Posts

Showing posts from September, 2013

சாம்சங் கேலக்சி நோட் 3 - "Flexible Display" ஸ்மார்ட்போன்..!

Image
பிளக்சிபிள் டிஸ்பிளேயுடன் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் Samsung Galaxy Note 3 வெளியாகியுள்ளது.    சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் புதுடில்லியில் நடந்த சாம்சங் தயாரிப்பு வெளியீட்டு விழாவில் கேலக்சி 3 மற்றும் சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்சை வெளியிட்டது.  விழாவில் கேலக்சி நோட் 3 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதத்ததிற்கான 3, 2, EDGE போன்ற நெட்வொர்கில் பயன்படுத்தும் வகையில் இன்டர்நெட் இலவசமாக வழங்கப்படும் என சாம்சங் விழாவில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பான சாம்சங் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. புதிய சாம்சங் கேலக்சிநோட் ஸ்மார்ட் போனில்  உள்ள சிறப்பம்சம்:  சாம்சங் கேலக்சி 3 நோட் சாதனத்தை தமிழ் மொழியிலும் இயக்கலாம். தமிழ்மொழியில் இயங்குவதால் இணையத்தில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே உள்ளீடு செய்து தேடலாம்.  தமிழைப் பயன்படுத்தியே அனைத்து செயல்பாடுகளையும் Samsung galaxy note 3 ல் செய்ய முடியும். பிளக்சிபல் டிஸ்பிளே (Flexible) வசதியைக் கொண்டது. ரப்பர் போல வளைந்து நெளிந்துகொடுக்கும் தன்மை. இதனால் இறுக்கமான பாக்கெட்களில் வைத்தாலும் பழுதட

ஆப்பிள் டெக்னாலஜியை தகர்பபவர்களுக்கு 8 லட்ச ரூபாய் பரிசு..!

Image
  ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு சாதனங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜியை கொண்டுள்ளது. நீங்கள் கைரேகை போனை அன்லாக் செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி இருப்பதால் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த டெக்னாலஜி பற்றி தொழில்நுட்ப பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் செக்கியூரிட்டியை ஹாக் செய்ய முடியுமா இல்லை முடியாதா என்று கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. இதனால் செக்கியூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் சிலர் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு ஒரு போட்டியை அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி செக்கியூரிட்டியையை தகர்பவர்களுக்கு 13,000 டாலர் அதாவது கிட்டதிட்ட 8 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் இது தான் அறிவித்துள்ள போட்டி.இதை கேள்விபட்ட ஹாக்கர்கள் ஆப்பிள் ஐபோன் 5Sன் விற்பனைக்காக காத்திருக்கின்றனர். இந்த போட்டிக்காக ஆர்டுராஸ் ரோஸன்பேக்கர் என்பவர் 10,000 டாலர் நன்கொட

(APPLE) ஆப்பிள்-ன் கதை..

Image
  அமெரிக்காவில் ஆரேகான் மாநிலத்தில் உள்ள ரீட்ஸ் பல்கலை கழகத்தில் (ரிட்ஸ் College – Portland, Oregon) பெற்றோரின் விருப்பத்திற்காக கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவனுக்கு படிப்பில் நாட்டமில்லை. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், கம்யூட்டர்கள் பற்றிய அபார ஞானமும், நல்ல திட்டமிடும் திறனும் இருந்தாலும், கல்லூரி படிப்பு ஏனோ பிடிக்கவில்லை. வெளியேறி வேலைகள் தேடிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு தீடிரென எழுந்த எண்ணம் ஆன்மீகத்தின் உலக தலைநகரான இந்தியாவிற்கு போக வேண்டும் என்பது. அந்த இளைஞனுக்கு வார இறுதி நாட்களில் இலவச உணவு வழங்கி வந்தது ஹரே கிருஷ்ணா கோவில். அங்கு ஒரு நண்பர் குறிப்பிட்டுச் சொன்ன மகத்தான இந்திய பாபாவை சந்தித்து ஆன்மீக வாழக்கைக்கு வழி கேட்டு தீட்சை பெற வேண்டும் என்பது அந்த இளைஞனுக்கு திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது.    தனக்கு பகுதி நேரவேலை தந்த கம்யூட்டர் நிறுவனத்திடம் தன் இந்திய பயணத்திற்கு உதவி செய்யும்படி கேட்கிறான். மறுத்த நிறுவன அதிபர் ஜெர்மனிக்கு போய் ஒருவேலை செய்வதானால் இந்தியா அனுப்புவதாகச் சொல்லுகிறார். அந்த வாய்ப்பை ஏற்று, ஜெர்மனியில் கொடுத்த வேலையை

Blue Screen Error (Blue Screen of Death -BSOD) பிரச்சனைகளும், தீர்வும்..

Image
Windows has been shut down to prevent damage to your computer என்ற செய்தியுடன் நீலத்திரைப் பிழை (Blue Screen Error, Blue Screen of Death-BSOD) சில சமயம் கருந்திரையாகவும் (Black Screen) வருவதுண்டு. இது பல காரணங்களால் வருகிறது. விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் இப்படியான தவறுகள் லீனக்ஸ் கணினிகளில் வருவதில்லை. அதைப் பற்றி இன்று பார்ப்போம். Page Fault error எனப்படும் 0×00000050 என்பது Blue Screen of Death (BSOD) எனவும் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. Hard Disk, ட்ரைவர்(Device Driver), சில மென்பொருள் காரணமாக, இயங்கிக் கொண்டிருக்கும் கணினியில், தரவுகள்(data) அழியாமலும், கணினியைக் காப்பதற்காகவும் கணினி நீல நிறத் தவறு (Blue Screen Error ) எனக் காட்டி கணினி இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. Hard Diskல் ஏற்பட்ட பிழைகள் மற்றும் இணைக்கப்பட்ட வன்பொருள் பழுதடைந்த அல்லது சரியாக இயங்காத அல்லது நிரம்பியுள்ள நிலையில் உள்ள RAM நினைவகம், அதைத் தொடர்ந்து CPU என்ற செயலகம் செயலில் ஈடுபட தேவையான நினைவக இடம் இல்லாத நிலையிலும் (RAM memory, L2 RAM cache, video RAM), NTFS போர்மட்டில் ஏற்பட்ட தவறும், ஆன்டிவைரஸ் ம

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க.. :-)

Image
நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க. பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். My Computer மீது Right Click செய்யவும். இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும். இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். இப்போது Change என்பதை தெரிவு செய்யவும். இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். இப்போது இதனை save செய்யவும். கம்ப்யூட்டரை Restart செய்யவும்.

ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 3...

Image
(புதியவர்களுக்கு) ஸ்பீடு பிரௌசிங் செய்ய பகுதியில் நாம் அடுத்து கற்விருப்பது கன்ட்ரோல் கீயைப் பயன்படுத்தி அடுத்தடுத்த டேப்களுக்கு செல்வது எப்படி ? கன்ட்ரோல் கீயைப் பயன்படுத்தி ஒரு டேபை குளோஸ் செய்வது எப்படி ? என்பதைப் பற்றித்தான். நீங்கள் உங்களுடைய பிரௌசரில் ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்களில் வலைத்தளங்களைத் திறந்து வைத்திருக்கிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு டேபிற்கும் மாறி மாறிச் செல்ல வேண்டும். அதற்கு கீபோர்டில் CTRL+TAB விசைகளை அழுத்திப் பாருங்கள்... அடுத்தடுத்த டேப்கள் வரிசையாக மாறி மாறி தோன்றும். தற்பொழுது நடப்பு டேபை மூட வேண்டும் என்றால் CTRL+W அழுத்திப் பாருங்கள். என்ன நடக்கிறது? எந்த டேப் இயக்கதில் உள்ளதோ அந்த டேப் குளோஸ் ஆகிவிடும். குளோஸ் செய்யப்பட்ட டேபை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர என்ன செய்வது? CTRL+SHIFT+T அழுத்துங்கள். உடனே மூடப்பட்ட டேபானது மீண்டும் இயக்கத்திற்கு வரும். இந்த பகுதியில் பிரௌசரில்  ஒரு புதிய டேபை எப்படி திறப்பது என்பதைப் பற்றியும்,  ஒரு டேபிளிலிருந்து மற்றொரு டேபிற்கு தாவுவது எப்படி என்பதைப் பற்றியும் திறந்திர

ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 2...

Image
(புதியவர்களுக்கு)   ஸ்பீடு பிரௌசிங் செய்ய பகுதியில் கடந்த போஸ்ட்டில் அட்பாரில் வலைத்தள முகவரியை மௌஸ் பயன்படுத்தாமல் தட்டச்சிட்டு வலைத்தளத்தை திறப்பது எப்படி என்பதைப் பார்த்தோம்.  பிரௌசரில் நீங்கள் வலைத்தளங்களை வரிசையாக திறந்து வைத்திருப்பீர்கள்.  இப்பொழுது ஒவ்வொரு டேபிளிலும் உள்ள வலைத்தளத்தை பார்வையிட மௌஸ் பயன்படுத்தி அடுத்தடுத்த டேப்களில் கிளிக் செய்துதான் பார்வையிடுவீர்கள்.   அவ்வாறில்லாமல் CTRL+1, CTRL+2 என கொடுத்து அடுத்த டேபிற்கு தாவலாம். உதாரணமாக நீங்கள் நான்காவதாக உள்ள டேபிற்கு செல்வதெனில் CTRL+4 என கொடுத்துப் பாருங்கள்.... நான்காவதாக உள்ள டேபிள் உள்ள வலைத்தளப் பக்கம் காட்சிக்கு கிடைக்கும். செய்து பாருங்களேன்...! இந்த பயிற்சியை தொடர்ந்து நான்கு நாட்கள் செய்து பயிற்சிப் பெற நீங்கள் ஒரு டேப்லிருந்து மற்றொரு டேபிற்குச் செல்ல மௌசை பயன்படுத்தவே மாட்டீர்கள். முதலில் இப்பயிற்சி மேற்கொள்ள சிரமாக இருக்கும். என்றாலும் தொடர்ந்து செய்து பழகினால் மௌசை விட விரைவாக கீபோர்ட்டைப் பயன்படுத்தியே ஒரு டேபிலிருந்து மற்றொரு டேபிற்கு செல்லலாம்.

ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 1...

Image
(புதியவர்களுக்கு)   ஸ்பீடு பிரௌசிங் செய்ய  செய்ய என்ற இப்பகுதியில் அட்ரஸ் பாரில் எளிதாக வெப்சைட் யூ.ஆர்.எல் கொடுப்பது எப்படி என்பதையும், அதற்கான குறுக்கு விசைகள் என்னென்ன என்பதையும் பார்க்க இருக்கிறோம்.  எளிதாகவும், விரைவாகவும் பிரௌசிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.  சாதாரணமாக நாம் பிரவுசிங் செய்யும்போது மௌஸ் (Computer mouse) மூலமே கிளிக் செய்து பிரௌஸ் செய்வோம். மௌசை விட  கீபோர்டை பயன்படுத்தும்போமு விரைவாக பிரோசிங் செய்ய முடியும்.  விரைவாக நீங்கள் பிரௌஸ் செய்ய கற்றுக்கொள்ள ஷார்ட் கட் கீ வழிமுறைகளையே.  எந்த ஒரு பிரௌசருக்கு பொதுவான குறுக்கு விசைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே நீங்கள் விரைவில் பிரௌசிங் செய்ய முடியும்.  வழிமுறைகள்:  1. இணையதள முகவரியை முழுவதுமாக டைப் செய்வதை (www.google.com) விட்டு இணையதளத்தின் பெயரை மட்டும் ( google ) டைப் செய்து CTRL+ENTER செய்தால் முழுமையான வலைப்பக்கத்தின் முகவரி வந்துவிடும்.  உ.ம். google என டைப் செய்து CTRL+ENTER கொடுத்துப் பாருங்கள்..என்ன நிகழ்கிறது. அது www.google.com என மாறிவிடுகிறதா?

லெனோவாவின் புதிய படைப்புகள்...

Image
பெர்லின் நகரில் மிகப்பிரமாண்டமான வர்த்தக கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் சாம்சங், ஆசஸ், சோனி உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளனர. IFA 2013 வர்த்தக விழாவில் தனது படைப்புகளை வெளியிட்டுள்ள மற்றுமொரு முக்கிய நிறுவனம் லினோவா. இந்நிறுவனம் தனது படைப்புகளான லினோவா யோகா 2 புரோ, திங்க்பேட் எக்ஸ், திங்க்பேட் எஸ், லினோவா திங்க்பேட் டி, லினோவா பிளக்ஸ் 14, பிளக்ஸ் 15 என பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இந்தக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளது. லேப்டாப், டேப்ளட், மொபைல் என அனைத்து சாதனங்களிலும் புதிய படைப்புகள் வெளியிட்டு வாடிக்கையாளர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. அதில் லினோவா எக்ஸ் என்ற டேப்லட் பிசியும், லினோவா வைப் எக்ஸ் என்ற ஸ்மார்ட் போனும் குறிப்பிடத்தக்கவை. லினோவா வெளியிட்டுள்ள ஒவ்வொரு சாதனத்தையும், அதில் அடங்கியுள்ள சிறப்பு கூறுகளையும் பார்வையிடுவோம். 1. Lenovo IdeaPad Yoga 2 Pro இதில் புரோ 13.3 இன்ச் டிஸ்பிளேயும், நான்காவது ஜெனரேசன் இன்டல் பிராச்சரும் உள்ளது. டிஸ்பிளேயின் ரொசொல்யூசன் 32,00x1800. இது ஒரு விண்டோஸ் 8 இயங்கு

Top 10 ஆண்ட்ராய்ட் ரேசிங் கேம்ஸ்

Image
ஆண்ட்ராய்ட் போன்கள் அனைவரும் கவர்ந்து வரும் காலம் இது. ஒவ்வொருவரின் கையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ப்போன்கள் இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போனில் அதிகம் விரும்புவது கேம்ஸ் ஐட்டம்தான்.  வித விதமான கேம்ஸ்களை டவுன்லோட் செய்து விளையாடுவது அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் இளைஞர்கள் முதல் சுட்டீஸ்கள் வரை விரும்பி விளையாடுவது Race Games தான். ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விளையாடக்கூடிய Top 10 Racing Game - ஐ இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.  தேவையானோர் டவுன்லோட் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து விளையாடி மகிழுங்கள்.  1. Death Rally FREE இந்த கேமை டவுன்லோட் செய்ய: Download Death Rally FREE android game 2. 2XL MX Offroad இந்த கேமை டவுன்லோட் செய்ய: Download  2XL MX Offroad android game 3. Acceler8 Pro Download  Acceler8 Pro android game 4. GT Racing: Motor Academy Free+ Download  GT Racing: Motor Academy Free+ android game 5. Parking Frenzy 2.0 Download  Parking Frenzy 2.0 android game 6. Trial

புதிய "டெராபைட் இன்டர்நல் மெமரி" கிராஸ்பார்..!

Image
இன்டர்னல் மெமரி:  ஐபோன், ஐபேட், டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்றவற்றின் சிறப்புக் கூறுகளைப் படிக்கும்பொழுது Internal Memory என்ற வார்த்தையைப் படித்திருப்போம். இன்டர்நல் மெமரி என்பது NAND based RRAM என்ற பிளாஷ் மெமரியைக் குறிப்பது ஆகும்.  தற்பொழுது புழக்கத்தில் உள்ள வார்த்தை இது ஆகும்.  சாதாரண இந்த வகை ப்ளாஸ் மெமரிகளில் பொதுவாக அதிக பட்சமாக 64GB வரைக்கும் இருக்கும்.  தற்பொழுது இன்டர்நல் மெமரியில் அதிகபட்ச அளவாக ஒரு டெராபைட் (1TB) அளவிற்கு சேமிக்கத் தக்க வகையில் ஒரு புதிய நினைவகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு டெராபைட் என்பது 1024 GB ஆகும். இந்த புதிய வகை நினைவகத்திற்குத்தான் கிராஸ்பார் (Crossbar) என்று பெயர்.  இந்நினைவகத்தை உருவாக்கியவர் Wei LU என்பவர். இவர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றுகிறார்.  Crossbar நினைவகத்தின் சிறப்பம்சங்கள்:  மற்ற நினைவகங்களைவிட இதனுடைய பரும அளவு சிறியது.  இந்த நினைவகம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவும் இருபது மடங்கு குறைவு.  இந்நினைவகத்தில் ஒரு வினாடிக்கு 140GB அளவுள்ள டேட்

விண்டோஸ் எக்ஸ்பி - விட்டுவிட வேண்டுமா?

Image
விண்டோஸ் எக்ஸ்பி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல் 8, 2014க்குப் பின்னர் இருக்காது. இந்த செய்தி, பல எக்ஸ்பி விசுவாசிகளுக்கு எரிச்சலைத் தந்துளது.  பலர் மாற விரும்பினாலும், உடனே செயல்படாமல், நாட்களைக் கடத்திக் கொண்டுள்ளனர். பலர், மைக்ரோசாப்ட் புதிய கம்ப்யூட்டர்களையும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும் நம்மை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, பணம் சம்பாதிக்கத் திட்ட மிடுகிறது என்ற குற்றச்சாட்டினையும் வைக்கின்றனர்.இது உண்மை அல்ல என்பது இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தின் பல பதிப்புகளுக்கு நேர்ந்ததைக் கவனித்தால் தெரியவரும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இது எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மட்டுமல்ல. அனைத்து சிஸ்டங்களும், இது போல்தான் முடக்கப்பட்டன என்று கூறுகிறது. விண்டோஸ் 95, விண்டோஸ் 98 மற்றும் விண்டோஸ் மி ஆகியவற்றின் வாழ்நாளும் இதே போல முடிவுக்கு வந்தன.  தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விஸ்டாவின் இயக்க வாழ்வு, வரும் ஏப்ரல் 11,2017ல் முடிவடையும். விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பாதுகாப்பு முறை ஜனவரி 14,2020 ஆம் ஆண்டில் முடிந்துவிடும்.  விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை

உலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SanDisk Extreme Pro)

Image
மெமரிகார்ட் தயாரிப்பதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல முன்னணி பிராண்டட் கம்பெனிகள் முதல் சிறிய கம்பெனிகள் வரை மெமரிகார்ட்களை தயாரித்து வருகின்றன. மெமரி கார்ட் குறித்த கடந்த இடுகையொன்றில் மெமரிகார்ட் என்றால் என்ன? அதுசெயல்படும் விதம் போன்ற தகவல்களையும், எந்தெந்த நிறுவனங்கள் இவற்றைத் தயாரிக்கின்றன என்பதை தெளிவாக அறிந்துகொண்டோம். பதிவிற்கான இணைப்பு இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிவேக மெமரி கார்ட் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது Sandisk நிறுவனம். இது ஒரு அதிவேக மெமரி கார்ட்.  மெமரிகார்டின் பெயர்: Extreme Pro CFast 2.0 இந்த புதிய மெமரிகார்டானது நூறு ஜிபி (100GB) செய்திகளை பரிமாற்றம் செய்துகொள்ள 4 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.  450 எம்பி/வினாடி என்ற வேகத்தில் எழுதக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. 256 ஜிபி சேமிப்பு கொள்ளவு கொண்டுள்ளது.  இச்சிறப்புமிக்க மெமரிகார்ட்டின் விலை1809 அமெரிக்க டாலர்கள். விரைவில் இந்த மெமரிகார்ட் ஆனது இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.  தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு

மைக்ரோ எஸ்டி மெமரி கார்ட் பற்றிய பயனுள்ள தகவல்கள்...!

Image
மெமரி கார்டும் பயனும்:  "மெமரி கார்ட்" இந்த வார்த்தையை உபயோகிக்காத செல்போன் பயனர்களே இருக்க முடியாது. வீடியோக்களை பதிந்து வைத்துக்கொள்ள,பாடல்களை சேமிக்க, படங்களை சேமிக்க, பேசியதை சேமித்து வைக்க... இப்படி பல வகைகளில் நமக்கு உதவுகிறது மெமரிகார்ட்.  முதலில் செல்போனில் பயன்படுதப்பட்ட மெமரிகார்ட், இப்பொழுது அனைத்து விதமான தகவல் தொடர்பு சாதனங்களிலும் பயனபடுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக டேப்டாப், டேப்ளட் பிசி, ஸ்மார்ட் போன், ipad, ipod, Digital Camera போன்ற கையடக்கச் சாதனங்களைச் சொல்லாம். காலத்திற்கு ஏற்ப, பயன்படுத்துவதற்கு ஏற்ப மெமரிகார்ட்களிலும் பல்வேறு வகையான கொள்ளவு, திறன், அளவு ஆகிய வகைகளில் நமக்கு கிடைக்கிறது.  காலத்திற்கேற்ப இதனுடைய தன்மையிலும், வகைகளிலும் மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் microSD card என்று சொல்லப்படும் இந்த மெமரி கார்ட்களை உலகளில் பார்க்கும்போது 400க்கும் அதிகமான நிறுவனங்கள் தயாரித்து வெளியிடுகின்றன.  மெமரி கார்டின் வகைகள்:  எட்டாயிரத்திற்கும் மேலான மாடல்கள் இதில் உள்ளன. குறிப்பாக இதை நான்கு வகைகளாகப் பிரிக்க

புதிய எல்.ஜி. G2 ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்..!

Image
எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் எல்ஜி. சமீபகாலங்களில் ஆண்டஃராய்ட் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பெருகிவருவதை வைத்து தனது அடுத்தடுத்த படைப்புகளில் ஆண்ட்ராய்ட் போன்களை தயாரித்து வெளியிட்டுவருகிறது LG நிறுவனம். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கும் முன்பு வெளியான எல்.ஜி. G2 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவிலேயே கிடைக்கிறது. LG G2 ஸ்மார்ட்போனில் 2.26 GHz குவாட்கோர் பிராசசர், கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே,, LCD IPS மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுக்காப்பமைப்புடன் கூடிய 5.2 அங்குல திரை ( 1920x1080 பிக்சல் திறன் கொண்டது), மேக்னடிக், கைரோ, அக்சல்ரோமீட்டர், லைக் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார்கள் போன்ற சிறப்பு பகுதிகளைக் கொண்டுள்ளது. மேலும் இப்போன் வேகமாக இயங்குவதற்கான 2.2GHz குவால்காம் சினாப்டிராகன் 800 குவாட்கோர் பிராசசர், ஆட்ரெனோ 330 ஜிபியூ, 2ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்நல் மெமரி ஆகியவையும் பெற்றிருக்கிறது. புல் ஹெச்டி ரெக்கார்டிங்கிற்கு பயன்படும் விதமான 13 பிக்சல் கேமரா இதில் உள்ளது. இக்கேமிராவில் இதில் 9 பாய்ண்ட் ஆட்டோ போகஸ், 8x டிஜிட்டல் ஜூம், லெட் ப்ளாஷ் சப

விண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்

Image
இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் இணைய தளங்களில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும், ரயில்வே டிக்கட் புக்கிங் தளம், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதனை நிர்வகிக்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) நிறுவனம், அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த அப்ளிகேஷனை வடிவமைத்துத் தந்துள்ளது. தற்போது இயங்கும் ஆன்லைன் தளத்துடன், புதிய தளமும் இயங்கும்.  சராசரியாக, நாளொன்றுக்கு 4 லட்சம் டிக்கட்கள் இணையம் வழியாகப் பதிவு செய்யப்படுகின்றன. சென்ற செப்டம்பர் 2 அன்று, மொத்தம் 5 லட்சத்து 72 ஆயிரம் டிக்கட்கள் பதிவு செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர், சென்ற ஆகஸ்ட் 12 அன்று, பதிவு செய்யப்பட்ட, 5 லட்சத்து 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையே முதல் இடத்தில் இருந்தது.  விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும், புதிய தளக் கட்டமைப்பினால், டிக்கட் பதிவு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சென்ற ஆகஸ்ட் மாதத்தில்

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது புதிய சாம்சங் மொபைல் கேலக்சி நோட்3..

Image
சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி சீரியஸ்களில் புதிய மாடலாக கேலக்சி நோட் 3  ஐ பெர்லினில் நடக்கும் IFA விழாவில் வெளியிட்டுள்ளது. சிறந்த புதிய டிசைன் மற்றும் கண்கவரும் வண்ணங்களில் கவர்களுடன் சாம்சங் கேலக்சி நோட்3 வெளிவருகிறது.  இது பிரபல இந்திய ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான சாகோலிக் மற்றும் இன்பீம் இணையதளத்தில் ரூபாய் 47,990 க்கு கிடைக்கும் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.  சாம்சங் கேலக்சியின் சிறப்பம்சங்கள்: (Specifications of GALAXY S3) 5.7 இன்ச் சூப்பர் பேனல் கொண்ட கேலக்சி நோட்3 2.3 HGZ ஸ்னாப்டிராகன் 80 Chipset 1,9 GHZ எக்ஸ்னோஸ் ஆக்டா கோர் பிராசசர்  13 மெகாபிக்சல் ரியர் கேமரா 2 மெகா பிக்சல் பிரண்ட் பேஸ் கேமரா இதில் 4k அளவுள்ள வீடியோக்களைப் படம் பிடிக்கும் வசதி  SDcard Slot உதவியுடன் 32 GB , 64 GB அளவிற்கு  மெமரி விரிவாக்கம் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஆபரேட்டிங் சிஸ்டம்  3200mAh பேட்டரி ,ஜிஎஸ்ம், எட்ஜ்  ஆகிய சிறப்புக் கூறுகள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் "கேலக்சி கியர் ஸ்மார்ட்வாட்ச்" - தொழில்நுட்பப் பார்வை...

Image
முதலில் கால்குலேட்டர். பிறகு கம்ப்யூட்டர்.. அடுத்து லேப்டாப்.. அடுத்து மொபைல்கள்... அதற்கடுத்து ஸ்மார்ட்போன்கள்... அதற்கு அடுத்ததாக இப்பொழுது ஸ்மார்ட் வாட்ச் என தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் குறுகி சுருங்கி கொண்டே செல்கிறது.  கால்குலேட்டருடன் மேலதிக பணிகளையும் செய்ய கம்ப்யூட்டரை உருவாக்கினார்கள். முழுமையான ஒரு கம்ப்யூட்டர் கிடைத்ததும் அதை எளிமைப்படுத்த நினைத்து, உருவம், பயன்படுத்தும் அப்கேஷன்களின் எண்ணிக்கை அனைத்தையுமே எளிமையாக்கியது தொழில்நுட்பம்.  அதற்கு அடுத்து ஒரு படி மேலே போய் கையடக்க தொலைபேசியிலேயே அனைத்து கம்ப்யூட்டிங் வேலைகளையும் செய்யும் அளவிற்கு கொண்டுவந்தனர்.  இப்பொழுது ஸ்மார்ட்வாட்சிலேயே அனைத்தும் செய்ய ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.. தொழில்நுட்ப வல்லுனர்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும்.  அந்த வகையில் புதிய ஸ்மார்ட் வாட்சை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.  புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் வாட்சை வடிமைத்துள்ளனர். தற்போதைக்கு அந்த ஸ்மார்ட் வாட்ச் அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன

மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும் "பேஸ்புக்" - புதிய அப்ளிகேஷன்..!

Image
பேஸ்புக் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு பேஸ்புக்கின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நண்பர்களைத் தொடர்புகொள்ள பயன்படும் எனத் தொடங்கிய பேஸ்புக் இன்று உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வெற்றிகண்டுள்ளது.  அதன்  மற்றுமொரு புதிய மைல்கல்லாக புதிய அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது.  அப்ளிகேஷனின் பெயர் Facebook for Every Phone என்பதாகும். இந்த அப்ளிகேஷனானது ஒவ்வொரு மொபைல் பயனரையும் பேஸ்புக் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டிருக்கும் பேஸ்புக் மேலும் பல புதிய யுக்திகளைக் கையாண்டு தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதில் முதன்மையாக திகழ்கிறது.  ஒவ்வொரு மாதமும் மொபைல் போன்கள் மூலமாக மட்டும் 85 கோடியே 35 லட்சம் பேர் பேஸ்புக்கைப் பயன்படுத்திகின்றனர்.  தற்போதைய கணக்கின்படி கணினி மற்றும் மொபைல் போன்ற டிஜிட்டல் சாதனங்களின் வழியாக பேஸ்புக்கை அணுகும் பயனாளர்களின் எண்ணிக்கை மட்டும் 130 கோடிக்கு மேல் என அந்நிறுவனத் தகவல் தெரிவிக்கிறது.  எந்த

இணையத்தில் ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விண்டோஸ் 8 க்கான IRCTC ன் புதிய அப்ளிகேஷன்..!

Image
IRCTC என்பது இந்தியாவின் முன்னணி e-commerce வலைத்தளமாகும். IRCTC என்பதின் ஆங்கில விரிவாக்கம் Indian Railway Catering Tourism Corporation என்பதாகும். இத்தளத்தின் மூலம் இணையம் வழியாக ரயில் மற்றும் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். மாதம் ஒன்றிற்கு சராசரியாக 12 மில்லியன் மக்கள் இத்தளத்தை விமான மற்றும் ரயில் போக்குவரத்து முன்பதிவிற்காக அணுகிறார்கள்.  மிக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய சர்வரை இது பயன்படுத்தி நாளொன்றிற்கு 4.15 லட்சம் பயணச்சீட்டுகளை விநியோகிக்கிறது. தற்பொழுது இந்நிறுவனம் விண்டோஸ் 8 சாதனங்களுக்கான புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.  விண்டோஸ்8க்கான IRCTC ன் புதிய அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷனை  விண்டோஸ்8 கம்ப்யூட்டர், டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம். இப்புதிய அப்ளிகேஷனைப் பயன்படுத்தி Ticket Booking செய்வதோடு PNR status Train Schedules Train Router Availability of tickets Booking History Cancellation போன்ற அடிப்படை விபரங்களையும் பெற முடியும். கூடுதலாக Quick Booking, Preferences, Favourites, Recent History, Live Notif