கணனியில் தகவல் நினைவூட்டும் மென்பொருள்..
அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களை அல்லது சிறு குறிப்புக்களை எழுதி வைத்து அதனை அடிக்கடி பார்த்துக்கொள்ள
உதவுகின்றது Sticky Notes எனும் Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள்.
ஆனால் இது போன்ற ஒரு எளிமையான மென்பொருள் தமது Windowsகணனியில் இருப்பதனை அதிகமானவர்கள் அறிந்ததே இல்லை.
இதனை திறந்து கொள்ள Start Menu சென்று Search பகுதியில் Sticky Notes என தட்டச்சு செய்க.
இனி தோன்றும் Sticky Notes எனும் மென்பொருளை சுட்டுக.
பிறகு உங்களுக்கு தேவையான குறிப்புக்களை எழுதி வைத்துக் கொள்ளும் வகையில் ஒரு இடைமுகம் தோன்றும்.
பின் அதில் உங்களுக்கு தேவையான குறிப்புக்களை அல்லது அடிக்கடி ஞாபகத்தில் இருக்க வேண்டிய விடயங்களை பதிந்து வைத்துக்கொள்ளலாம்.
இதில் நீங்க உருவாக்கும் எழுத்துக்களினது தோற்றத்தினை நீங்கள் விரும்பிய வகையில் அமைத்துக் கொள்ள பின்வரும் Keyboard Shortcut களை பயன்படுத்துங்கள்.
தடித்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Bold text) =====> Ctrl+B
சரிந்த எழுத்துக்களாக தோன்றச் செய்ய (Italic text) =====> Ctrl+I
எழுத்துக்களுக்கு Underlined செய்ய =====> Ctrl+U
எழுத்துக்களுக்கு குறுக்காக கோடிட (Strikethrough) =====> Ctrl+T
எழுத்துக்களுக்கு Bullet செய்து கொள்ள =====> Ctrl+Shift+L
(குறிப்பிட்ட விசைகளை மீண்டும் அடுதுவதன் மூலம் இலக்கங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்)
எழுத்துக்களின் அளவுகளை பெரிதாக்கிக் கொள்ள ====> Ctrl+Shift+>
எழுத்துக்களின் அளவுகளை சிறிதாக்கிக் கொள்ள =====> Ctrl+Shift+<
மேலும் அதன் மேல் Right செய்வதன் மூலம் உங்களுக்கு விருப்பமான நிறத்தை அதன் பின்புலத்துக்கு இட்டுக்கொள்ளலாம்.
உங்கள் கணணியை நீங்கள் Shutdown செய்து விட்டு மீண்டும் துவக்கினாலும் அவைகள் நீக்கப்படாமல் அப்படியே இருக்கும்.
நன்றி
Comments