ஒரு PDF பைலில் உள்ள கட்டுபாடுகளை நீக்க..
ஒரு PDF பைலில் உள்ள கட்டுபாடுகளை நீக்க ஒரு அருமையான இலவச சேவையினை அளிக்கும் ஒரு இணையதளம் உள்ளது.
பொதுவாக ஒரு சில PDF பைல் ஆனது பல்வேறு கட்டுபாடுகளை கொண்டு காணப்படும்., அதாவது, கிழேயுள்ள படத்தை பாருங்களேன்..
இதில் Allowed எனில் அந்த கட்டுப்பாடு விலக்களிக்கப்பட்டுள்ளது., Not Allowed எனில் அந்த கட்டுப்பாடு அந்த PDF பைலில் உள்ளது எனவும் அறியலாம்.
இது போல் Printing என்பது Not Allowed-ல் இருந்தால் அந்த PDF பைலை நம்மால் பிரிண்ட் எடுக்க முடியாது.
அந்த சமயத்தில் இந்த அணைத்து கட்டுபாடுகளையும் ஓர் PDF பைலில் இருந்து விளக்க ஒரு இணையதளம் இலவச சேவையினை தருகிறது.
இந்த தளத்திற்கு சென்று நாம் PDF பைலை Unlock செய்யலாம். மூன்று வெவ்வேறு கிழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து பதிவேற்றம் (Upload) செய்து கொள்ள முடியும்.
1.My Computer
2. Dropbox
3. Google Drive

நமது unlock செய்ய வேண்டிய PDF பைலானது நமது கணினியில் உள்ள நிலையில் நாம் My Computer என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
Unlock செய்ய விரும்பும் PDF பைலை தேர்வு செய்து Open என்ற பட்டனை கிளிக் சியா வேண்டும்.
தேர்வு செய்த PDF பைலின் பெயரானது முதலில் தோன்றும், சரிபார்த்து விட்டு UNLOCK என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
தரவேற்றம் செய்யப்பட்டு unlock செய்யப்படும்.
Unlock செய்து முடித்த பின்னர் தானாக தரவிறக்கம் (Download) செய்யபடும்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறன், உங்களுக்கு பிடித்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.
நன்றி
Comments