Posts

Showing posts from February, 2013

லேப்டாப்கள் குறைவான விலையில் விண்டோஸ் 8 உடன்

Image
தொடுதிரை இயக்கம் தான், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரபலப்படுத்தி, புதுமையானதாகக் காட்டி வருகிறது. ஆனால், இதனாலேயே விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் களின் விலை, மக்கள் ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.  இந்நிலையில், ஏசர் நிறுவனம் தன் ஆஸ்பயர் வி5 (Aspire V5), லேப்டாப் கம்ப்யூட்டரை ரூ. 34,550 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவில், விலை குறைந்த விண்டோஸ் 8 லேப்டாப் என்ற பெயரைப் பெற்றுள்ளது.  இதுவரை அசூஸ் நிறுவன லேப்டாப் கம்ப்யூட்டர், ரூ.39,990 என்று விலையிட்டு குறைந்த விலை நோட்புக் என்ற பெயரினைப் பெற்று வந்தது. தற்போது இந்த இடத்தில், ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பயர் 5 இடம் பெற்றுள்ளது.  இதன் திரை அகலம் 14 மற்றும் 15.6 அங்குலமாக உள்ளது. தொடக்க நிலை நோட்புக் கம்ப்யூட்டர்களில், பென்டியம் டூயல் கோர் ப்ராசசர்கள் அமைக்கப்படுகின்றன.  இதனைத் தொடர்ந்து, இன்டெல் கோர் ஐ3 மற்றும் ஐ5 சிப்களுடனும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியா கின்றன.இதன் தடிமன் 20மிமீ. எடை 2 கிலோ. இவை வழக்கமான லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் 10% குறைவாக தடிமன் மற்றும் எடை கொண்டுள்ளன என்று அறிவிக்

புளூடூத் பெயர் வரக் காரணம்

Image
900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.  தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார்.  இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர்.  இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர்.  மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஸ்மார்ட் போனை விண்ணில் ஏவிய இந்தியா

Image
    உலகிலேயே முதன் முறையாக, ஸ்மார்ட் போனை விண்ணுக்கு கொண்டு சென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா பி.எஸ்.எல்.வி. சி 20 ராக்கெட்டை விண்ணில் ஏவியது.  இதில் இந்திய பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சரல் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் இடம்பெற்றிருந்தன.  இந்நிலையில், இங்கிலாந்து நாட்டிற்குச் சொந்தமான ஸ்டிரான்ட் 1 செயற்கைக்கோள் மூலம் ஸ்மார்ட் போன் ஒன்று விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது.      பல்வேறு ஆராய்ச்சி ஆப்ஸ்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் போன், விண்வெளியில் நிலவும் சூழ்நிலை குறித்த தகவல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்க்டாப் ஐகான்கள் மறைந்துவிட்டதா?

உங்களுடைய கணினி திரையில் desktop--ல் உள்ள icon கள் திடீரென மறைந்துவிட்டதா? உடனே நீங்கள் பதற வேண்டாம். டெக்ஸ்டாப்பில் உள்ள ஐகான்கள் மறைந்துவிடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1. நீங்களாகவே உங்களை அறியாமல் டெஸ்க் டாப் ஐகான்களை மறைத்துவிடுவது. 2. InfraRecorder என்று சொல்லப்படும் ரெக்கார்டிங் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதால் ஏற்படும் பிரச்னை. InfraRecorder என்று சொல்லப்படும் CD/DVD ரெக்கார்டிங் அப்ளிகேசனை நிறுவும்பொழுது விண்டோஸ் 7 -ல் தானாகவே Show Desktop Icon என்பது அன்செலக்ட் ஆகிவிடும். இதனால் உங்களுடைய டெஸ்க்டாப்பில் எந்த ஐகானும் இல்லாமல் வெறும் டெஸ்க்டாப் வால்பேப்பர் மட்டுமே தெரியும். நீங்களாகவே மறைப்பது எப்படி என்றால் உங்களை அறியாமல் நீங்கள் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து Show Desktop Icons என்பதில் டிக் மார்க்கை எடுத்திருப்பீர்கள். இந்த இரண்டு பிரச்னைக்கும் எளிய தீர்வு இதுதான்..  உங்கள் கணினியில் டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து , View==>Show Desktop Icons என்பதில் டிக் மார்க் ஏற்படுத்துங்கள். இப்பொழுது உங்களுடைய டெஸ்க்டாப்பில் மறைக்கப்பட்டிரு

கணினியின் தாக்கத்திலிருந்து கண்களை காப்பாற்ற

வணக்கம் நண்பர்களே..! கணினியால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: நாள்தோறும் கணியைப் பயன்படுத்தி பணிபுரிபவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் கண்களிலும் வலி, உறுத்தல், எரிச்சல், உலர்வுத் தன்மை ஏற்படும். பொதுவாக கணினியில் தொடர்ச்சியாக 4 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிபவர்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் (Computer Vision Syndrome)எனப்படும் கண்சார்ந்த பாதிப்பு ஏற்படும். கைகளில் விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள், தோள்பட்டை என மூட்டு இணைப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் பாதிப்பு ஏற்பட்டு, வலி அதிகரிக்கும். தொடர்ச்சியாக கணினித் திரையை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதாலும், வேலையில் தொடர்ச்சியான ஈடுபாடு காட்டுவதாலும் கண்கள் உலர்ந்து, இமைகள் சிமிட்டுவதைக் கூட மறந்து விடுகிறது. இயல்பான சிமிட்டல்களின் அளவு குறைந்துவிடுகிறது. கண்களில் ஒரு வறட்சித் தன்மை ஏற்படும். இதன் விளைவாக தெளிவற்ற பார்வை. கண்களைத் திறந்து வைத்திருக்கும்பொழுதே கண் முன்னே மின்மினிப் பூச்சிகள் பறப்பது போன்ற தோற்றம். திடீரென கண்ணின் முன்னே வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைதல்

அதிகரிக்கும் மொபைல் போன் வைரஸ்

Image
மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம், நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக அளவில் பரவத் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும் நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது. இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன. எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக் காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும் உலவி வருகின்றன. தனி நபர

அதிக பயனாளர்களைக் கொண்டுள்ள முதல் 20 இணைய தளங்கள்

Image
உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை.  அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான்.  இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.  20.Amazon.com : எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தனி நபர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 16 கோடியே 30 லட்சம். முதன் முதலில் இது தொடங்கிய போது, பொருட்களைப் பெற்று, பேக் செய்து அனுப்பும் பணியைத்தான் மேற்கொண்டதாக இருந்தது. தற்போது இதன் இமாலய வளர்ச்சி, இணைய வர்த்தகத்தின் சிறப்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.  19. Sina.com.cn : மீடியா மற்றும் பயனாளர்கள் உருவாக்கும் தகவல்களைத் தாங்கித் தரும் சீனநாட்டு இணைய தளம். 2000

5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

Image
ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த வசதிகளுள் ஒன்று தான் 10 GB வரையிலான File - களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி. 10 GB வரை File களை அனுப்பும் வசதி நமக்கு கூகுள் டிரைவ் மூலம் தரப்படுகிறது. கூகுள் டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச Space தரப்பட்டிருக்கும். எனவே இலவசமாக 5 GB வரை அனுப்ப முடியும். 10 GB வரை அனுப்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இலவசமாக அனுப்ப வழி தரும் 5GB யை நாம் பார்ப்போம். ஜிமெயிலில் இருந்து அனுப்ப: கூகுள் டிரைவ் மூலம் என்றாலும் File - களை நீங்கள் உங்கள் ஜிமெயிலில் இருந்தே அனுப்பலாம். இதற்கு நீங்கள் புதிய Composing Method ஐ உபயோகிக்க வேண்டும். புதிய மெயில் Compose செய்யும் போது + Icon மீது கிளிக் செய்தால் Google Drive Icon வரும் அதை கிளிக் செய்து File ஐ Upload செய்திடலாம். ஏற்கனவே Upload செய்திருந்த File என்றால் My Drive என்பதில் இருந்து File - ஐ தெரிவு செய்து கொள்ளலாம். கூகுள் டிரைவில் இருந்தே அனுப்ப முதலில் Google Drive தளத்துக்கு சென்று உங்கள் ஜிமெயில் கணக்கின் மூலம் Sign in செய்து கொள்ளுங்க

மொபைல் போன் பேட்டரி பராமரிப்பும் பாதுகாக்கும் வழிகளும்

Image
மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம். * மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும். * அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து. * பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது. * அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது. * ஈரம் மற்றும் அதிக சூடு இவை இரண்டுமே போன் பேட்டரிகளுக்கு கெடுதல் தரும் நிலைகளாகும். * பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்திடும் வகையில் தொடர்ந்து மின் இணைப்பிலேயே இருக்கக் கூடாது. இதனால் சூடு பரவும் நிலை ஏற்படும். * பேட்டரிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வது போனின் வாழ்நாளைக் குறைக்கும்.  * தொடர்ந்து மியூசிக் அல்லது வீடியோ பார்க்கும் சூழ்நிலையில் பேட்டரி சூடு அடைக

குறைந்த விலையில் விண்டோஸ் 8 PC

Image
தொடுதிரை இயக்கம் தான், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரபலப்படுத்தி, புதுமையானதாகக் காட்டி வருகிறது. ஆனால், இதனாலேயே விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் களின் விலை, மக்கள் ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது.  இந்நிலையில், ஏசர் நிறுவனம் தன் ஆஸ்பயர் வி5 (Aspire V5), லேப்டாப் கம்ப்யூட்டரை ரூ. 34,550 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவில், விலை குறைந்த விண்டோஸ் 8 லேப்டாப் என்ற பெயரைப் பெற்றுள்ளது.  இதுவரை அசூஸ் நிறுவன லேப்டாப் கம்ப்யூட்டர், ரூ.39,990 என்று விலையிட்டு குறைந்த விலை நோட்புக் என்ற பெயரினைப் பெற்று வந்தது. தற்போது இந்த இடத்தில், ஏசர் நிறுவனத்தின் ஆஸ்பயர் 5 இடம் பெற்றுள்ளது.  இதன் திரை அகலம் 14 மற்றும் 15.6 அங்குலமாக உள்ளது. தொடக்க நிலை நோட்புக் கம்ப்யூட்டர்களில், பென்டியம் டூயல் கோர் ப்ராசசர்கள் அமைக்கப்படுகின்றன.  இதனைத் தொடர்ந்து, இன்டெல் கோர் ஐ3 மற்றும் ஐ5 சிப்களுடனும் நோட்புக் கம்ப்யூட்டர்கள் வெளியா கின்றன.இதன் தடிமன் 20மிமீ. எடை 2 கிலோ. இவை வழக்கமான லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் 10% குறைவாக தடிமன் மற்றும் எடை கொண்டுள்ளன என்று அறிவிக

டேப்ளட் விற்பனையில் யார் முதல் இடம்?

Image
சந்தேகம் இல்லாமல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் டேப்ளட் தான், உலக அளவில், விற்பனையில் முதலிடம் கொண்டுள்ளது. சென்ற டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 2 கோடியே 29 லட்சம் ஐபேட் சாதனங்களை விற்பனை செய்துள்ளது ஆப்பிள். இதன் ஐபேட் மினி சாதனத்திற்குக் கிடைத்த வரவேற்பு இதில் தெரிந்தது. 2011 ஆம் ஆண்டு இதே கால் ஆண்டில் மேற்கொண்ட விற்பனையைக் காட்டிலும் 48.1% கூடுதலாக ஆப்பிள் விற்பனை செய்துள்ளது. மொத்த டேப்ளட் விற்பனையில், ஆப்பிள் டேப்ளட் விற்பனை, டிசம்பருடன் முடிந்த காலாண்டில் 43.6% ஆக இருந்தது. ஆனால், இதே காலத்தில் சென்ற ஆண்டில் 46.4% ஆகவும், 2010ல் 51.7% ஆகவும் இருந்தது. இது, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் கொண்ட டேப்ளட் விற்பனை ஊடுறுவலையே காட்டுகிறது. இதே காலத்தில், சாம்சங் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் கொண்ட 80 லட்சம் டேப்ளட்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தினைப் பிடித்தது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 263% கூடுதலாகும். டேப்ளட் விற்பனைச் சந்தையில், சாம்சங் நிறுவனத்தின் பங்கு 7.3% லிருந்து, 15.1% ஆக உயர்ந்தது. இந்த இரண்டு நிறுவனங்களை அடுத்து, அமேஸான் மற்றும் அசூஸ் நிறுவனங்கள் இடம் ப

உங்களுக்கு எத்தனை வீடியோ வெப்சைட்கள் தெரியும்?

Image
வீடியோ வெப்சைட் என்றவுடனே நமது நினைவில் எட்டிப்பார்ப்பது யூடியூப் இணையதளம் மட்டுமே! அனால் பல்வேறு நிறுவனங்கள் வீடியோ வெப்சைட்கள் தொடங்கியுள்ளன. நாங்கள் இங்கே 10 சிறந்த வீடியோ வெப்சைட்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.  இவையனைத்தும் மேலைநாடுகளில் முதன்மையானதாகவே கருதப்படுகிறது. நீங்கள் யூடியூப் மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால் பின்வரும் வீடியோ வெப்சைட்களையும் பாருங்கள். 1. YouTube  Alexa Rank -3. ================ 2. Netflix Alexa Rank -100 ================ 3. Hulu Alexa Rank -171 ================ 4. DailyMotion Alexa Rank - 101 =============== 5. MetaCafe   6. Myspace Video   7. Yahoo Screen   8. Vimeo   9. Break   10.Tv.com

உயரும் ஆண்ட்ராய்ட், விழும் விண்டோஸ்

Image
ஸ்மார்ட் போன்களில், அதிக எண்ணிக்கை யில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் உயர்ந்துள்ளது. விண்டோஸ் தன் நிலையில் இருந்து சரிந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டினைக் கணக்கிட்ட காம் டாட் ஸ்கோர் நிறுவனம் இதனைக் கண்டறிந் துள்ளது. ஸ்மார்ட் போன்களில் 53.4% போன்கள், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றன. இதனை அடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின், ஐ.ஓ.எஸ். சிஸ்டம், 36.3% கொண்டுள்ளது. பிளாக் பெரி மூன்றாவது இடத்தையும், விண்டோஸ் போன் நான்காவது இடத்தையும் கொண்டுள்ளன. விண்டோஸ், முன்பு இருந்த பங்கில், 0.7 % குறைந்து, 2.9 % மட்டுமே கொண்டுள்ளது. இது எதனால் ஏற்பட்டது? விண்டோஸ் போன் 8, சர்பேஸ் சாதனங்கள் என மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்த போது, விண்டோஸ் போன் சிஸ்டம், ஸ்மார்ட் போன்களில் அதிக அளவில் இடம் பிடிக்கும் எனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்பிற்கு உரம் சேர்க்கும் வகையில் நோக்கியாவின் லூமியா வரிசை போன்கள் விண்டோஸ் போன் சிஸ்டத்துடன் வெளிவந்தன. ஆனால் அது நடக்கவில்லை. இந்த மந்த நிலைக்குக் காரணம் கூகுள் தான். விண்டோஸ் போன் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், அப்ளிகேஷன்

வெளியானது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 5

Image
வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த புதிய ஐபோன் சில வாரங்களுக்கு முன் வெளியானது. முற்றிலுமாக அதிக மாற்றங்கள் எதுவுமின்றி, ஒரு சில நகாசு வேலைகளுடனும் வசதி களுடன் இந்த ஐபோன் 5 வெளியாகியுள்ளது.  இந்தியாவில் இதன் அதிக பட்ச விலை ரூ.59.500 என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு வந்த ஐபோன்களைக் காட்டிலும் இதன் தடிமன் மேலும் குறைவாக (7.6 மிமீ) உள்ளது. எடை 112 கிராம். இதன் டிஸ்பிளே திரையும் சற்றே கூடுதலாக 4 அங்குல அகலத்தில் உள்ளது.  ரெடினா டிஸ்பிளே 640 x 1136 பிக்ஸெல்களுடன் உள்ளது. oleophobic என்று அழைக்கப்படுகின்ற பூச்சு உள்ளதால், கைரேகைகள் இதில் படியாது. மொத்தத்தில், இது ஐபோன் 4 மற்றும் 4 எஸ் போலத்தான் தோற்றமளிக்கிறது. ஆப்பிள் நிறுவனத்திற் குரிய தோற்றம் மற்றும் வடிவமைப்பு சற்றும் மாறாமல் உள்ளது. இதிலும் நானோ சிம் எனப்படும் மினி சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே தங்களிடம் உள்ள வழக்கமான சிம்மினை, கூடுமானவரை அதனை வழங்கிய நிறுவனத் திடம் கொடுத்து, சிறிய சிம்மாக மாற்றிப் பெறுவது நல்லது.  ரூ.50 முதல் ரூ.100 வரை பெற்றுக் கொண்டு இதனை மாற்றித் தருகிறார்கள். ஐபோன் 5ல், ஆப்ப

128 GB யுடன் புதிய ஐபேட்

    ஆப்பிள் சென்ற வாரம் தன் ஐபேட் வரிசையில், புதியதாக ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்டோரேஜ் திறன் 128 ஜிபி. இதில் ரெடினோ டிஸ்பிளே உள்ளது.  ஏற்கனவே ஐபேட் 4 மாடலில், 16, 32, 64 ஜிபி கொள்ளளவு திறனுடன் வடிவமைக்கப்பட்டவை இருந்தன. இப்போது 128 ஜிபியுடன் வந்துள்ளது. தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் IOS வெளியான மறுநாள், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது வரை 12 கோடி ஐபேட் சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. மக்கள் இதனை மிகவும் நேசிக்கத் தொடங்கி விட்டனர். கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், அவர்கள் ஐபேட் சாதனத்தையே வேலை பார்க்கவும், பொழுது போக்கவும் பயன்படுத்துகின்றனர்.  இதில் பயன்படுத்தவென 3லட்சம் அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன என்று ஆப்பிள் நிறுவன துணைத் தலைவர் ஷில்லர் கூறியுள்ளார். பிப்ரவரி 5 முதல் வர்த்தக ரீதியாக உலகெங்கும் இது கிடைக்கும். வைபி மட்டும் உள்ள ஐபேட் 799 டாலர்; சிம் வசதி கொண்டது 929 டாலர்.  

ஜிமெயிலில் சேமிப்புக் கிடங்கு

Image
மற்ற இமெயில் புரோகிராம் களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும் காப்பகம் ஆகும்.  இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது.  தனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.   ஜிமெயிலின் ஒரு சிறந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் (கொடவுண், கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான். ஜிமெயிலைப் பயன் படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும்.  இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது; என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம். விவரங்களுக்கு மேலே படியுங்கள். இந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம். இதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்துவிடுகிறது.  அப்புறம் என்ன செய்கிறது? ஏன் எடுக்கிறது? இது உங்

அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டு விட்டதா என்று Track செய்வது எப்படி?

Image
தற்போது நம் வேலைகளுக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது ஒரு சிலர் அதை ஓபன் செய்து பார்த்துவிட்டு பதில் அனுப்பாமல் இருக்கலாம்,அல்லது பதில் அனுப்ப தாமதம் செய்யலாம். நாம் கேட்டால் மின்னஞ்சலை ஓபன் செய்யவே இல்லையே என்று சொல்லலாம். இவ்வாறு பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்க நாம் அனுப்பிய ஈமெயில்களை அவர்களை ஓபன் செய்தார்களா இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் வழி ஒன்றை இன்று பார்ப்போம். இதை செய்ய Right Inbox என்ற Application நமக்கு உதவி செய்கிறது. Google Chrome, Firefox, Safari பயனர்கள் இதை பயன்படுத்தலாம். இந்த வசதி தற்போது ஜிமெயில் பயனர்களுக்கு மட்டுமே. 1. முதலில் Right Inbox தளத்திற்கு சென்று "Install Now" என்பதை கிளிக் செய்யுங்கள். 2. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் ப்ரௌசெர்க்கு ஏற்றார் போல நீங்கள் அதை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். 3.இப்போது உங்கள் Browser - இல் Extension ஆக இது Add ஆகி விடும். ஒரு முறை உங்கள் Browser-ஐ close செய்து ஓபன் செய்யுங்கள். அல்லது ஜிமெயிலை Refresh செய்யுங்கள். 4. இப்போது உங்கள் ஜிமெயிலில் "Right Inbox is Ready" என்று வருவதை Continue கொடுங்கள். 5. அ

விண்டோஸ் 8ல் யு.இ.எப்.ஐ. (UEFI)

Image
UEFI என்பதனை United Extensible Firmware Interface என விரிக்கலாம். கம்ப்யூட்டர் ஒன்றின் இயக்கத் தொடக்க நிலைகளில் ஒன்று என இதனைக் கூறலாம்.  பூட் அல்லது பூட்டிங் என்று சொல்லப்படுகிற, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் நிலை என்பது, கம்ப்யூட்டர் இயங்குவதற்கென வரிசையாக மேற்கொள்ளப்படுகிற செயல்பாடுகளாகும். பவர் பட்டன் அழுத்தி, கம்ப்யூட்டரை இயக்கிவிட்டு நாம் அதன் முன் அமர்ந்து கொள்கிறோம்.  ஸ்டார்ட் ஸ்கிரீன் வரும் முன், கம்ப்யூட்டரின் பூட் இயக்கம் நமக்குப் பல திரைகளைக் காட்டுகிறது. இதில் பல தொழில் நுட்ப தகவல்கள் காட்டப்படுகின்றன. இவற்றில் பல நமக்குப் புரியாத, பெரும்பாலான நேரங்களில் தேவைப்படாத தகவல்களாகவே இருக்கின்றன.  இதற்குச் சிறிது நேரத்திற்குப் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் கம்ப்யூட்டரில் லோட் ஆவதைக் காணலாம். இதனை சில பாக்ஸ் மூலமாகவோ, அல்லது வேறு ஏதேனும் எல்.இ.டி. விளக்குகள், மூலம் தெரிந்து கொள்ளலாம். இறுதியாக லாக் இன் திரை அல்லது ஸ்டார்ட் திரை நமக்குக் காட்டப்படும். இதுதான் கம்ப்யூட்டர் பூட்டிங் செயல்பாடாகும். பவர் பட்டன் இயக்கி, ஆப்பரேட்டிங் சிஸ்டம் லோட் ஆகி

XMedia Recode - வீடியோ கன்வெர்டர் மென்பொருள் 3.1.4.5

Image
XMedia Recode மென்பொருளானது அறியப்பட்ட அனைத்து ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்களை மாற்ற முடியும்.3GP, 3GPP, 3GPP2, AAC, AC3, AMR, ASF, AVI, AVISynth, DVD, FLAC, FLV, H.261, H.263, H.264, M4A , m1v, M2V, M4V, Matroska (MKV), MMF, MPEG-1, MPEG-2, MPEG-4, TS, TRP, MP2, MP3, MP4, MP4V, MOV, OGG, PSP, (S) VCD, SWF , VOB, WAV, WMA மற்றும் WMV. XMedia Recode பாதுகாப்பான டிவிடிகளாக மாற்ற முடியும். XMedia Recode மாற்றம்: 3GP to AVI, 3GP to FLV, AC3 to MP3, AC3 to WAV, ASF to 3GP, ASF to FLV, ASF to MP4, AVI to FLV, AVI to 3GP, FLAC to MP3, FLAC to WMA, FLV into 3GP, FLV to Mp3, DVD to 3GP, DVD to AC3, DVD to AVI, DVD to MP3, DVD to MP4, DVD to MOV, DVD to SVCD, DVD to VCD, DVD to WMV, OGG to MP3, OGG to WMA, MPEG to AVI, MP2 to MP3, MP4 to FLV, MP4 to AVI, M4P to MP3, MOV to 3GP, MOV to AVI, MOV to FLV, WMA to MP3, WMV to FLV, WAV to MP3 DivX கோடெக் பயன்படுத்த, நீங்கள் DivX கோடெக் நிறுவப்பட வேண்டும். அம்சங்கள்: வீடியோ எடிட்டிங் வீடியோ பகுதிகள் வெட்டி ஒட்டலாம் தாராளமாக தேர்ந்தெடுக

உங்களிடம் இருக்கும் கெட்டப்பழக்கங்களை நிரந்தரமாக நீக்க உதவும் தளம்

Image
மனிதன் ஏதாவது கெட்டப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து வெளியே வருவது என்பது மிக மிக கடினமான காரியம் என்று நினைத்திருக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்படி 21 நாட்களில் மனிதன் தன்னிடம் இருக்கும் அனைத்து குறைகளையும் ஒவ்வொன்றாக நீக்க உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. 21 நாட்களில் கெட்டப்பழக்கத்தை நீக்கலாம், குடிப்பழக்கம் மட்டும் கெட்டப்பழக்கம் என்று சொல்வதைவிட பொய் சொல்வதும் கெட்டப்பழக்கம் தான் இது போன்ற அனைத்து கெட்டப்பழக்கத்தையும் 21 நாட்களில் நீக்க நமக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு தளம் உள்ளது. இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம். இணையதள முகவரி இத்தளத்திற்கு சென்று நாம் வலது பக்கம் மேல் இருக்கும் Signup என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு கணக்கு இலவசமாக உருவாக்கி கொள்ளவேண்டும், அடுத்து முழு நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் சென்று இன்று நான் சிகரெட் பிடிக்கவில்லை , அல்லது இன்று நான் மது அருந்தவில்லை என்று ஒவ்வொரு நாளும் நாம் கெட்டப்பழக்கத்தைவிட்டு நீக்கியதை இங்கு தெரியப்படுத்தாலாம், 21 நாட்களில் நாம் கெட்டப்பழக்கங்களை விட வேண்டும் என்

தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்கள், அறிமுகங்ககள்

Image
ஆண்ட்ராய்டில் பரவும் மால்வேர் : ஆண்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள தேவையில்லாத மெமரியை அழித்து, அதிக இடவசதி கொடுத்து, மொபைலை வேகமாக இயங்கவைக்கும் அல்லது இயங்க வைப்பதாக சொல்லும் அப்ளிகேசன்கள் கிளீனர் அப்ளிகேசன்கள் (Cleaner Apps) என்று அழைக்கப்படும். தற்போது இந்த பெயரில் அதிகமான அப்ளிகேசன்கள் மால்வேர்களை பரப்பிவருகிறது. இது மற்ற மால்வேர்களைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பதாக பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த மால்வேர் நேரடியாக நம் மொபைலை தாக்காது. மாறாக மால்வேர் உள்ள இந்த மொபைலை கணினியில் இணைக்கும் போது அந்த கணினியை தாக்கும் சக்திக் கொண்டது. இந்த மால்வேர் நம்முடைய கணினியில் உள்ள மைக்ரோபோனை பயன்படுத்தி நமக்கு தெரியாமலேயே ரெகார்ட் செய்யும் திறமைக் கொண்டது. இந்த அப்ளிகேசன்கள் கூகுள் ப்ளே தளத்திலும் இருப்பது தான் கவலைக்குரிய செய்தியாகும். மேலும் பயனர்கள் இந்த அப்ளிகேசன்களுக்கு அதிக டவுன்லோட் மற்றும் மதிப்பீடுகளைக் கொடுக்கின்றனர். அதைக் கண்டு ஏமாற வேண்டாம். கிளீனர் அப்ளிகேசன்களை பயன்படுத்தாமல் இருப்பதே நன்று. ப்ளாக்பெர்ரி Z10 & Q10: ப்ளாக்பெர்ரி மொபைல் நிறுவனம் புதிய இயங்குதளமா