்கு உரிய

பேஸ்புக் வழங்கும் புத்தம் புது விருதுகள்

Image
அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க், இந்தியாவில் இணைய மேம்பாட்டிற்கென 10 லட்சம் டாலர் மதிப்பிலான உதவி அளிப்பதாக அறிவித்தார். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புலம் மாறும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் உதவிடும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், இணைய தளங்கள், இணையம் வழி சேவை ஆகியவற்றைக் கொண்டு வருவதில் இந்த நிதி பயன்படுத்தப்படும். புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய இணைப்பு தரும் சக்தியும் திறனும் குறித்து விரிவாகப் பேசிய மார்க், தொழில் நுட்பம் என்பது குறிப்பிட்ட ஒரு சிலரின் தனி உரிமையாக இருக்கக் கூடாது. அது நம் சமுதாயம் அனைத்திற்கும் நன்மை தரும் ஒன்றாக இயங்க வேண்டும் என்று கூறினார்.  இந்தியா ஏற்கனவே அறிவியல், ஆய்வு மற்றும் தொழில் நுட்ப பிரிவுகளை ஏற்றுக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அதே போல இணையத்தையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஏற்கனவே, இந்தியாவில் 24.3 கோடி பேர் இணையத்திலும், 10 கோடி பேர் பேஸ்புக்கிலும் இருந்தாலும், இ

பேஸ்புக் செய்திகளை மின்னஞ்சலில் பெற வேண்டுமா..?

Image
பேஸ்புக் மூலம் தகவல்களை அனுப்புவதை இமெயில் மூலம் பெறும் வசதியை அந்நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் சேவையை வாங்கியப் பிறகு, தினந்தோறும் புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பேஸ்புக் தகவல்களை இமெயில் உடன் இணைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் மெயில்களுக்கு அனுப்பப்படும் பெரிய இமெயில்கள், தகவல்களில் இடம்பெறுவதற்குப் பதிலாக வாடிக்கையாளர்களின் அடிப்படை இமெயில்களுக்கு அனுப்பப்படும்.  மேலும், பேஸ்புக் மெயில்கள் மூலம் தகவல்களை தகவல் பலகைகளில் பார்வையிட மட்டுமே முடியும். மேற்கொண்டு அந்த தகவல்களைத் தொடர விரும்பினால், அனுப்பியவரின் தகவல் பலகைக்குச் சென்று புதிதாக டைப் அடித்து தொடர வேண்டும். நன்றி நிலவைத்தேடி

கணனியில் தகவல் நினைவூட்டும் மென்பொருள்..

Image
அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களை அல்லது சிறு குறிப்புக்களை எழுதி வைத்து அதனை அடிக்கடி பார்த்துக்கொள்ள  உதவுகின்றது Sticky Notes எனும் Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள். ஆனால் இது போன்ற ஒரு எளிமையான மென்பொருள் தமது Windowsகணனியில் இருப்பதனை அதிகமானவர்கள் அறிந்ததே இல்லை. இதனை திறந்து கொள்ள Start Menu சென்று Search பகுதியில் Sticky Notes என தட்டச்சு செய்க. இனி தோன்றும் Sticky Notes எனும் மென்பொருளை சுட்டுக. பிறகு உங்களுக்கு தேவையான குறிப்புக்களை எழுதி வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு இடைமுகம் தோன்றும். பின் அதில் உங்களுக்கு தேவையான குறிப்புக்களை அல்லது அடிக்கடி ஞாபகத்தில் இருக்க வேண்டிய விடயங்களை பதிந்து வைத்துக்கொள்ளலாம். இதில் நீங்க உருவாக்கும் எழுத்துக்களினது தோற்றத்தினை நீங்கள் விரும்பிய வகையில் அமைத்துக் கொள்ள பின்வரும் Keyboard Shortcut களை பயன்படுத்துங்கள். தடித்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Bold text) =====> Ctrl+B சரிந்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Italic text) =====> Ctrl+I எழுத்துக்களுக்கு Underlined செய்ய ==

ஒரு PDF பைலில் உள்ள கட்டுபாடுகளை நீக்க..

Image
ஒரு PDF பைலில் உள்ள கட்டுபாடுகளை நீக்க ஒரு அருமையான இலவச சேவையினை அளிக்கும் ஒரு இணையதளம் உள்ளது. பொதுவாக ஒரு சில PDF பைல் ஆனது பல்வேறு கட்டுபாடுகளை கொண்டு காணப்படும்., அதாவது, கிழேயுள்ள படத்தை பாருங்களேன்.. இதில் Allowed எனில் அந்த கட்டுப்பாடு விலக்களிக்கப்பட்டுள்ளது., Not Allowed எனில் அந்த கட்டுப்பாடு அந்த PDF பைலில் உள்ளது எனவும் அறியலாம். இது போல் Printing என்பது Not Allowed-ல் இருந்தால் அந்த PDF பைலை நம்மால் பிரிண்ட் எடுக்க முடியாது.  அந்த சமயத்தில் இந்த அணைத்து கட்டுபாடுகளையும் ஓர் PDF பைலில் இருந்து விளக்க ஒரு இணையதளம் இலவச சேவையினை தருகிறது. PDF Unlock   இந்த தளத்திற்கு சென்று நாம் PDF பைலை Unlock செய்யலாம். மூன்று வெவ்வேறு கிழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பதிவேற்றம் (Upload) செய்து கொள்ள முடியும்.  1.My Computer 2. Dropbox 3. Google Drive நமது unlock செய்ய வேண்டிய PDF பைலானது நமது கணினியில் உள்ள நிலையில் நாம் My Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ள வேண்டும். Unlock செய்ய விரும்பும் PDF பைலை தேர்வு செய்து Open என்ற ப

ஆப்பிள் வளர்ந்த வரலாறு

Image
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகியுள்ள இந்நிலையில், மொபைல் போன் இயக்க வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த ஐபோன் உருவான வரலாற்றை இங்கு காணலாம். 1. ஐபோன் தொடக்கம் ஜனவரி 9, 2007:  ஆண்டுதோறும் நடக்கும், மேக்வேர்ல்ட் கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முற்றிலும் புதிய ஐபோன், அகலத்திரையுடன் கூடிய ஐபாட் மற்றும் இணைய இணைப்பில் புதிய வழி என மூன்று விஷயங்களை அறிமுகப்படுத்தினார்.  இன்றைய நிலையில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு அன்று விதையிடப்பட்டது. இந்த போன் ஜூன் 29, 2-007ல் வெளியானது. பல மணி நேரம் காத்திருந்து மக்கள் இதனைப் பெற்றுச் சென்றனர்.  இது அறிமுகமாகி 74 நாட்கள் கழித்து, பத்து லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டதாக, ஆப்பிள் அறிவித்தது.  2. ஆண்ட்ராய்ட் போட்டி:  ஐபோன் அறிமுகமாகி 15 மாதங்கள் கழித்து, இதற்குப் போட்டியாக, முதல் ஆண்ட்ராய்ட் போன் அறிமுகமானது. எச்.டி.சி. ட்ரீம் என இது அழைக்கப்பட்டது. 3. பிரச்னை 2010:  ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்ததை அடுத்து, ஊழியர் பாதுகாப

போட்டோ மிக்ஸ் மென்பொருள்

Image
போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.  இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி 2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்கள

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் டேட்டா இழப்பிணை தடுப்பது எப்படி.?

Image
மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். பாதுகாப்பினை உருவாக்குக: ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகை

சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC மெமரி கார்டு

Image
உலகளாவிய மெமரி ஸ்டோரேஜ் தயாரிப்பாளரான சாண்டிஸ்க் நிறுவனம் ரூ.51,990 விலையில் சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டை உருவாக்கியுள்ளது. இந்த கார்டு ஹைய் ரெசல்யூசன் 4K வீடியோகளை படம்பிடிக்க பயனுள்ள வகையில் ஒரு வினாடிக்கு 90MB டேடாக்களை ரைட் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டு செப்டம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை அன்று சந்தையில் தொடங்கப்பட்டது.  ஏற்கனவே சாண்டிஸ்க் நிறுவனம் மொபைல் போனில் பயன்படுத்தும் வகையில் 64GB வரை மைக்ரோ SD கார்டு ரூ.9,700 விலையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டு 4K அல்ட்ரா ஹை டெஃபனிஷன் (UHD), 1080 (FHD) வீடியோக்களை படம்பிடிக்கும் வீடியோகிராஃபர்கள் மற்றும் அதிவேக முறையில் புகைப்படங்களை பிடிக்கும் புகைப்படக்காரர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.  சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC UHS-I கார்டு 90MB/s வரை பரிமாற்ற வேகங்கள் மற்றும் 95MB/s வரை எழுதும் வேகங்கள் வழங்க முடியும் என்று கூறுகிறது. கூடுதலாக, கார்டு டேம

சலுகை விலையில் சாம்சங் கேலக்ஸி கோர் 2 மற்றும் S DUOS 3 ஸ்மார்ட்போன்

Image
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கோர் 2 ரூ.8,007 விலைக்கு குறைத்துவிட்டது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், இந்தியாவின் சாம்சங்  அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் குறைக்கப்பட்ட புதிய விலையில் கிடைக்கிறது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன் ரூ.11,900 விலையில் ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.15,690 விலையில் தொடங்கப்பட்ட கேலக்ஸி கோர் ஸ்மார்ட்போனின் வழித்தோன்றல் ஆகும். சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், டூயல் சிம் ஆதரிக்கிறது. நிறுவனத்தின் TouchWiz Essence UI உடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 768MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட

க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பற்றி தெரியுமா..?

Image
தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனைத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன்? அல்லது தெரிந்து கொள்ளாததனால் எதனை இழக்கிறோம்? இதனோடு தொடர்புடையதாகhybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? இதற்கான சில விளக்கங்களையும் குறிப்புகளையும் இங்கு காணலாம். க்ளவ்ட் அறிமுகம்: Cloud computing என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக இருந்தாலும், 1950 ஆம் ஆண்டிலேயே, இதன் வேர்கள் தென்பட்டன. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்களும், அதனுடன் இணைக்கப்பட்ட டெர்மினல்களையும் சற்று எண்ணிப்பார்த்தால், அன்றே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தொடங்கிவிட்டதனை அறியலாம். மெயின்பிரேம் சர்வருக்கும், அதன் டெர்மினல்களுக்குமான இன்றைய தொலைவு தான் மிக அதிகமாகி உள்ளது.  க்ளவ்ட் என்பது பல்வேறு கம்ப்யூட்டர்கள், மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே ஒரு சிஸ்டத்தால் இயக்கப்படுவதாகும். க்ளவ்ட் என்பது எப்போதும் ஒன

கணினி இயங்குதளம் வெளியிடும் சீனா..

Image
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி நீட்சிக்கான தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதனால், சீன அரசு தன் அலுவலகங்களில், விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தக் கூடாது என ஆணையிட்டது. தற்போது தானே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வரும் அக்டோபரில் வெளியிட உள்ளது. முதலில் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், பின்னர் படிப்படியாக ஸ்மார்ட் போன்களிலும் இது பயன்படுத்தப்படும் வகையில் தரப்படும். இந்த தகவலை, அரசின் செய்தி தகவல் தொடர்பு முகமையான Xinhua தெரிவித்துள்ளது. படிப்படியாக, வெளிநாட்டு நிறுவனங்களின் எந்த சிஸ்டமும் சீன தகவல் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. மொபைல் சாதனங்களில் கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் இதே முறையில் நீக்கப்படும். தேசிய அளவில் தனக்கென மட்டும் பயன்படுத்தும் வகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தயாரிக்க சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 2000 ஆண்டில், Red Flag Linux என்ற பெயரில் ஓ.எஸ். ஒன்றை வடிவமைத்து, அப்போதைய விண்டோஸ் 2000க்குப் பதிலாக சீனா கொண்டு வந்தது. Red Flag Software என்னும் நிறுவனம், முழுக்க அரசு நித

ஸ்மார்ட் போன் தொலைந்தால் என்னவாகும்.. (Anxiety Disorder)

Image
ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் நவீன வாழ்க்கையில் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் பாதிப்புகளும், பக்க விளைவுகளும் இப்போது கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இதில் சமீபத்திய வரவு ஸ்மார்ட் போன் கவலை. எப்போதும் ஸ்மார்ட் போனை இறுகப் பற்றியிருக்கிறீர்களா? அடிக்கடி ஸ்மார்ட் போன் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா? எனில் நீங்கள் ஸ்மார்ட் போன் இழப்பு கவலையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது ஸ்மார்ட் போன் தொலைந்தால் ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய கவலை. விலை மிக்க போனைப் பறிகொடுப்பது மட்டும் அல்ல, போனில் சேமிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பில்லாத தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இழக்க நேரும் ஆபத்து. ஸ்மார்ட் போன்களின் செயல்திறன் காரணமாக அவற்றில் செய்யக்கூடிய பணிகளும் அதிகரித்துள்ளன. அவற்றில் சேமித்து வைக்கக்கூடிய ஆவணங்களும் அதிகரித்துள்ளன. ஆக ஸ்மார்ட் போன் தொலையும் பட்சத்தில் இந்தத் தகவல்கள் தவறான கைகளில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் அதிகரித்துள்ளன. இதனை (Smartphone-Loss Anx