பேஸ்புக் செய்திகளை மின்னஞ்சலில் பெற வேண்டுமா..?
பேஸ்புக் மூலம் தகவல்களை அனுப்புவதை இமெயில் மூலம் பெறும் வசதியை அந்நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்ஆப் சேவையை வாங்கியப் பிறகு, தினந்தோறும் புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பேஸ்புக் தகவல்களை இமெயில் உடன் இணைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் மெயில்களுக்கு அனுப்பப்படும் பெரிய இமெயில்கள், தகவல்களில் இடம்பெறுவதற்குப் பதிலாக வாடிக்கையாளர்களின் அடிப்படை இமெயில்களுக்கு அனுப்பப்படும்.
மேலும், பேஸ்புக் மெயில்கள் மூலம் தகவல்களை தகவல் பலகைகளில் பார்வையிட மட்டுமே முடியும். மேற்கொண்டு அந்த தகவல்களைத் தொடர விரும்பினால், அனுப்பியவரின் தகவல் பலகைக்குச் சென்று புதிதாக டைப் அடித்து தொடர வேண்டும்.
நன்றி
Comments