ஸ்மார்ட் போன் தொலைந்தால் என்னவாகும்.. (Anxiety Disorder)



ஸ்மார்ட் போன்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் நவீன வாழ்க்கையில் அதிகரிக்கும் நிலையில் அவற்றின் பாதிப்புகளும், பக்க விளைவுகளும் இப்போது கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இதில் சமீபத்திய வரவு ஸ்மார்ட் போன் கவலை.

எப்போதும் ஸ்மார்ட் போனை இறுகப் பற்றியிருக்கிறீர்களா? அடிக்கடி ஸ்மார்ட் போன் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளும் பழக்கம் இருக்கிறதா? எனில் நீங்கள் ஸ்மார்ட் போன் இழப்பு கவலையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது ஸ்மார்ட் போன் தொலைந்தால் ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய கவலை.

விலை மிக்க போனைப் பறிகொடுப்பது மட்டும் அல்ல, போனில் சேமிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பில்லாத தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முக்கியத் தகவல்களை இழக்க நேரும் ஆபத்து.

ஸ்மார்ட் போன்களின் செயல்திறன் காரணமாக அவற்றில் செய்யக்கூடிய பணிகளும் அதிகரித்துள்ளன. அவற்றில் சேமித்து வைக்கக்கூடிய ஆவணங்களும் அதிகரித்துள்ளன.

ஆக ஸ்மார்ட் போன் தொலையும் பட்சத்தில் இந்தத் தகவல்கள் தவறான கைகளில் சிக்கிப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் அதிகரித்துள்ளன. இதனை (Smartphone-Loss Anxiety Disorder) என்கின்றனர்.

மேலும் ஸ்மார்ட் போன் பயனாளிகள் பலரும் போன் தொலைந்தால் அதில் உள்ள தகவல்களைப் பாதுக்காக்கத் தேவையான வழிகள் பற்றி அறியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

போனில் உள்ள தகவல்களை என்கிரிப்ட் செய்து வைப்பது, குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் தகவல்கள் மறைந்து போகச்செய்யும் டைம்பாம் வழி, தொலைவில் இருந்து லாக் செய்வது என இதற்குப் பல வழிகள் இருக்கின்றன.

அதன் மூலம் அதில் உள்ள தகவல்களைப் பாதுகாக்கும் வழிகளை அறிந்து கொள்வது நன்கு என்று சொல்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க