Posts

Showing posts from January, 2014

HTC டிசயர் 310 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை..

Image
HTC நிறுவனம் அதன் டிசயர் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு ஒரு புதிய இடைப்பட்ட ஸ்மார்ட்போனான டிசயர் ஸ்மார்ட்போனை 310 வெளியிட்டுள்ளது. HTC தற்காலிகமாக விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை இல்லாமல் அதன் ஐரோப்பிய வளைதளத்தில் புதிய ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. HTC டிசயர் 310, ஒரு டெக் சிப்செட் மூலம் இயக்கப்படுகின்ற நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும், 1.3GHz குவாட் கோர் MT6582M உள்ளது. இரட்டை சிம் ஸ்மார்ட்ஃபோனில் 480×854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 4.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. HTC டிசயர் 310, ஆண்ட்ராய்டு 4.2.2 இயங்குகிறது, சாதனத்தில் BlinkFeed அம்சம் தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை. டிசயர் 310 ல் விரிவாக்கத்தக்க சேமிப்பு பற்றி எந்த குறிப்பும் இல்லை என்றாலும், அது, ரேம் 512MB வருகிறது மற்றும் 4GB உள்ளடிக்கிய சேமிப்பு உள்ளது. VGA முன் எதிர்கொள்ளும் கேமரா, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. HTC டிசயர் 310 ஸ்மார்ட்ஃபோனில் ப்ளூடூத், Wi-Fi, மைக்ரோ-USB, எட்ஜ், ஜிபிஎஸ் மற்றும் 3G இணைப்பு விருப்பங்கள் வருகிறது. ஸ்மார்ட்ஃபோனில் ஒரு 20

வீட்டில் இருந்தே ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டுமா?

Image
ஆங்கிலம் இன்று அனைவரும் விரும்பி கற்றுக்கொள்ளும் ஒரு மொழியாக மாறிவருகிறது, என்னதான் நமக்கு பல திறமைகள் இருந்தாலும், ஆங்கிலம் தெரியாத ஒரே ஒரு காரணத்தினால் பல வேலைகள் இன்று நமக்கு கிடைக்காமல், ஆங்கிலம் தெரிந்த இன்னுமொருவருக்கு போகிறது.  இந்த ஆங்கில மொழியை இணையத்தின் வழியாக அதுவும் தமிழில் கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது, அதைப்பற்றித்தான் நாம் இன்று பார்க்க உள்ளோம்.  இந்த தளத்தில் ஆங்கிலத்தை இலகுவாக கற்றுக்கொள்ள பல வழிகளை செய்து தந்திருக்கிறார்கள்.ஆனால் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவை அனைத்தையும் நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள  முடியும்! இருந்தபோதிலும் அதில் உள்ள  ஒரு சிலதை நாம் இலவசமாக கற்றுக்கொள்ள முடியும்.பிடித்திருந்தால் மட்டும் கட்டணம் செலுத்தி அங்கு படிப்பதை தொடருங்கள். இந்த தளம் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Chrome Browser - மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு கண்டுபிடிப்பு !!!

Image
கணினியில் இணையதளங்களைப் பார்வையிட உதவும் கூகுள் க்ரோம் ப்ரௌசரில் மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, இயங்கிக் கொண்டிருக்கும் கணினிக்கு அருகே நடக்கும் பேச்சுகள், கூட்டங்கள் ஆகியவற்றை வேறொரு கணினியின் மூலம் ஒட்டுக் கேட்க முடியும். இஸ்ரேலைச் சேர்ந்த கணினி விஞ்ஞானி ஒருவர் கூகுள் க்ரோமில் உள்ள இந்தக் குறைபாட்டைக் கண்டுபிடித்துள்ளார். எனினும் க்ரோமை பயன்படுத்துவோருக்கு உடனடியாக இதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் மிகச்சிறிய ஆண்ட்ராய்ட் டேப்ளட்

Image
சோனி நிறுவனம் உலகின் முதல் மிகச்சிறிய ஆண்ட்ராய்ட் டேப்ளட்டை அறிமுகப்படுத்தியுள்ளது . இச்சிறிய டேப்ளட்டின் பெயர் Sony Xperia Z Ultra.  சிறப்பம்சங்கள்:  ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் 6.4 அங்குல டிஸ்பிளே, குவாட்கோர் 2.2GHz Snapdragon 800 சிப்செட், 6.5 திக் ப்ரொபைல் வாட்டர் ப்ரூப் வசதி கீரல் எதிர்ப்பு கண்ணாடி 16 ஜிபி சேமிப்பகம் 8 எம்பி கேமிரா 3020 mAh பேட்டரி Specs of Sony Xperia Z Ultra 6.44-Inch-Full-HD-Display Android-4.2-Jelly-Bean 2.2-GHz-Qualcomm-Snapdragon-800-Quad-Core-Processor 2GB-RAM 8-MP-Rear-Camera-With-Auto-Focus 2-MP-Font-Facing-Camera 16-GB-Internal-Memory Bluetooth-4.0 Watter-Proof-And-Dust-Proof 3050-MAh-Battery

டெல் நிறுவனத்தின் புத்தம் புது டேப்லட்கள்..!

Image
பிசி தயாரிப்பாளரான டெல் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான சாதனங்களை ‘வென்யூ’ வரிசையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு அடிப்படையிலான டெல் வென்யூ 7 மற்றும் வென்யூ 8 டேப்லட்கள் ரூ.10.999 மற்றும் ரூ.17,499 விலையில் இன்று முதல் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் கிடைக்கும். அடுத்த மாதம் ரூ.26,499 விலையில் உள்ள விண்டோஸ் 8 அடிப்படையிலான டெல் வென்யூ 8 ப்ரோ விற்கப்படும். மேலும் அடுத்த மாதம் வென்யூ 11 ப்ரோ கிடைக்கும் என்றாலும், விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை. வென்யூ 7 மற்றும் 8 இரண்டு டேப்லட்கள் பகிர்ந்து கொள்ளப்பட்ட அம்சங்கள். 2GHz டூயல் கோர் இன்டெல் ஆட்டம் Z2760 (க்ளோவர் டிரெயில்) பிராசசர், எச்.டி. (WXGA 1280 x 800) தீர்மானம் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இன்டெல் HD கிராபிக்ஸ், 2 ஜிபி DDR2 ரேம், Wi-Fi, ப்ளூடூத் 4.0 மற்றும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட 4100mAh 1 செல் பேட்டரி, இரண்டு டேப்லட்களும் கருப்பு வண்ணங்களில் மட்டுமே கிடைக்கின்றன. டேப்லட்கள் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது மற்றும் அமெரிக்க சந்தையில் அக்டோபர் 201

உங்கள் கணிணிக்கு கூகுள் இன் புதிய இயங்குதளம் அண்ட்ராய்டு V 0.3 நேரடி குறுவட்டை இலவசமாக தறவிரக்கலாம்

Image
  லைவ் அண்ட்ராய்டு, அண்ட்ராய்டுக்கான ஓர் லைவ் குறுவட்டு வரவேற்கிறோம்!   கூகுள் அண்ட்ராய்டு முயற்சிக்க விரும்புகிறேன், மாறாக ஓர் டி மொபைல் G1/G2/G3 வாங்குவது போல் இல்லை? லைவ் அண்ட்ராய்டு கூகுள் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் ஓர் லைவ் குறுவட்டு வட்டு பிம்பத்தை பதிவிறக்க உதவுகிறது. ஜஸ்ட், ஓர்   தட்டு படத்தை எரிக்க CD-ROM இயக்கியில் அது குச்சி, மற்றும் உங்கள் கணினியை மீண்டும் துவக்க மற்றும் நீங்கள் நிறுவும் அல்லது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும் பாதிக்கும் இல்லாமல் அண்ட்ராய்டு பார்த்து கொள்ளலாம். அம்சங்கள் ஓபன் டிஎன்எஸ் சேர்க்கப்பட்டன ஆடியோ ஆதரவு கற்பனையாக்கப்பெட்டியை – இன்டெல் 8×0 AC97 VMware – Ensoniq AudioPCI 1371/1373 SD கார்டு ஆதரவு (512M) ஈத்தர்நெட் (DHCP) மவுஸ் வீல் ஆதரவு உயர் தீர்மானம் ஆதரவு (800 * 600, 1024 * 768) புகைப்படங்கள் சேர்க்கப்பட்டன மென்பொருள் பட்டியல் அண்ட்ராய்டு VNC PilotLines, Craigs பந்தயங்கள், சூப்பர் மரியோ அதிக நிகர கார்டு இயக்கி சேர்க்கப்பட்டது AMD PCNET32 PCI பிராட்காம் 440x/47xx CS89x0 இன்டெல் PRO/100 + NE2

ரகசியங்களை திருடும் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு – உஷார்..!

டெபிட் கார்டு வந்த பிறகு, அதை பயன்படுத்திதான் பெரும்பாலானோர் ஷாப்பிங் செய்கின்றனர். பிக்பாக்கெட் பயமில்லை, பாக்கெட் கனமில்லை என்ற கூடுதல் தெம்பும் வந்து விடுகிறது. இப்படி ஒருபுறம் வசதி இருந்தாலும், இன்னொரு புறம் தொழில்நுட்ப வளர்ச்சி நம் செயல்களை எளிதாக்கி கொண்டிருக்க, ஸ்கிம்மர் மெஷின், பிஷ்ஷிங் என நவீன முறையில் திருட்டுகள் அமோகமாக நடக்கின்றன.  கடைகளில் கார்டு பயன்படுத்தி பொருள் வாங்குவது போல, ஆன்-லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதுபாதுகாப்பு இல்லாதது என்று தெரிந்தாலும், வசதி கருதி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, கடைகளில் பொருள் வாங்கும்போது கார்டு மூலமான பண பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக ஆக்கும் வகையில், டெபிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்டு எண் பயன்படுத்துவதை ரிசர்வ் வங்கி கட்டாயம் ஆக்கியது. இருப்பினும் இணையதள திருடர்கள் புதுப்புது ரூபத்தில் தங்கள் வேலையை காட்டிக்கொண்டுதான் உள்ளனர்.  எனவேதான், இணையதள தாக்குதல்களுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. இணையதள பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும், முழுவதுமாக இதை கட்டு

வேர்டில் எப்2 கீ பயன்பாடு என்ன ஒரு பார்வை..!

கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும்.  இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பிரிவில் ‘Display gridlines on screen’ என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கை வாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.  இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்

வேகமாக தட்டச்சு செய்வது எப்படி..?

என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும். எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள அதற்கென இயங்கும் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து இரண்டு மாதங்களாவது குறைந்தது கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கென வடிவமைக்கப்பட்ட பாடங்கள் உண்டு. இப்போது அந்த கவலையே இல்லை. இணையத்திலேயே இதற்கென டைப்ரைட்டிங் ட்யூட்டர் புரோகிராம்கள் உள்ளன. இவற்றைக் கொண்டு ஒரு வாரத்தில் கீ போர்டைக் கையாளக் கற்றுக் கொள்ளலாம். அடுத்த நிலையில் அதனை வேகமாக இயக்க நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை அண்மையில்  Keybr என்ற முகவரியில் உள்ள தளத்தில் காண நேர்ந்தது. இந்த தளத்தில் நுழைந்தவுடன், இது தரும் மூன்று பாடங்களைத் தேர்ந்தெடுத்து, டைப்பிங் கற்றுக் கொள்வதனை ஆரம்பிக்கலாம். படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. நீங்கள் ஏற்கனவே கீ போர்டினைக் கையாளக் கற்றுக்

வேர்ட்டில் பாரா பார்மட்டிங் செய்வது எப்படி..?

வேர்ட் பாரா பார்மட்டிங்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது, வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா? இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் செய்திட வேண்டியதில்லை. பாராவில் ஒரு சிறு பகுதியை செலக்ட் செய்து, தேவையான மாற்றத்திற்கான கட்டளையைத் தரவும். அது அப்படியே பாரா முழுவதும் மேற்கொள்ளப்படும். எழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்க: வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக்கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது. எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர்டில் குறைக்கலாம். எடுத்துக்காட

எக்ஸெல்லில் அறியாத வசதிகள்

பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.   எக்ஸெல் தரும் இரட்டைக் கோடுகள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் பெயர் அல்லது வேறு வகையான டேட்டாவின் கீழாக இரண்டு கோடுகளில் அடிக்கோடிடலாம். இதற்கு முதலில் ஷிப்ட் கீயை அழுத்திக

எக்ஸெல்லில் சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா..?

பேஸ்ட் பட்டன்: எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில வேலைகளை மேற் கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்றும் இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். சார்ட்டிங் செய்தால் பார்மட் மாறுமா?: எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப் படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப் படுகின்றன. ட

மைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்

Image
1. டெக்நெட் (TechNet):  இந்த 2013 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கைவிடப்பட்ட பெரிய திட்டம் டெக்நெட் என்பதாகும். இதனைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதாகவும், திருட்டுத்தனமாகக் காப்பி எடுத்துப் பயன்பாட்டிற்கு பரப்புவதாகவும் கூறி மைக்ரோசாப்ட் இதனை நிறுத்தியது. தகவல் தொழில் நுட்ப துறையில் இயங்கும் வல்லுநர்களுக்கு, விண்டோஸ் க்ளையண்ட் மற்றும் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, நிலைத்த உரிமம் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.  பயனாளர்கள் இதனைத் தவறாகப் பயன்படுத்தியதால், பாதுகாப்பு நிறைந்த எம்.எஸ்.டி. என். நெட்வொர்க்கிற்கு (MSDN network) பயனாளர்களை மாற்றிவிட்டு, டெக் நெட் திட்டத்தினை மைக்ரோசாப்ட் மூடியது.  2. லைவ் ப்ராடக்ட்ஸ் (Live Products):  இந்த 2013 ஆம் ஆண்டில், தன்னுடைய பல திட்டங்களை குழுக்களாக மைக்ரோசாப்ட் ஒருங்கிணைத்தது. அதன் ""லைவ் ப்ராடக்ட்ஸ்'' பல பிற புரோகிராம்களாக மாற்றி அமைக்கப்பட்டது.  லைவ் மெயில் மற்றும் ஹாட் மெயில் அவுட்லுக் டாட் காம் (Outlook.com) உடன் இணைக்கப்பட்டது. லைவ் மெஷ் (Live Mesh) திட்டம் ஸ்கை ட்ரைவ் இருப்பதால

கணினியை முடக்கும் கிறிப்டோலாக்கர் வைரஸ்

Image
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டோ லாக்கர் (‘CryptoLocker’) வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது. கம்ப்யூட்டரில் பரவியவுடன், மிக மிக முக்கியமான டாகுமெண்ட்களைத் திருடி, பின்னர் அவற்றில் உள்ள விஷயங்களை வெளியிடாமல் இருக்க, பெரும் அளவில் பணம் தரவேண்டும் என, இந்த வைரஸை அனுப்பியவர்கள் மிரட்டுகின்றனர். பணத்தை, அடையாளம் தெரியாமல் பெற, பல வழிகளைக் கையாள்கின்றனர். ஆள் பெயர் குறிப்பிடாத, ப்ரீ பெய்ட் வவுச்சர் மூலம் பணம் பெறுவது இந்த வழிகளில் ஒன்றாகும். இந்தியாவில் இந்த வைரஸ் பாதித்தவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், பலர் இதனை வெளியே கூறாமல் இருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த வைரஸ் பரவுவது தற்போது அதிகரித்து வருவதாகவும், காவல் துறை எச்சரித்துள்ளது. ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் கண்காணிப்புப் பார்வையிலிருந்து தப்புவதற்கு, இந்த வைரஸ் ஏழு வெவ்வேறு பெயர்களில் பரவி வருகிறது. இது Win32/Trojan என்ற வகையைச் சேர்ந்தது என ஆண்ட்டி வைரஸ்

ஜிமெயில் பேக் அப்..!

Image
ஜிமெயிலுக்கு பேக் அப் தேவையா? என ஆச்சரியத்துடன் நீங்கள் கேள்வி கேட்கலாம். ஜிமெயில் தரும் கொள்ளளவிற்கு மேலாகவும் நாம் மின்னஞ்சல்களை அடுக்கி வைக்கப் போகிறோமா?  ஜிமெயில் தான், நம் மெயில்களைத் தேவை இல்லாமல் நீக்கப்போவது இல்லையே! என்ற சமாதானங்கள் இருந்தாலும், அவ்வாறு ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற கவலையும் மனதில் தோன்றுகிறது.  நம் முக்கிய டாகுமெண்ட்கள் பலவற்றை, ஜிமெயில் மின்னஞ்சல்களில் சேமித்து வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் பல தங்களின் ஆண்டு கணக்குகளை, கோப்புகளாக சேமித்து வைத்துள்ளன.  எனவே, இலவசமாக இயங்கும் இந்த ஜிமெயில் சேவை என்றாவது மூடப்பட்டால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நிலை திக்கற்றதாகிவிடும்.  எனவே தான் மற்ற மின்னஞ்சல் நிறுவனங்களின் அஞ்சல்களுக்கு பேக் அப் எடுப்பது போல, ஜிமெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களையும், அதன் கோப்புகளுடன் பேக் அப் எடுத்து வைப்பது நல்லது. இதற்கான ஒரு பயன்பாட்டு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. ஜிமெயில் பேக் அப் என்னும் இந்த gmailbackup0.107.exe என்ற புரோகிராமினை http://www.gmailbackup. com/downloa

மொபைல் புரட்சி..!

Image
சென்ற 2013 ஆம் ஆண்டில் நாம் பெற்ற டிஜிட்டல் உலக வசதிகள், இந்த உலகையே நம் பாக்கெட்டில் கொண்டு வந்துவிட்டன.  பாக்கெட்டில் வைத்து நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள், நமக்கான அனைத்து வாழ்க்கை வசதிகளையும் செய்து தருவதோடு, நம்மை இந்த உலகில் வழி நடத்தவும் செய்கின்றன.  நீங்கள் மாணவனாக, இல்லத்தரசியாக, அலுவலகம் ஒன்றின் நிர்வாகியாக என எந்த நிலையில் இருந்தாலும், இவை உங்கள் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றன. மற்றவர்களுடன் பேசுவதற்கு, தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு, அலுவலக நடவடிக்கைகளை நிர்வாகம் செய்வதற்கு எனப் பல பரிமாணங்களில் இவை உங்களுக்குத் துணை புரிகின்றன.  சென்ற மாதம், டில்லியில், ஒரு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, பூமியை வலம் வரும் சாட்டலைட்களுடன் தொடர்பு கொண்டு, தான் செல்ல வேண்டிய திருமண மண்டபத்திற்குச் சரியான வழியில் ஒருவர் சென்றார் என்ற செய்தி வெளியானது. ஒரு டாக்சி ட்ரைவர் கூட, சாலையில் செல்பவர்களைக் கேட்டே, வழியை அறிவார். ஆனால், சரியாக இயக்கினால், ஒரு ஸ்மார்ட் போன் சிறப்பாக வழியைக் காட்டுகிறது. கைகளில் வைத்துப் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்கள், அது ஸ்மார்ட் போனாக இருந்த

இந்திய நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்

Image
அமெரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பேஸ்புக் சமூக இணைய தள நிறுவனம் இந்திய நிறுவனம் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளது.  மொபைல் தொழில் நுட்பத்துறையில் இயங்கும், பெங்களூருவினைச் சேர்ந்த Little Eye Labs என்னும் நிறுவனத்தை அண்மையில் பெற்றுள்ளது.  இந்த நிறுவனம், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் திறனை அதிகப்படுத்தும் தொழில் நுட்பத்தினை வடிவமைத்து வருகிறது.  இந்த தொழில் நுட்பத்திற்கு பேஸ்புக் முன்னுரிமை கொடுத்து வந்தது. தன் வர்த்தகத்திற்கு இதன் கட்டமைப்பு தேவையாய் இருந்தது. எனவே, தற்போது இந்த நிறுவனத்தையே வாங்கி உள்ளது. முதல் முறையாக, ஓர் இந்திய நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன விலை இதற்கெனக் கொடுக்கப்பட்டது என இரண்டு பக்கம் இருந்தும் தகவல் இல்லை. லிட்டில் ஐ நிறுவன வல்லுநர்கள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 10 பேர்கள் தான். இருப்பினும், இந்த நிறுவனம் 1.5 கோடி டாலர் விலை போயிருக்கலாம் என சாப்ட்வேர் நிறுவனங்கள் பேசிக் கொள்கின்றன. பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் அதிக எண்ணிக்கையில

கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்

Image
புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன.  இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது. புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.  வழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது.  magnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும். Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்க

20 எம்.பி. திறன் கேமராவுடன் சோனி மொபைல்

Image
சோனி நிறுவனம், அண்மையில் தன் எக்ஸ்பீரியா இஸட்1 மொபைல் போனை, 20.7 எம்.பி. திறன் கொண்ட கேமராவுடன் வடிவமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.  என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், ஏற்கனவே வெளியான Z1 போனைப் போன்றே வடிவமைக்கப்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் அளவில் சற்று சிறியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன: இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் Triluminos என்ற டிஸ்பிளேயுடன் இயங்கும். 2.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 800 ப்ராசசர் இணைக்கப்படும். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லி பீன். ஒரே அலுமினிய வார்ப்பில் இதன் வெளிப்பாகம் அமைக்கப்படும். இதன் கேமரா Exmos RS sensor என்ற சென்சார் கொண்டு, 20.7 எம்.பி. திறன் கொண்டதாக இருக்கும்.  இன்னொரு கேமரா முன்புறமாக 2.2 எம்.பி. திறன் கொண்டிருக்கும். போனின் தடிமன் 9.4 மிமீ; எடை 140 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், 2 ஜிபி ராம் மெமரி, 64 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதியுடன் 16 ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0, ஜி.பி.எஸ். மற்றும்

மற்ற நெட்வொர்க் USB இன்டர்நெட் டான்கிலை அன்லாக் செய்வது எப்படி..!

Image
How to UNLOCK USB dongle Internet Modem and swap another service sim card. மற்ற நெட்வொர்க் USB இன்டர்நெட் டான்கிலை அன்லாக் செய்வது எப்படி என்று பார்க்கலாமா..! நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.  இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங

நூறு கோடி ஆண்ட்ராய்ட் சாதனங்கள்..!

Image
நடப்பு ஆண்டில், ஆண்ட்ராய்ட் இயக்கம் கொண்ட சாதனங்களின் விற்பனை நூறு கோடியைத் தாண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில், ஆப்பிள் ஆப்பரேட்ட்டிங் சிஸ்டம் கொண்ட சாதனங்களின் பயன்பாடு, ஆண்ட்ராய்ட் சாதனங்களைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை கார்ட்னர் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்கள் விற்பனை 7.6% அதிகரித்து, 247 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும். இவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும். கூகுளின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அதிகமாகப் பரவலாகப் பயன்படுத்தும் சிஸ்டமாக இந்த ஆண்டும் இடம் பெறும். விலை மலிவான ஸ்மார்ட் போன்களின் விற்பனை இந்த நிலைக்கு அடித்தளம் அமைக்கும்.  இந்த ஆண்டில், நூறு கோடி சாதனங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்துடன் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2017 ஆம் ஆண்டுக்குள், 75% ஆண்ட்ராய்ட் சாதன விற்பனை வளரும் நாடுகளிலிருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையிலான சாதன

டாப் 10 ஆன் லைன் கேம்ஸ் சைட்டுகள் ஒரு பார்வை..

Image
வணக்கம் நண்பர்களே..! கணினி அல்லது கணினி சார்ந்த சாதனங்களில் கேம்ஸ் விளையாடுவது இன்று பலருக்கு இருக்கும் ஒரு பொழுதுபோக்காகும்.  அலுவலகத்தில், அல்லது வீட்டில் இப்படி எந்த இடத்திலும், செய்துகொண்டிருக்கும் வேலைகளிலிருந்து கொஞ்சம் ரிலாக்சாக இருக்க, இதுபோன்ற விளையாட்டுக்களை விளையாடுவது வழக்கம்.  உலகில் எத்தனையோ வீடியோ கேமிங் வெப்சைட்ஸ் இருப்பினும், இந்த தளங்கள் மிகவும் பயனுள்ளதாக, விரும்பத்தக்கதாக இருக்கும் என நம்புகிறேன்.  கீழே வரிசைப்படுத்தப்படுள்ள பத்து தளங்களும் உலகில் முதன்மையான வீடியோ கேமிங் மற்றும் வீடியோ கேமிங் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை கொடுக்கும் (Video games, video games reviews, video games inflammations) வலைத்தளங்களாகும்.  இதிலுள்ள உங்களுக்கு விருப்பட்ட வீடியோகேமினை, விமர்சனங்களை, தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். டாப் 10 ஆன் லைன்  கேம்ஸ் சைட்டுகள்:  1. IGN 2. GameSpot 3. GameFAQs 4. GameTrailers 5. Kotaku 6. CheatCC 7. GamesRadar 8. 1UP 9. GameSpy 10. JoysTiq மேற்கண்ட வீடியோ கேமிங் தளங்களில் உங்கள் விருப்பத்திற்கேற்ப புதிய வீடியோம்கள் கிட

விண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு

Image
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின், பயனாளர் இடைமுக வழிகள் மட்டுமின்றி, வழக்கமாக நாம் விண்டோஸ் சிஸ்டத்தில் இதுவரை பயன்படுத்தி வந்த ஷார்ட் கட் கீகளும் அதற்கான செயல்பாடுகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.  Windows key - மெட்ரோ ஸ்டார்ட் விண்டோவினைக் கொண்டு வரும். இதில் நீங்கள் தேட விரும்பும் எதனையும் டைப் செய்து தேடலாம். அது ஒரு அப்ளிகேஷனாகவோ, பயன்பாட்டு கோப்பாகவோ இருக்கலாம்.  விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஸ்டார்ட் மெனுவில் மேற்கொண்டது போலவே, இதனையும் பயன்படுத்தலாம்.  Win + D - பழைய விண்டோஸ் டெஸ்க்டாப்பினைக் கொண்டு வரும்.  Win + C - சார்ம்ஸ் மெனுகிடைக்கும். இங்கு தேடல், பகிர்தல் மற்றும் செட்டிங்ஸ் மாற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். Win + I - செட்டிங்ஸ் (Settings) பேனல் திறக்கப்படும். அப்போது பயன்பாட்டில் இருக்கும் அப்ளிகேஷனுக்கு செட்டிங்ஸ் மாற்றலாம். வால்யூம் கண்ட்ரோல் செய்திடலாம், வயர்லெஸ் நெட்வொர்க் பணிகளை வரையறை செய்திடலாம். திரையின் டிஸ்பிளே ஒளிப் பரிமாணத்தை மாற்றலாம்.  Win + Z - அப்போதைய மெட்ரோ அப்ளிகேஷனுக்கு App Bar திறக்கப்படும்.  Win +

உலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்..!

Image
சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரிப்பவர்கள் இன்று உலகெங்கும் முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்கள். நம் அன்றாடப் பணிகள் பல டிஜிட்டல் சாதனங்களையே சார்ந்து இருப்பதால், இவர்களின் பணி நமக்கு அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது. அண்மையில், ஐ.டி.சி அமைப்பு எடுத்த ஓர் ஆய்வின்படி, சாப்ட்வேர் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 85 லட்சம் ஆகும். இவர்களில் ஒரு கோடியே 10 லட்சம் பேர், நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள். மற்ற 75 லட்சம் பேர் பொழுது போக்கிறாக, சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாக உள்ளனர். கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை, சாப்ட்வேர் புரோகிராமர்களையும் சேர்த்து, 2 கோடியே 90 லட்சம் என அறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் இயக்குபவர் களாகவும், இந்தப் பணிகளை நிர்வகிப்பவர்களாகவும் ஒரு கோடியே 80 லட்சம் பேர் உள்ளனர். மொத்த சாப்ட்வேர் புரோகிராமர்களில், பொழுது போக்கிற்காக இதில் ஈடுபடுபவர்களையும் சேர்த்து, அமெரிக்காவில் 19 சதவீதம் பேர் உள்ளனர். சீனா இவர்களில் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இந்தியாவில் இயங்குபவர்கள் 9.8 சதவீதம் பேர் ஆவ