இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் ஒரு பார்வை

AV Test Institute என்ற இந்நிறுவனம் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்டி வைரஸ் செயலிகளை அதன் தரம், செயல்படும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் இயங்கும் முதல் 5 தரமான ஆன்ட்டி வைரஸ் செயலிகள் பட்டியலிட்டுள்ளது. இந்த செயலிகள் மால்வேர்களை தடுப்பது, வைரஸ் இணையத்தளங்களை சுட்டிக்காட்டுவது, புதிய வைரஸ்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை கம்ப்யூட்டருக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுப்பது போன்ற அருமையான செயல்களை செய்யவல்லவை. கட்டணம் கொடுத்துப் பெறப்படும் அனைத்து வசதிகளும் இந்த இலவச ஆன்ட்டி வைரஸ் செயலியில் இருப்பதுதான் அதன் சிறப்பம்சம். 1. கொமோட ஆன்ட்டி வைரஸ். 2. இசெட் என்.ஓ.டி. 32 3. பிட் டிபண்டர் 4. பண்டா ஆண்ட்டி வைரஸ் 5. அவிரா கொமடோ ஆண்ட்டி வைரஸ் இந்த (Comodo's free antivirus) செயலியைப் பொறுத்தவரை, கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பில் என்ன அம்சங்கள் உள்ளனவோ, அதே அம்சங்கள், இலவசமாகத் தரப்படும் பதிப்பிலும் தரப்பட்டுள்ளன. எனவே, பெரும் பாலோனவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரப்பட்டுள்ள இரு தொழில் நுட்பங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. அவை, Host ...