Posts

Showing posts from December, 2011

மைக்ரோசாப்டின் அடுத்து கால்பதிக்கும் சமூக வலைத்தளம்!

Image
இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக்கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதன் இடைமுகம்(User Interface) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status). Social Search: இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற

நவீன ஆடியோ தொழில்நுட்பத்துடன் வரும் புதிய ஆசஸ் லேப்டாப்!

Image
  கணினி மற்றும் நோட்புக்குகளைத் தயாரிப்பதில் ஆசஸ் நிறுவனம் தனி முத்திரையைப் பதித்திருக்கிறது. மேலும் தனக்கென்று உலகச் சந்தையில் ஒரு கெட்டியான இடத்தைத் தக்கவைத்திருக்கிறது. தற்போது ஆசஸ் நிறுவனம் ஆசஸ் ஸென்புக் யுஎக்ஸ்31இ என்ற புதிய லேப்டாப்பை அமர்க்களமாகக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய லேப்டாப் எல்லாவித சிறப்பு அம்சங்களையும் கொண்டிருக்கிறது. இந்த ஸென்புக் 64-பிட் விண்டோஸ் 7 இயங்கு தளத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இன்டல் க்யுஎஸ்67 எக்ஸ்ப்ரஸ் சிப்செட்டையும் கொண்டிருக்கிறது. இதன் டிஸ்ப்ளேயைப் பார்த்தால் அது 1600 x 900 பிக்சல்கள் கொண்டு 13.3 இன்ச் அளவுடன் வருகிறது. க்ராபிக்ஸ் வேலைகளுக்காக இந்த லேப்டாப் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 3000 இன்டக்ரேட்டட் க்ராபிக்ஸ் கார்டையும் கொண்டுள்ளது. அதுபோல் 2 இன் 1 கார்டு ரீடரும் இந்த லேப்டாப்பில் உண்டு. இந்த ஸென்புக் லேப்டாப்பின் மொத்த எடை 1.3 கிலோவாகும். இதன் மொத்த பரப்பு 32.5 x 22.3 x 0.3 செமீ ஆகும். மேலும் இந்த லேப்டாப் 2 வருட உத்திரவாதத்துடன் வருகிறது. இதன் ரேம் 4ஜிபி கொண்ட 1333 ஹெர்டஸ் டிடிஆர்3 எஸ்டிஆர்எஎம் வகைய

புதிய தொழில்நுட்பத்துடன் வரும் நோவா-7 டேப்லெட்!

Image
  அடுத்த புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட் மார்க்கெட்டை கலக்க களமிறங்க இருக்கிறது. நோவோ-7 என்ற அந்த புதிய டேப்லெட் கூகுள் ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும். இந்த டேப்லெட் இன்டக்ரேட்டட் கலிபோர்னியன் எம்ஐபிஎஸ் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த நோவா7 கூகுளின் ஆன்டி ரூபினால் சான்று பெற்றதாகும். இந்த நோவோ-7 ஏஆர்எம் ஐசிஎஸ் ஸ்லேட் அல்லாத இன்டகிரேட்டட் எம்ஐபிஎஸ் எஸ்ஒசி தொழில் நுட்பம் கொண்டு 7 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. இது எக்ஸ்பர்ஸ்ட் 1 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் செயல்திறனும் வேகமும் தாறுமாறாக இருக்கும். அதுபோல் இது மிகவும் சக்தி வாய்ந்த விவின்ட்இ ஜிசி860 ஜிபியு கொண்டுள்ளது. இந்த ஜிசி860 ஜிபியு இந்த நோவா7ல் முழுமையான் எச்டி 1080பி வீடியோவையும் அதுபோல் எச்டி வீடியோ விளையாட்டுகளையும் வழங்குகிறது. அதுபோல் 3டி வீடியோ கேமையும் இது வழங்குகிறது. இதன் எம்ஐபிஎஸ் தொழில் நுட்பம் இதற்கு அபாரமான சக்தியை வழங்குகிறது. இது ரியர் மற்றும் முகப்பு கேமராக்களைக் கொண்டிருந்தாலும் இதன் ரியர் கேமரா 2 மெகா பிக்ஸல் ஆகும். அதனால் இது சற்று

திடீரென எரியும் ஐ போன்கள்

Image
சென்ற வாரம் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகருக்குப் பறந்த விமானம் ஒன்று தரையிறங்கியவுடன், பயணி ஒருவர் வைத்திருந்த ஆப்பிள் ஐ-போன் 4 தீ ஜ்வாலையுடன் எரியத் தொடங்கியது. புகை வரும்போதே பாதுகாப்பு அலுவலர்கள் அதனைக் கண்டறிந்து நெருப்பை அணைத்தனர். முதலில் போனிலிருந்து புகை வருவதை உணர்ந்த பாதுகாப்பு அலுவலர்கள் சந்தேகப்பட்டு அதனைப் பறித்தனர். உடன் சிறிய அளவில் அதில் ஜ்வாலை வந்தவுடன் அணைத்தனர். யாருக்கும் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும், இது குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கும் மொபைல் போன் நிறுவனத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதலாக, இந்த சம்பவம் குறித்த அறிக்கை ஒன்று ஆஸ்திரேலிய அரசின் விமானப் பயணிகள் பாதுகாப்பு அமைப்பிற்கும் அனுப்பப் பட்டுள்ளது. போனில் பேட்டரி கீழாக வலது பக்கம் அமைக்கப்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விசாரணையும் ஆய்வும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதே போல இன்னொரு நிகழ்ச்சி பிரேசில் நாட்டில் நடைபெற்றுள்ளது. பாலோ மோட்டா என்பவரின் ஐ போன் திடீரென தீப்பற்றி எரிந்தது. அவரின் முகத்தில் இ

வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்

Image
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க. Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க. Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy). Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க. Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க. Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y. Ctrl+g: ஓரிடம் செல்ல. Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திட(Replace). Ctrl+i:எழுத்து / சொல்லை சாய்வாக அமைக்க . Ctrl+j: பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக, நேராக (Justify) அமைக்க. Ctrl+k: ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த. Ctrl+l: பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க. Ctrl+m: பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட. Ctrl+n: புதிய டாகுமெண்ட் உருவாக்க. Ctrl+o: டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க. Ctrl+p: டாகுமெண்ட் ஒன்றை அச்சடிக்க Ctrl+q: பத்தி அமைப்பை நீக்க. Ctrl+r: பத்தியினை வலது புறம் சீராக, நேராக அமைக்க. Ctrl+s: தானாக, டாகுமெண்ட் பதியப்பட (Auto save).

ஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய

Image
இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது. CCleaner v3.13.1600 கணினிகளில் உள்ள தேவையற்ற பைல்களை சரியாக கண்டறிந்து அழித்து கணினியை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் CCLEANER மென்பொருள் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் நிறுவனத்தினர் அடிக்கடி மென்பொருளை மேம்படுத்தி புதிய வெர்சன்களை வெளியிடுகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது புதிய பதிப்பான CCLEANER V3.13.1600 என்ற பதிப்பை வெளிட்டு உள்ளனர். மென்பொருளை டவுன்லோட் செய்ய -  CCLEANER v3.13.1600 Google Chrome 16.0 இணைய உலவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும். இந்த உலவியின் எளிமையான தோற்றமும

ஒரே நிமிடத்தில் அழகான HTML Comparison Table உருவாக்க

Image
இரண்டு பொருளுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை காட்டுவதற்கும், அல்லது இரண்டு இடத்திற்கு உள்ள வித்தியாசங்கள் காட்டவும் நமக்கு பயன்படுவது இந்த Comparison Table ஆகும். அழகான Comparison Table உருவாக்க இதுவரை போட்டோஷாப் மென்பொருளையே பெரும்பாலும் உபயோகிக்க படுகிறது. ஆனால் இன்று நாம் ஒரு சுலபமான முறையில் comparison table உருவாக்குவது எப்படி பார்ப்போம். இதற்க்கு கோடிங் எழுத வேண்டிய அவசியமில்லை ஒரே நிமிடத்தில் அதை உருவாக்கி விடலாம். எந்த தொழிநுட்ப அறிவும் பெற்று இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழே உள்ள Comparison Table பாருங்கள். Comparison Table உருவாக்குவது எப்படி? முதலில் இந்த Compare Ninja  தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். பிறகு Home பகுதிக்கு சென்று START NOW என்ற பட்டனை அழுத்தவும்.  முதலில் உங்கள் டேபிளின் தலைப்பை கொடுத்து மற்ற விவரங்களை கொடுக்கவும். Next பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் Table தோற்றத்தை தேர்வு செய்து கொள்ளவும். தேர்வு செய்த பின்னர் Next பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு Table பக்கம் ஓப

விண்டோஸ் 7 வெற்றி

Image
மிக வேகமாக விற்பனை செய்யப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ற பெயரினை விண்டோஸ் 7 பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டு 9 மாதங்களில், 17 கோடியே 50 லட்சம் பேர் இதனை வாங்கியுள்ளனர். இந்த வேகமான விற்பனைக்குக் காரணம் என்ன? இதற்கு முன்னர் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல பதிப்புகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஏன் விண்டோஸ் 7 மட்டும் கூடுதலாக லாபம் ஈட்டித் தரும் வகையில் விற்பனை ஆகி உள்ளது என்ற கேள்வி பலரிடமிருந்து வந்துள்ளது. இதற்குக் காரணம் மிக வெளிப்படையான ஒன்றுதான். இந்த சிஸ்டத்தில் தான் இதற்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் இல்லாத பல அம்சங்கள் உள்ளன. பழைய செயல்பாடுகள் முழுமையாக மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ளன. புதிய செயல்பாடுகள் அதிகமான எண்ணிக்கை யில் இணைக்கப்பட்டுள்ளன. எனவே தான் பெரும்பான்மையானவர்கள் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியுள்ளனர். விண்டோஸ் 7 சிஸ்டம், சென்ற அக்டோபர் 22ல் வெளியானது. ஒன்பது மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு மாதத்திலேயே இதன் விற்பனை 15 கோடியைத் தாண்டியது. மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளபடி, ஒவ்வொரு நொடியிலு

2011ல் வெற்றி பெற்ற தொழில் நுட்பங்கள்

Image
சென்ற 2011 ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில் நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. ஆனால் சில நிறுவனங்கள் கொண்டு வந்த தொழில் நுட்பத்திற்கு சிறந்த வகையில் வெற்றியும், மக்களிடையே அந்த சாதனங்களுக்கு வரவேற்பும் இருந்தன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (Siri): ஆப்பிள் நிறுவனம் வழங்கிய ஐ போன் 4 எஸ் மக்கள் எதிர்பார்த்த பல மாற்றங்களுடன் வரவேற்பைப் பெற்றது. வேகமாக இயங்கும் ப்ராசசர், சிறந்த அம்சங்களுடன் கூடிய கேமரா ஆகியவை இருந்தன. ஆனால் ஒரு பெரிய மாற்றத்தைத் தந்து கொண்டிருக்கும் சிரி என்னும் தொழில் நுட்பத்தினை ஆப்பிள் இந்த போனில் கொடுத்தது. நம் ஒலி வழி தரும் (Voice Command) கட்டளைகளைப் புரிந்து கொண்டு செயல்படுத்துவதுடன் பதில் அளிக்கவும் செய்கிறது. ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோ போன்களில் இந்த வகை வசதி இருந்தாலும், ஒலி வழி தருவதில் அவை பல வரையறைகளைக் கொண்டுள்ளன. ஆனால், ஐபோன் இயற்கையான மொழி வழியை எளிதில் உணர்ந்து கொண்டு செயல்படுகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டலி ஜென்ஸ் (Artificial Intelligence) எனப்படும் செயற்

3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம் (Operating System)

Image
    க ணணியை செயற்படுத்தவென உருவாக்கப்பட்டவைதான் இயங்குதளங்கள் (Operating System). இன்னும் சொல்லப்போனால் கணணி வன்பொருட்களுக்கும்(Hardwares) பயனாளர்களுக்கும்(users) இடையிலான ஒரு இடைமுகமாக(Interface) செயற்படுபவை. இவ்வாறான பல இயங்குதளங்கள் இன்றைய உலகில் பல உருவாக்கப்பட்டுள்ளன உருவாக்கபட்டுக்கொண்டிருக்கின்றன. அவ்வாறான பல இயங்குதளங்களாக Windows XP, Windows Vista, Windows 7 , Apple OS, Ubuntu OS, Linux, Google Chrome OS, RISC OS, Amiga OS, MAC OS, போன்ற இன்னும் பல இயங்குதளங்கள் இன்று காணப்படுகின்றன. அவ்வாறான இயங்குதளங்கள் இருக்கின்ற போதிலும் இவற்றைவிட மிகச்சிறிய அளவில் உருவாக்கப்பட்ட இயங்குதளம் ஒன்றும் உள்ளது. KOLIBRI OS எனப்படும் இந்த இயங்குதளமானது 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளமாகும். இந்த இயங்குதளமானது Windows,Linux, Mac போன்ற பிற இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு அமையாமல் CPU நிரலாக்கமொழி எனப்படும் முதலாம் தலைமுறை( First Generation language) மொழியான கணணி இயந்திர மொழியின்(Machine Code) துணையுடன் உருவாக்கப்பட்ட இயங்குதளமாகும். இந்த இயங்

விண்டோஸ் 8 கட்டமைப்பு முன்னோட்டம் பதிவிறக்கம்

Image
  விண்டோஸ் 8 முன்னோட்டம் ஒரு ஆரம்ப தொடர்பு இடைமுகத்துடன் முழு விண்டோஸ் அடுத்த தலைமுறை பாருங்கள்,, புதிய டெஸ்க்டாப் பயன்பாடுகள், மற்றும் பலவற்றை அளிக்கிறது. ஒருமுறை அது உபரி நிரம்பியிருந்தது உங்களுக்கு (நீங்கள் எப்போதாவது பயன்படுத்தப்படும் அல்லது விண்டோஸ் தொலைபேசி 7 பார்த்திருக்கிறிர்களா. நீங்கள் எதிர்பார்ப்பது சரியாக என்ன தெரியும்) புதிய மெட்ரோ-பாணி டெஸ்க்டாப் கண்டுபிடித்து தொடங்கப்பட்டது தான். எனவே எக்ஸ்ப்ளோரர், கண்ட்ரோல் பேனல், IE மற்றும் பழைய பாணி டெஸ்க்டாப், there'sa வானிலை பயன்பாடு, சமூக வலையமைப்பு கருவிகள், விளையாட்டு, உற்பத்தி பயன்பாடுகள் மற்றும் ஒரு முழு இணைப்புகள். விண்டோஸ் முன்னோட்டம் டெவலப்பர்கள் விண்டோஸ் 8 ஒரு முன் பீட்டா பதிப்பு உள்ளது. இந்த பதிவிறக்கங்கள் அறிவிப்பு இல்லாமல் மாறலாம் என்று prerelease மென்பொருள் உள்ளடக்குகின்றன.  Prerelease மென்பொருள் அம்சங்களை மற்றும் செயல்பாடு இறுதி பதிப்பு காணப்படாது. சில தயாரிப்பு அம்சங்கள் மற்றும் செயல்பாடு மேம்பட்ட அல்லது கூடுதல் வன்பொருள், அல்லது மற்ற மென்பொருள் நிறுவல் தேவைப்படலாம். கணினி