சலுகை விலையில் சாம்சங் கேலக்ஸி கோர் 2 மற்றும் S DUOS 3 ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கோர் 2 ரூ.8,007 விலைக்கு குறைத்துவிட்டது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், இந்தியாவின் சாம்சங்
அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோரில் குறைக்கப்பட்ட புதிய விலையில் கிடைக்கிறது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன் ரூ.11,900 விலையில் ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.15,690 விலையில் தொடங்கப்பட்ட கேலக்ஸி கோர் ஸ்மார்ட்போனின் வழித்தோன்றல் ஆகும்.
சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன், டூயல் சிம் ஆதரிக்கிறது. நிறுவனத்தின் TouchWiz Essence UI உடன் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ரேம் 768MB உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போனில் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 0.3-மெகாபிக்சல் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள், Wi-Fi b/g/n, ப்ளூடூத் 4.0, மைக்ரோ-USB மற்றும் 3ஜி ஆகியவை அடங்கும். சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. கைபேசியில் மெஷர்ஸ் 130.3x68x9.8mm மற்றும் 138 கிராம் எடையுடையது.
இந்த மாத முற்பகுதியில், இந்தியாவில் பிரபலமான கேலக்ஸி S Duos 2 ஸ்மார்ட்போனின் வழித்தோன்றலான Galaxy S Duos 3 ஸ்மார்ட்போன் ரூ. 8,150 விலையில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனும் சாம்சங் இந்தியாவின் ஸ்டோரில் கிடைக்கிறது.
கேலக்ஸி S DUOS 3: சாம்சங் கேலக்ஸி S DUOS 3 ஸ்மார்ட்போன், நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட TouchWiz Essence UX உடன் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இதில் 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே மற்றும் டூயல் சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்ஃபோனில் ரேம் 512MB உடன் இணைந்து 1GHz டியூவல் கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
கேலக்ஸி கோர் 2 வின் வடிவமைப்பு
கேலக்ஸி S DUOS 3-ன் வடிவமைப்பு
சாம்சங் கேலக்ஸி கோர் 2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
- டூயல் சிம்,
- 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே,
- ரேம் 768MB,
- 1.2GHz குவாட் கோர் ப்ராசசர்,
- எல்இடி ஃபிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா,
- 0.3-மெகாபிக்சல் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா,
- மைக்ரோSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
- Wi-Fi b/g/n,
- ப்ளூடூத் 4.0,
- மைக்ரோ-USB,
- 3ஜி,
- ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
- 2000mAh பேட்டரி,
- 138 கிராம் எடை.
சாம்சங் கேலக்ஸி S DUOS 3 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
- டூயல் சிம்,
- 480x800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.0 இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே,
- ரேம் 512MB,
- 1.2GHz டூயல் கோர் ப்ராசசர்,
- 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
- 0.3-மெகாபிக்சல் VGA முன் எதிர்கொள்ளும் கேமரா,
- மைக்ரோSD அட்டை வழியாக 64GB வரை விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு,
- Wi-Fi b/g/n,
- ப்ளூடூத் 4.0,
- மைக்ரோ-USB,
- 3ஜி,
- ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,
- 1500mAh பேட்டரி,
- 124 கிராம் எடை.
Comments