Posts

Showing posts with the label New Technology

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்..

Image
தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணம் செலுத்துவதற்கு புதியதாக ஆன்ட்ராய்ட் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்'ல் மின் கட்டணம் செலுத்துதல், மின் உபயோகத்தை தெரிந்துகொள்ளுதல், பயன்படுத்தபட்ட மின் அளவை உள்ளிட்டு மின் கட்டணத்தை தெரிந்துகொள்ளுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.. மிக எளிமையான கட்டமைப்பினைப் பெற்றுள்ளது. அதனால் பயன்படுத்துவது எளிது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் Android App Download செய்ய..

வாட்சப்பில் வந்துள்ள புதிய ஸ்டேடஸ் வசதியை எவ்வாறு பயன்படுத்துவது..??

Image
உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.  இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  எப்படி இந்த வசதியைப் பெறுவது?  இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.  எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.  உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால்...

இனி இன்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்..!!

Image
எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில், கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் தங்கு தட...

ஹேக்கர்களின் புதிய இலக்குகள் ஒரு பார்வை..!!

Image
கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.   அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் ...

4ஜி அதிவேக சேவை - இந்தியாவில் போட்டியிடும் நிறுவனங்கள்

Image
அதிவேகமாக இணையத்தைத் தரும் 4ஜி தொழில் நுட்ப சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் இந்த சேவையைத் தரும் முன்னர், முந்திக் கொண்டு தர, ஏர்டெல் முயற்சித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டேட்டா சேவை தற்போது 20 நகரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் இது 44 நகரங்களில் வழங்கப்பட உள்ளது. மற்ற சில நகரங்களில், சோதனை முயற்சியில் உள்ளது. இப்போது இயக்கத்தில் உள்ள நகரங்களில் உள்ள பயனாளர்கள் தரும் பின்னூட்டத்தின் அடிப்படையில், மாற்றங்களை ஏற்படுத்தி, மற்ற நகரங்களில் இந்த சேவையை வழங்க இருக்கிறது. இந்த அதிவேக வயர்லெஸ் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம், தற்போது 3ஜி சேவைக்கு வாங்கப்படுவதைப் போலவே இருக்கும். 1 ஜி.பி.டேட்டா ரூ.250, 2 ஜி.பி. டேட்டா ரூ.450 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்றி தெரிந்துகொள்ளலாம்  

விண்டோஸ் 10 க்கு மாறும் முன் யோசிக்க வேண்டியவை

Image
2015 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தொழில் நுட்ப சாதனமாக இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம்,  அனைத்து தனிநபர் பயன்பாட்டிற்கும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினை, காசு கொடுத்து வாங்கியிருந்தாலும், திருட்டுத்தனமாக நகலெடுத்துப் பதிந்து இயக்கி வந்தாலும், அவர்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் மேலும் ஒரு தெளிவினை மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஒரே முயற்சியில் தங்களுடைய கம்ப்யூட்டர்களில் அப்கிரேட் செய்திட, விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் அதன் எஸ்.பி. பேக்கேஜ் 1 மற்றும் விண்டோஸ் 8.1 கொண்டிருக்க வேண்டும். இவர்கள் ஒரே முயற்சியில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் இறக்கிப் பதிவு செய்து கொள்ளலாம். அப்படியானால், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை அப்படியே முதல் முறை பெற்ற நிலையில் இன்னும் வைத்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்திட வேண்டும்? என்ற கேள்வி எழலாம். இவர்கள் முதலில், விண்டோஸ் 7 சிஸ்டத்தை...

மைக்ரோசாப்ட்டின் புத்தம் புது Foldable கீ போர்ட்..

Image
தன்னுடைய லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின் அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும் விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம். இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10 சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப் பொறுத்து வேறுபடும்.  ஏறத்தாழ 20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதி...

உலக நெடுஞ்சாலைகளை கலக்க வரும் பகுதிநேர தானியங்கி லாரிகள் வீடியோ இணைப்பு

Image
சென்னையில் இருந்து ஒரு லோடு மஞ்சளை லாரியில் கொண்டு சென்று கொல்கத்தாவில் சேர்ப்பிக்க வேண்டுமானால் சுமார் 1700 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக சென்றடைய வேண்டும். மணிக்கு சராசரியாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சென்றாலும் கூட குறைந்தபட்சம் 30 மணிநேரம் ஒரு டிரைவர் லாரியை ஓட்டிச்செல்ல வேண்டும். 500 கிலோ மீட்டருக்கு 2 மணி நேரம் ஓய்வு எடுத்து சென்றாலும் ஒன்றரை நாள் பயணத்துக்கு பின்னரே கொல்கத்தா நகரை சென்றடைய முடியும். கொல்கத்தாவை சென்று சேர்ந்த பின்னர் பயண நேரத்துக்கு அதிகப்படியான நேரம் ஓய்வு எடுத்த பின்னரே அடுத்த சவாரிக்கு அந்த டிரைவர் தயாராக முடியும்.  இப்படிப்பட்ட தொலைதூர பயணத்தை நெடுஞ்சாலை பாதையில் மேற்கொள்ளும் லாரி டிரைவர்களுக்கு வரப்பிரசாதமாக கனரக வாகன உற்பத்தியில் உலகின் முன்னோடி நிறுவனமான ஜெர்மனியின் ‘பென்ஸ்’ மோட்டார்ஸ், பகுதிநேரம் தானியங்கி முறையில் (ஆட்டோ பைலட்) இயங்கும் ‘ஃபியூச்சர் டெக்’ லாரிகளை தயாரித்து வருகின்றது.  இந்த லாரிகள் 4 வழிப்பாதை மற்றும் 6 வழிப்பாதை கொண்ட நெடுஞ்சாலைகளில் ஓடும் போது, டிரைவர் ஓய்வெடுக்க விரும்பினால்...