Posts

Showing posts from December, 2013

கூகுள் ட்ரைவ் ஒரு சில டிப்ஸ்

Image
கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும்.  இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 1. இணைய இணைப்பு இல்லாமல்:  கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம்.  இதற்கான ஒரே தேவை, நீங்கள் கூகுள் தரும் குரோம் பிரவுசரைப் பயன்படுத்த வேண்டும்.  குரோம் பிரவுசரில் முதலில் கூகுள் ட்ரைவ் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ய இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும்  .  அடுத்து கூகிள் டிரைவ்   என்ற இணைய தளம் செல்லவும். இதில் இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், "More” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். அடுத்து "Off

நோக்கியா ஆஷா 210 ஒரு பார்வை..!

Image
தன்னுடைய ஆஷா வரிசை மொபைல் போன்களால், பலரைச் சென்றடைந்திருக்கும் நோக்கியா நிறுவனம், அண்மையில் ஆஷா 210 என்ற பெயரில், இரண்டு சிம் பயன்பாடு உள்ள மொபைல் போனை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.  இதில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இது ஒரு 2ஜி போன். இதன் பரிமாணம் 111.5 x 60 x 11.8 மிமீ. எடை 99.5 கிராம்.  பார் டைப் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போனில், 2.4 அங்குல அகலத்தில் திரை உள்ளது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், 64 எம்.பி. ராம் மெமரி, 32 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி தரப்பட்டுள்ளது.  நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் ஆகிய தொழில் நுட்ப இயக்கங்கள் கிடைக்கின்றன.  2 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. வீடியோ இயக்கம் கிடைக்கிறது.  பதியும் வசதி கொண்ட எப்.எம். ஸ்டீரியோ ரேடியோ தரப்பட்டுள்ளது. MP3/WAV/ WMA/AAC,MP4/ ஆகிய ஆடியோ மற்றும் வீடியோ பார்மட் பைல்களை இதில் கையாளலாம்.  ஆர்கனைசர், பிரிடிக்டிவ் டெக்ஸ்ட் அமைப்பு ஆகிய வசதிகள் உள்ளன. இதில் தரப்பட்டுள்ள லித்தியம் அயன் ப

விண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்களை காண

Image
விண்டோஸ் சிஸ்டம் தொடக்கம் முதல், சில பைல்களை மறைத்தே வைத்திருக்கும்.    இவை பெரும்பாலும் சிஸ்டம் பைல்களாகவே இருக்கும். தேவை இல்லா நிலையில், இவற்றை அணுகி, பைல்களைத் திறந்து, சிஸ்டம் இயங்கா நிலையை உருவாக்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில், இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.  இவற்றை நாம் விரும்பினால், பெற்று, பைல்களைக் கையாளலாம்.  விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இவை எளிதாகப் பெறும் வகையில் வைக்கப் படவில்லை.  மறைக்கப்படும் பைல்களை எப்படிப் பெறுவது எனப் பார்க்கலாம். 1. முதலில் திறந்து இயக்கிக் கொண்டி ருக்கும் அனைத்து புரோகிராம்களையும் மூடவும். 2. இடது மூலையில் கீழாக ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் திறக்கவும்.  3. கண்ட்ரோல் பேனல் தோற்றத்தில் View by: Small Icons என்பதில் கிளிக் செய்து மாற்றவும்.  4. கண்ட்ரோல் பேனல் பட்டியலில், போல்டர் ஆப்ஷன்ஸ் ("Folder Options”) என்பதனை டபுள் கிளிக் செய்திடவும்.  5. பின்னர் வியூ ("View”) டேப் கிளிக் செய்து, "Show hidden files, folders and drives” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியே

2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்

Image
சென்ற 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம். அவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம். "தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் புதுமையான வழிகளில் பரவிய மால்வேர் புரோகிராம்கள், மேக் கம்ப்யூட்டரிலும் பரவிய அபாய புரோகிராம்கள் எனச் சென்ற ஆண்டு வைரஸ் தாக்குதல்களைப் பிரிக்கலாம். முன்பெல்லாம், எஸ்.எம்.எஸ். மூலமும், உங்களுக்கு ஸ்பானிஷ் லாட்டரியில் பரிசு விழுந்தது எனக் கூறும் ஸ்பேம் மெயில்களும், வைரஸ்களில் நம்மை விழ வைக்கும் தூண்டில்களாக இருந்து வந்தன. ஆனால், 2013 ஆம் ஆண்டில், இவற்றின் வழிகளும், தந்த அபாயங்களும் முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன. இந்த வழிகளை நாம் அறிந்து வைத்துக் கொள்வது நாம் எச்சரிக்கையாக இருக்க உதவும். மால்வேர் பைட்ஸ் என்னும் அமைப்பு, தன் வலைமனையில் இதனை ஓர் அறிக்கையாகவே தந்துள்ளது. நம் வாழ்க்கை எப்படியாவது, ஏதேனும் ஒரு வகையில

பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61

Image
பட்ஜெட் விலையில், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க விரும்புபவர்களுக்கென, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் போல்ட் ஏ 61 (Micromax Bolt A61) என்ற பெயரில், மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,999 மட்டுமே. மைக்ரோமேக்ஸ் தன் போல்ட் வரிசையில், அண்மைக் காலத்தில் வெளியிட்ட போன் இது. இதில் 4 அங்குல அகலத்தில் திரை, ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவை கிடைக்கின்றன. இதில் 2 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்றும், 0.3 மெகா பிக்ஸெல்கேமரா ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளன. 3ஜி நெட்வொர்க் இணைப்புடன், இரண்டு சிம் இயக்கமும் தரப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், மைக்ரோ யு.எஸ்.பி. ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் ராம் மெமரி 256 எம்.பி., ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. கிடைக்கிறது. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 16 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம். இதில் அமைந்துள்ள லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன், 3.55 மணி நேரம் தொடர்ந்து பேசும் திறனை அளிக்கிறது. 160 மணி நேரம் வரை இதன் மின்சக்தி