Posts

Showing posts with the label Electronic Device

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் கம்ப்யூட்டர் ஓர் பார்வை..

Image
சென்ற வாரம், செவ்வாய் அன்று, தன்னுடைய புதிதாக வடிவமைக்கப்பட்ட 12 அங்குல திரை கொண்ட, 13.1 மிமீ தடிமன் கொண்ட மேக் புக் கம்ப்யூட்டரை, ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது.  தொடக்க நிலையில் உள்ள ஆப்பிள் மேக் புக் ஏர் மற்றும் உயர் நிலையில் உள்ள, ஆப்பிள் மேக் புக் ப்ரோ ஆகியவற்றிற்கு இடையே இது இடம் பெறுகிறது.  இதன் சிறப்பம்சங்களாக, 13 மிமீ அளவிலான இதன் அடிப்பாகம், 907 கிராம் எடை, நாள் முழுவதும் மின் சக்தி தரக்கூடிய பேட்டரி ஆகியவற்றைக் கூறலாம்.  இன்டெல் கோர் எம் ப்ராசசர் மற்றும் பேட்டரியால், குறைந்த தடிமனில் கம்ப்யூட்டர் அமைந்துள்ளது. இந்த ப்ராசசர், உள்ளாக வெப்பத்தை வெளியேற்றும் மின்விசிறி தேவையை நீக்குகிறது.  எனவே கம்ப்யூட்டரின் எடை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டரில் தான், ஆப்பிள் முதல் முறையாக, யு.எஸ்.பி. /சி போர்ட்டினைத் தந்துள்ளது. இது பவர், விடியோ அவுட்புட் மற்றும் டேட்டா ஆகிய அனைத்திற்கும் ஒன்றாக, ரிவர்ஸ் அமைப்பில் உள்ளது. இந்த மேக் புக் கம்ப்யூட்டர் மூன்று வண்ணங்களில், சில்வர், கிரே மற்றும் தங்க நிற வண்ணங்களில், வடிவமைக்கப்பட்டு கி...

Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போன்..

Image
Xiaomi நிறுவனம் Redmi 1S, வெற்றியை தொடர்ந்து Redmi 2 ஸ்மார்ட்போனை ரூ.6,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போன்  மார்ச் 24ம் தேதி முதல் தனது முதல் ஃபிளாஷ் விற்பனை மூலம் கிடைக்கும். மற்றும் வாடிக்கையாளர்கள் Flipkart வளைத்தளம் வழியாக வியாழக்கிழமை (மார்ச் 12) மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம். இது, வெள்ளை மற்றும் சாம்பல் வண்ண வகைகளில் கிடைக்கும்.  டூயல் சிம் டூயல் காத்திருப்பு ஆதரவு கொண்ட Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போனில் நிறுவனத்தின் சொந்த MIUI 6 ஸ்கின் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 312ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.7 இன்ச் ஹச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் Adreno 306 ஜிபீயூ மற்றும் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் 1.2GHz குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 410 ப்ராசசர் (Cortex-A53) மூலம் இயக்கப்படுகிறது.  Xiaomi Redmi 2 ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வ...

ஸ்மார்ட் போன் ஏற்படுத்தும் பாதிப்புகள்..

Image
நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் எப்போதும் ஸ்மார்ட் போனும் கையுமாக இருந்தால் உங்கள் புத்திசாலித்தனம் மங்கும் அபாயம் இருக்கிறது. ஸ்மார்ட் போன் தாக்கம் தொடர்பாக, கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வு இப்படி எச்சரிக்கிறது. உள்ளுணர்வின்படி முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் சோம்பல் மிக்கவர்களாக மாறிவிடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. தாங்கள் அறிந்திருக்கும் தகவல்கள் அல்லது எளிதாகக் கற்றுக்கொள்ள கூடிய விஷயங்களைக்கூட ஸ்மார்ட் போன் மூலம் தேடிப்பார்க்கும் பழக்கம்தான் இதற்குக் காரணம் என்கிறார் இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் கார்டன் பென்னிகுக். அதிகப்படியான ஸ்மார்ட் போன் பயன்பாடு, புத்திசாலித்தனம் குறைவது ஆகிய இரண்டுக்கும் தொடர்பு இருப்பதையும் ஆய்வு உணர்த்தியுள்ளது. நம்முடைய அறிவாற்றலைப் பயன்படுத்த மறுப்பதால் வயோதிக காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார். நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை மனதில் நிறுத்தி இது தொடர்பாக சுய ஆய்வு மேற்கொண்டு பார்க்கலாம்.....