Posts

Showing posts from September, 2014

ஆப்பிள் வளர்ந்த வரலாறு

Image
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் வெளியாகியுள்ள இந்நிலையில், மொபைல் போன் இயக்க வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த ஐபோன் உருவான வரலாற்றை இங்கு காணலாம். 1. ஐபோன் தொடக்கம் ஜனவரி 9, 2007:  ஆண்டுதோறும் நடக்கும், மேக்வேர்ல்ட் கருத்தரங்கில், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், முற்றிலும் புதிய ஐபோன், அகலத்திரையுடன் கூடிய ஐபாட் மற்றும் இணைய இணைப்பில் புதிய வழி என மூன்று விஷயங்களை அறிமுகப்படுத்தினார்.  இன்றைய நிலையில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனுக்கு அன்று விதையிடப்பட்டது. இந்த போன் ஜூன் 29, 2-007ல் வெளியானது. பல மணி நேரம் காத்திருந்து மக்கள் இதனைப் பெற்றுச் சென்றனர்.  இது அறிமுகமாகி 74 நாட்கள் கழித்து, பத்து லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டதாக, ஆப்பிள் அறிவித்தது.  2. ஆண்ட்ராய்ட் போட்டி:  ஐபோன் அறிமுகமாகி 15 மாதங்கள் கழித்து, இதற்குப் போட்டியாக, முதல் ஆண்ட்ராய்ட் போன் அறிமுகமானது. எச்.டி.சி. ட்ரீம் என இது அழைக்கப்பட்டது. 3. பிரச்னை 2010:  ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்ததை அடுத்து, ஊழியர் பாதுகாப

போட்டோ மிக்ஸ் மென்பொருள்

Image
போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம்கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.  இந்த இலவச புரோகிராம் கிடைக்கும் இணைய தள முகவரி 2.8 எம்.பி. அளவில் கிடைக்கும் இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்வது மிகவும் எளிது. ஒரு சில நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிடுகிறது. புரோகிராம் இயக்கத்திற்குத் தயாராய்க் கிடைக்கிறது. இதன் மூலம், போட்டோக்களின் பின்புலத்தினை மாற்றி அமைக்கலாம். படங்களில் இருந்து நமக்குப் பிடித்த அல்லது பிடிக்காதவர்களை இணைக்கலாம், நீக்கலாம். பல போட்டோக்கள

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் டேட்டா இழப்பிணை தடுப்பது எப்படி.?

Image
மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம். பாதுகாப்பினை உருவாக்குக: ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகை

சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC மெமரி கார்டு

Image
உலகளாவிய மெமரி ஸ்டோரேஜ் தயாரிப்பாளரான சாண்டிஸ்க் நிறுவனம் ரூ.51,990 விலையில் சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டை உருவாக்கியுள்ளது. இந்த கார்டு ஹைய் ரெசல்யூசன் 4K வீடியோகளை படம்பிடிக்க பயனுள்ள வகையில் ஒரு வினாடிக்கு 90MB டேடாக்களை ரைட் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டு செப்டம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது, ஆனால் அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை அன்று சந்தையில் தொடங்கப்பட்டது.  ஏற்கனவே சாண்டிஸ்க் நிறுவனம் மொபைல் போனில் பயன்படுத்தும் வகையில் 64GB வரை மைக்ரோ SD கார்டு ரூ.9,700 விலையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC கார்டு 4K அல்ட்ரா ஹை டெஃபனிஷன் (UHD), 1080 (FHD) வீடியோக்களை படம்பிடிக்கும் வீடியோகிராஃபர்கள் மற்றும் அதிவேக முறையில் புகைப்படங்களை பிடிக்கும் புகைப்படக்காரர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.  சாண்டிஸ்க் 512GB எக்ஸ்ட்ரீம் புரோ SDXC UHS-I கார்டு 90MB/s வரை பரிமாற்ற வேகங்கள் மற்றும் 95MB/s வரை எழுதும் வேகங்கள் வழங்க முடியும் என்று கூறுகிறது. கூடுதலாக, கார்டு டேம

சலுகை விலையில் சாம்சங் கேலக்ஸி கோர் 2 மற்றும் S DUOS 3 ஸ்மார்ட்போன்

Image
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கோர் 2 ரூ.8,007 விலைக்கு குறைத்துவிட்டது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், இந்தியாவின் சாம்சங்  அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் குறைக்கப்பட்ட புதிய விலையில் கிடைக்கிறது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன் ரூ.11,900 விலையில் ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.15,690 விலையில் தொடங்கப்பட்ட கேலக்ஸி கோர் ஸ்மார்ட்போனின் வழித்தோன்றல் ஆகும். சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், டூயல் சிம் ஆதரிக்கிறது. நிறுவனத்தின் TouchWiz Essence UI உடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 768MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.  இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட

க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பற்றி தெரியுமா..?

Image
தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனைத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன்? அல்லது தெரிந்து கொள்ளாததனால் எதனை இழக்கிறோம்? இதனோடு தொடர்புடையதாகhybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? இதற்கான சில விளக்கங்களையும் குறிப்புகளையும் இங்கு காணலாம். க்ளவ்ட் அறிமுகம்: Cloud computing என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக இருந்தாலும், 1950 ஆம் ஆண்டிலேயே, இதன் வேர்கள் தென்பட்டன. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்களும், அதனுடன் இணைக்கப்பட்ட டெர்மினல்களையும் சற்று எண்ணிப்பார்த்தால், அன்றே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தொடங்கிவிட்டதனை அறியலாம். மெயின்பிரேம் சர்வருக்கும், அதன் டெர்மினல்களுக்குமான இன்றைய தொலைவு தான் மிக அதிகமாகி உள்ளது.  க்ளவ்ட் என்பது பல்வேறு கம்ப்யூட்டர்கள், மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே ஒரு சிஸ்டத்தால் இயக்கப்படுவதாகும். க்ளவ்ட் என்பது எப்போதும் ஒன

கணினி இயங்குதளம் வெளியிடும் சீனா..

Image
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி நீட்சிக்கான தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதனால், சீன அரசு தன் அலுவலகங்களில், விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தக் கூடாது என ஆணையிட்டது. தற்போது தானே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வரும் அக்டோபரில் வெளியிட உள்ளது. முதலில் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், பின்னர் படிப்படியாக ஸ்மார்ட் போன்களிலும் இது பயன்படுத்தப்படும் வகையில் தரப்படும். இந்த தகவலை, அரசின் செய்தி தகவல் தொடர்பு முகமையான Xinhua தெரிவித்துள்ளது. படிப்படியாக, வெளிநாட்டு நிறுவனங்களின் எந்த சிஸ்டமும் சீன தகவல் தொடர்பு சாதனங்களில் பயன்படுத்தாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது. மொபைல் சாதனங்களில் கூகுளின் ஆண்ட்ராய்ட் சிஸ்டமும் இதே முறையில் நீக்கப்படும். தேசிய அளவில் தனக்கென மட்டும் பயன்படுத்தும் வகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தயாரிக்க சீனா முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 2000 ஆண்டில், Red Flag Linux என்ற பெயரில் ஓ.எஸ். ஒன்றை வடிவமைத்து, அப்போதைய விண்டோஸ் 2000க்குப் பதிலாக சீனா கொண்டு வந்தது. Red Flag Software என்னும் நிறுவனம், முழுக்க அரசு நித

ஸ்மார்ட் போன் தொலைந்தால் என்னவாகும்.. (Anxiety Disorder)

Image
ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் நவீன வாழ்க்கையில் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் பாதிப்புகளும், பக்க விளைவுகளும் இப்போது கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இதில் சமீபத்திய வரவு ஸ்மார்ட் போன் கவலை. எப்போதும் ஸ்மார்ட் போனை இறுகப் பற்றியிருக்கிறீர்களா? அடிக்கடி ஸ்மார்ட் போன் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா? எனில் நீங்கள் ஸ்மார்ட் போன் இழப்பு கவலையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது ஸ்மார்ட் போன் தொலைந்தால் ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய கவலை. விலை மிக்க போனைப் பறிகொடுப்பது மட்டும் அல்ல, போனில் சேமிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பில்லாத தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இழக்க நேரும் ஆபத்து. ஸ்மார்ட் போன்களின் செயல்திறன் காரணமாக அவற்றில் செய்யக்கூடிய பணிகளும் அதிகரித்துள்ளன. அவற்றில் சேமித்து வைக்கக்கூடிய ஆவணங்களும் அதிகரித்துள்ளன. ஆக ஸ்மார்ட் போன் தொலையும் பட்சத்தில் இந்தத் தகவல்கள் தவறான கைகளில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் அதிகரித்துள்ளன. இதனை (Smartphone-Loss Anx

பயர்பாக்ஸ் ஸ்மார்ட் போன்..

Image
வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் மொபைல் போன் சந்தையில், சற்று வித்தியாசமான வழியுடன் மொஸில்லா நுழைந்துள்ளது. அதன்தொடக்கத்தினை இந்தியாவில் தொடங்கியுள்ளது இன்னும் சிறப்பானதாகும். தன்னுடைய பயர்பாக்ஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது. Cloud FX எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போனை இண்டெக்ஸ் டெக்னாலஜிஸ் (Intex Technologies) நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆகஸ்ட் 25, திங்கள் கிழமை அன்று இது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ.1,999. Snapdeal   வர்த்தக இணைய தளம் மூலம் இதனைப் பெறலாம்.  இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான், மொஸில்லா இது குறித்து தெரிவித்திருந்தது.  இந்திய நிறுவனமான ஸ்பைஸ் நிறுவனத்துடனும், இந்த போனைத் தயாரித்து விற்பனை செய்திட ஒப்பந்தம் மேற்கொண்டு இருப்பதாகக் கூறியது.  இண்டெக்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், தொடக்க நிலை ஸ்மார்ட் போன் விற்பனையில் புதிய திருப்புமுனையினைக் கொள்ளப் போவதாக மொஸில்லா தெரிவித்தது.  இந்தியா மட்டுமின்றி, ஆசிய நாடுகள் அனைத்திலும் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்

அல்காடெல் ஒன் டச் பிளாஷ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

Image
அல்காடெல் நிறுவனம் தாய்லாந்தில் ஒன் டச் ஃபிளாஷ் (6042D) பேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனை பற்றி தாய்லாந்த் வலைத்தளத்தில் வெளியீட்டுள்ளது. ஆனால், அல்காடெல் இன்னும் ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பற்றி அறிவிக்கப்படவில்லை. மேலும், செப்டம்பர் 8ம் தேதி அன்று கிடைக்கும் விவரங்களுடன் விலை விவரங்களும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்காடெல் ஒன் டச் ஃபிளாஷ் (6042D) ஸ்மார்ட்ஃபோனில் ஒற்றை சிம் கொண்டுள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்ஃபோனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதில் ரேம் 1ஜிபி உடன் இணைந்து 1.4GHz அக்டா கோர் மீடியாடெக் MTK6592M பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. அல்காடெல் ஒன் டச் ஃபிளாஷ் (6042D) ஸ்மார்ட்ஃபோனில் LED ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. அல்காடெல் ஒன் டச் ஃபிளாஷ்

ZTE வி5 ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் ஸ்மார்ட்போன்

Image
ZTE நிறுவனம் இந்தியாவில் அதன் ஸ்மார்ட்போன் தொகுப்பு விரிவடைந்து, வி5 ஸ்மார்ட்போனை ரூ.10,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  புதிய ZTE ஸ்மார்ட்போன் ஆன்லைனில் செவ்வாய்க்கிழமை தொடங்கி Snapdeal-ல் பிரத்தியேகமாக கிடைக்கும்.  இந்த கைபேசி ஃபிசிக்கல் சில்லறை விற்பனையாளர் கடைகளில் கிடைக்கும் என்பதை பற்றி எந்த வார்த்தையும் இல்லை.  மேலும் இ-காமர்ஸ் இணையதளத்தில் ப்ரீபெய்ட் ஏர்செல் சந்தாதாரர்கள் ZTE வி5 ஸ்மார்ட்போன் வாங்கினால் முதல் 3 மாதங்களுக்கு மாதம் ஒன்றிற்கு 1GB 2G / 3G டேடா இலவசமாக வழங்கி வருகிறது.  புதிதாக தொடங்கப்பட்ட ZTE வி5 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. ZTE வி5 ஸ்மார்ட்போன், 720x1280 பிக்சல்கள் தீர்மானங்கள் உடன் ஒஜிஎஸ் மற்றும் டிராகன்டிரெயில் கிளாஸ் கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது.  இது ரேம் 1GB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 400 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.  இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.  ஸ்மார்ட்ஃபோனில் LED ஃபிளாஷ் உ

HTC டிசயர் 820 ஸ்மார்ட்போன்..

Image
HTC நிறுவனம் HTC டிசயர் தொடரில் தனது சமீபத்திய இடைப்பட்ட ஸ்மார்ட்போனான HTC டிசயர் 820 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது 4G LTE கேட் ஒருங்கிணைக்கப்பட்ட 64 பிட் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 ப்ராசசர் கொண்டுள்ளது. HTC ஸ்மார்ட்போன் உலகளவில் செப்டம்பர் மாதம் பிற்பகுதியில் தொடங்கி இருக்கும் என்று அறிவித்துள்ளது.  HTC டிசயர் 820 ஸ்மார்ட்போனில் டூயல் சிம் (நானோ சிம்) கொண்டுள்ளது.  இதில் HTC சென்ஸ் UI skinnedகொண்ட ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது.  இந்த HTC டிசயர் 820 ஸ்மார்ட்போன், HTC டிசயர் 816 வழித்தோன்றல் ஆகும்.  ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.  ஸ்மார்ட்ஃபோனில் ரேம் 2GB உடன் இணைந்து ஒரு 64 பிட் அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 615 SoC (1.5GHz குவாட் கோர் + 1.0GHz குவாட் கோர்) உள்ளது.  எல்இடி ப்ளாஷ் மற்றும் BSI சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல் (f / 2.2 லென்ஸ் உடன்) பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.  HTC டிசயர் 820 ஸ்மார்ட்போனில் microSD அட்டை வழியாக 12

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 065 ஆண்ட்ராய்ட் போன்

Image
தன் போல்ட் (Bolt) வரிசையில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.3,079 மட்டுமே. இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் (800 x 480 பிக்ஸெல்)உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் (MediaTek MT6571) டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது.  இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட். இதன் பின்புறக் கேமரா எல்.இ.டி. பிளாஷ் உடன் 2 எம்.பி. திறனுடனும், முன்புறக் கேமரா 0.3 எம்.பி. திறனுடனும் தரப்பட்டுள்ளது.  இதில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம்.  2ஜி போனாக இது இயங்குகிறது.  இதில் 512 எம்.பி. ராம் மெமரி கிடைக்கிற்து.  இதன் ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை அதிகமாக்க ஸ்லாட் தரப்பட்டுள்ளது.  இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது.  வைபி மற்றும் புளுடூத் வசதி கிடைக்கிறது.  இதில் எப்.எம். ரேடியோவும், 3.5 மிமீ ஆடியோ ஜாக்கும் தரப்பட்டுள்ளது.  வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதனைத் தற்போதைக்கு இணைய தளம் வழியாக ரூ. 3,799க்கு ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.