Posts

Showing posts with the label Whatsapp

பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க டிப்ஸ்

Image
இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். பெண்கள் பேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க  என்ன வழிகளை பின்பற்றலாம் என்று பார்க்கலாம். இன்றைக்கு பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருவது பேஸ்புக்கில் தான். இதில் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. காலையில் பேப்பரை திறந்தால் நிச்சயம் அதில் பேஸ்புக் நண்பரிடம் கற்பை இழந்த மாணவி, பேஸ்புக் காதலால் வந்த விபரீதம் அப்படி இப்படின்னு நிறைய செய்திகளை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். இவையனைத்துக்கும் முக்கிய காரணம் பெண்கள் தமக்கு அறியாத நபர்களின் Friend Requests யை ஏற்றுக்கொள்வது தான். இப்படி பெண்கள் ஏற்றுக் கொண்டவுடன் உடனே பெண்களின் இன்பாக்ஸூக்கு போய் Hi.. அப்படின்னு ஆரம்பிப்பாங்க அந்த ஆண்கள், அதுல இருந்து தான் தங்களது வேலையை இவுங்க ஆரம்பிப்பாங்க. இதோ அவுங்க என்னவெல்லாம் செஞ்சி பெண்களை கவுக்கறாங்கன்னு பாக்கலாம் வாங்க..... இன்பாக்ஸ்ல போய் Good morning, Good night சொல்லி ஜொல்லு ஊத்துவாங்க இவுங்ககிட்ட கொஞ்சம் கவனமா இருக்கணும் தப்பி தவறி அவுங்களுக்கு ரிப்ளே பண்ண...

Zoobe Cartoon - Voice நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்..

Image
நம்ம குரல்லையே அனிமேஷன் கேரக்டர்ஸ்ஸ ஈஸியா பேச வைக்கலாம்.. உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல்ல ப்ளேஸ்டோர்'ல போய்  Zoobe Cartoon - Voice' ன்ற அப்ளிகேஷன இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.. அதோட லிங்க் . இன்ஸ்டால் பண்ணிட்டு.. உங்களுக்குன்னு ஒரு ஓன் அக்கௌன்ட் இந்த  Zoobe Cartoon - Voice ஆப்'ல துவங்கிக்கோங்க.. அப்புறம் எந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் புடிச்சிருக்கோ அதா கிளிக் பண்ணி.. உங்க குரலை பதிவு செய்ங்க.. அப்புறம் ஆட்டோமேட்டிக்கா உங்களோட குரலுக்கு தகுந்தாற் போல அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர் தனது முக பாவங்களை வீடியோவாக வெளியிடும்.. அதனை நம் கேலரியிலும் சேமித்து கொள்ள முடியும்.. ஷேர் என்ற பட்டனை தொடர்ந்து பல சமூக வலைத்தளமான பேஸ்புக், ட்வீட்டர், இன்ஸ்டா, வாட்ஸப், பேஸ்புக் மெஸங்ஜர், போன்ற அனைத்திலும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழலாம் நண்பர்களே..!! குறிப்பு : சில கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டர்களின் டெம்ப்ளட்டுகள் குறைந்தபட்சம் Rs.80.00'ஐ செலுத்தினால் மட்டுமே நாம் அந்த கார்ட்டூன் அனிமேஷன் கேரக்டரை பெறமுடியும்..!! உங்கள்- கௌரிசங்கர் குணசேகரன் 

அதிரடி சலுகைகளுடன் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் ப்ளான் வெளியீடு..!!

Image
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை பதிவு செய்ய முடியும். மார்ச் 31-ஆம் தேதியுடன் ஆர் ஜியோவின் இலவச சேவைகள் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு நிறுவனத்தின் புதிய ப்ரைம் சந்தா வெளியிடப்பட்டது. அதாவது, ஆண்டுதோறும் ரூ.99/- என்ற ப்ரைம் மெம்பர்ஷிப் கட்டணம் தவிர்த்து ரூ.303/- என்ற மாதக் கட்டண திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் மூலம் வழக்கமான அதே சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் இரண்டு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சேவை பற்றி நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் போஸ்ட்பெய்டு மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் பிரைம் இல்லா வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆனால் சலுகைகள் வேறு வகைகளில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாள் திட்டமாக, பிரைம் சந்தாதாரர்கள் ரூ.19க்கு 200ஜிபி டேடாவை உபயோகிக்கலாம் என்றால், பிர...

வாட்சப்பில் வந்துள்ள புதிய ஸ்டேடஸ் வசதியை எவ்வாறு பயன்படுத்துவது..??

Image
உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.  இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  எப்படி இந்த வசதியைப் பெறுவது?  இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.  எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.  உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால்...

வாட்ஸ்அப் உபயோகிக்கும் பெண்களுக்கு..

Image
உஷார் சகோதரிகளே /தோழிகளே..! பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில். என்ன ஆபத்துகள்? ********************* * யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும். * உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும். * கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும். * உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது. * உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும...

வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு..

Image
உடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது.  நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.  இதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர்.  ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன.  இதிலிருந்து தப்பிக்கும் வழி...