Posts

Showing posts from August, 2015

புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் 'மார்ஷ்மல்லோ'..

Image
ஆன்ட்ராய்டு புதிய பதிப்பின் பெயர் 'மார்ஷ்மல்லோ' (Marsh Mallow) கூகுள் நிறுவனம் அறிவிப்பு. விரைவில் வெளியாகவுள்ள ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெல்லி பீன் (4.1), கிட்காட் (4.4), லாலிபப் (5.0) ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில், அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள்.  இந்த புதிய வெர்ஷனில் கைரேகையை பதிவு செய்யும் சென்சார்கள், அப்டேட் செய்யப்பட்ட பவர் சேவிங் மோடு, ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யவும், அப்கிரேடு செய்யவும், பெர்மிஷன்களை ஸ்டிரீம்லைனில் காட்டும் புதிய வசதியும் உண்டு.  சில ஆப்ஸ்களை இன்ட்ஸ்டால் செய்யும் போது பர்மிஷன்களை வாங்க வேண்டியிருக்கும். புதிய பதிப்பில் முதலில் இன்ஸ்டால் செய்துவிட்டு தேவைப்படும்போது பர்மிஷன்களுக்கு ரெக்வெஸ்ட் கொடுக்கலாம்.  உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்களில

விண்டோஸ் 10ல் நீக்கப்பட்ட அம்சங்கள்..

Image
  ஜூலை 29ல் அறிமுகம் செய்யப்பட்ட மைரோசப்டின் விண்டோஸ் 10-ல் இதுவரை விண்டோஸ் சிஸ்டத்தில் தரப்பட்ட சில அம்சங்கள் இதில் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற தகவல் சற்று ஏமாற்றத்தினைத் தரலாம். அவை எவை என்று இங்கு பார்க்கலாம். 1. விண்டோஸ் மீடியா சென்டர்: விண்டோஸ் 10லிருந்து நீக்கப்படும் மிகப் பெரிய வசதி விண்டோஸ் மீடியா சென்டர். மைக்ரோசாப்ட் தன் வலைமனையில் இதனை அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், விண்டோஸ் 7 புரபஷனல், விண்டோஸ் அல்ட்டிமேட், விண்டோஸ் 8 ப்ரோ, விண்டோஸ் 8.1 ப்ரோ ஆகிய சிஸ்டம் தொகுப்புகளிலிருந்து, விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொண்டால், அவற்றில், விண்டோஸ் மீடியா சென்டர் இருக்காது. அப்டேட் செய்யப்படுகையில் இந்த அப்ளிகேஷன் நீக்கப்படும். 2. டிவிடி இயக்கும் செயலி: விண்டோஸ் மீடியா சென்டர் வழியாக, டிவிடிக்களை இயக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கும். மீடியா சென்டர் நீக்கப்படுவதால், டிவிடிக்களை இயக்க தனியான ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ள வேண்டும். 3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில் நாம் இயக்கிக் கொண்டிருக்கும் செயலிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன. 4. விண்ட

4ஜி அதிவேக சேவை - இந்தியாவில் போட்டியிடும் நிறுவனங்கள்

Image
அதிவேகமாக இணையத்தைத் தரும் 4ஜி தொழில் நுட்ப சேவையினை வழங்க, மொபைல் சேவை நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் இந்த சேவையைத் தரும் முன்னர், முந்திக் கொண்டு தர, ஏர்டெல் முயற்சித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி டேட்டா சேவை தற்போது 20 நகரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பருக்குள் இது 44 நகரங்களில் வழங்கப்பட உள்ளது. மற்ற சில நகரங்களில், சோதனை முயற்சியில் உள்ளது. இப்போது இயக்கத்தில் உள்ள நகரங்களில் உள்ள பயனாளர்கள் தரும் பின்னூட்டத்தின் அடிப்படையில், மாற்றங்களை ஏற்படுத்தி, மற்ற நகரங்களில் இந்த சேவையை வழங்க இருக்கிறது. இந்த அதிவேக வயர்லெஸ் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம், தற்போது 3ஜி சேவைக்கு வாங்கப்படுவதைப் போலவே இருக்கும். 1 ஜி.பி.டேட்டா ரூ.250, 2 ஜி.பி. டேட்டா ரூ.450 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்றி தெரிந்துகொள்ளலாம்