எக்ஸ்சல் பார்முலா ஒரு பார்வை..

அடிக்கோடு : எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. 

இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline என்னும் பாக்ஸ் கிடைக்கும். 

இதில் காட்டப்பட்டுள்ள பல்வேறு அடிக்கோடுகளிலிருந்து, நீங்கள் விரும்பும் அடிக்கோட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். Underline Type Meaning None என்று சென்றால், செல் ஒன்றில் ஏற்கனவே உள்ள கோடுகள் நீக்கப்படும். Single என்பதனைத் தேர்ந்தெடுத்தால், ஒரு வரிக்கோடு அடிக்கோடாக அமைக்கப்படும். Double என்பது இரண்டு கோடுகளைத் தரும். Single Accounting Same என்பது, கோட்டினைச் சற்றுக் கீழாக அமைக்கும். Double Accounting Same இரட்டைக் கோடுகளைச் சற்றுக் கீழாக இறக்கி அமைக்கும்.

COMBIN பார்முலா : எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். தேவை ஏற்படும் போது நாம் இதனைத் தேடி அறிந்து கொள்வோம். இதனை இங்கு காணலாம்.

இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக் காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. 10 எண்கள் உள்ளன.

(0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும்? நாம் பேப்பர் பேனா எடுத்துப் போட்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.

இந்த பங்சன் செயல்பட பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா. இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும். sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : = =COMBIN(26+10,4) எத்தனை இணைப்பு இதில் உருவாகும் என்று அறிய பலர் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா? 58,905 இணைப்பு கேரக்டர்களை உருவாக்கலாம்.

ஒரே டேட்டா - பல செல்கள் : எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம்.

எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க