மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதியதாக மொபைல் போன் (Mobile) வாங்கியிருப்பீர்கள். கூடவே புதிய SimCard -ம் வாங்கியிருப்பீர்கள். அதனால் உங்களுக்கு புதிய எண் கிடைத்திருக்கும். எடுத்தவுடனேயே அந்த எண் உங்களுக்கு நினைவுக்கு வராது. பல நாட்கள் பயன்படுத்திய பிறகுதான் நினைவுக்கு வரும்.


நண்பர்கள் யாருக்கேனும் அந்த எண்ணை கொடுக்க நினைத்தால் உடனடியாக எண் நினைவில் வராமல் போகும். அதுபோன்ற சமயங்களில் இந்த எளிய முறை உங்களுக்குப் பயன்படும்.

அடிக்கடிப் பயன்படுத்தும் எண் கூட சில சமயங்களில் மறதியால் மறந்துவிடக்கூடிய வாய்ப்பும் இருக்கும்.

நீங்கள் எந்த ஒரு நிறுவனத்தின் அலைப்பேசி சேவையைப் பயன்படுத்தினாலும், உடனடியாக நீங்கள் உங்களுடைய அலைப்பேசி எண்ணைத் தெரிந்துகொள்ள கீழிருக்கும் குறுக்கு வழிகள் உங்களுக்குப் பயன்டும்.
  1. நீங்கள் Tata Decomo Mobile சேவையைப் பயன்படுத்தினால் 580#  என்ற குறியீட்டை உள்ளிட்டு Ok அழுத்தினால் உங்களுடைய மொபைல் எண் அலைபேசித் திரையில் தோன்றும்.
  2.  Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
  3. Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
  4. Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள்  *1#
  5. Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள்  *777*0#
  6. Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள்  *888#
  7. Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  8. Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
  9. Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# 
ஆகிய குறியீடுகளைப் பயன்படுத்தி உடனடியாக தங்களுடைய Mobile Number - ஐ உடனடியாக தெரிந்துகொள்ள முடியும்

Comments

Popular posts from this blog

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS