Posts

Showing posts from November, 2015

இனி இன்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்..!!

Image
எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில், கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன. ஆனால் தங்கு தடையற்ற இணைய இணைப்பு, அதன் வேகம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ‘ஆஃப்லைன் ஃபர்ஸ்ட் மொபைல் டெவெலப்மெண்ட்’ உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூகுள் தன் மேப்ஸ் சேவையை, மொபைல் இணையத்துடன் இணைக்கப்படாமல் இருக்கும்போதும் பயன்படுத்த ஏதுவாக மாறுதல்கள் செய்துள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கும், கூடிய விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கும் இச்சேவை கிடைக்கும். இதுகுறித்து கூகுள் மேப்ஸ் டைரக்டர் சுரேன் ருஹேலா கூறுகையில், “டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியை தற்போது ஆஃப்லைனிலும் கிடைக்குமாறு செய்துள்ளோம். இதனால் வீட்டிலிருந்து கிளம்பும்போதே குறிப்பிட்ட இடத்தினுடைய மேப்ஸ் டேட்டாவை டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதோடு அந்த இடத்திலுள்ள முக்கியமான இடங்கள், நேவிகேஷன் டைரக்ஷன்கள் போன்றவையும் டவுன்லோட் ஆகிவிடும். பின்னர் ஆஃப்லைனில் மேப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன்மூலம் இந்தியர்கள் வெகுவாகப் பயனடைவார்கள்

ஆன்ட்ராய்ட் மொபைலை ட்யூனிங் செய்வது எப்படி..??

Image
டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் சேரும் தேவையற்றவற்றை நீக்குவது போல, ஆன்ட்ராய்ட் போனிலும் அது போன்ற சுத்தப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ள இயலுமா? அப்படியானல் அவை என்ன? என்று கூறவும் என வேண்டுகோள் தந்தனர். அந்த நோக்கில் சிந்திக்கையில், தென்பட்ட சில முக்கியமான செயல்பாடுகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொண்டால், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், அதிக பட்ச பயன்களை, எந்தவிதமான சிக்கல்கள் இன்றிப் பெறலாம். இதோ அவை: இங்கு தரப்படும் டிப்ஸ் மற்றும் குறிப்புகள் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களுக்கும் பொதுவானவையாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் எந்த பதிப்பை உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வந்தாலும், இவற்றைப் பயன்படுத்தலாம். எந்த நாட்டில், இடத்தில் இவை இயக்கப்பட்டாலும், இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அது மட்டுமின்றி, எந்த நிலையில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவராக ஒரு பயனாளர் இருந்தாலும், அவர் இவற்றைப் பயன்படுத்தலாம். அதிக ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய உதவிக் குறிப்புகள் இவை இல்லை.  தேவையற்றதை நீக்குக: இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள சிறிது கூடுதலான

ஹேக்கர்களின் புதிய இலக்குகள் ஒரு பார்வை..!!

Image
கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது.   அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம

எம்.எஸ் பவர்பாயின்ட்டில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும்..!

Image
பவர்பாயின்ட்டில் நாம் தயாரிக்கும் பிரசன்டேஷன்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளும் வசதியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதையும் பவர்பாயின்ட்டில் இருந்தே நேரடியாக செய்யமுடியும் என்பதுதான் ஹைலைட். ஃபேஸ்புக்கில் பகிர… பவர்பாயின்ட் ஸ்லைடில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம். பவர்பாயின்ட் பிரசன்டேஷனில் உள்ள எல்லா ஸ்லைடுகளையும் புகைப்பட ஆல்பம்போல பகிர்ந்துகொள்ளலாம். பவர்பாயின்ட் ஸ்லைடுகளை வீடியோவாக பகிர்ந்துகொள்ளலாம். ட்விட்டரில் பகிர… பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து புகைப்படமாக பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்’ (Social Share) என்கின்ற ‘பிளக் இன்’ (Plug in) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பிளக் இன்னை டவுன்லோட் செய்துகொண்டு இன்ஸ்டால் செய்தால் அது ஏற்கெனவே நாம் இன்ஸ்டால் செய்துள்ள பவர்பாயின்ட் சாஃப்ட்வேரில் ஒரு ‘டேபாக’ (மெனுவாக) உருவாகி இணைந்துவிடும். ‘சோஷியர் ஷேர்’ - டவுன்லோட் செய்யும் முறை 1. மைக்ரோசாஃப்ட்டின் வெப்சைட்டில் இருந்து ‘சோஷியல் ஷேர