ஆப்பிள் டெக்னாலஜியை தகர்பபவர்களுக்கு 8 லட்ச ரூபாய் பரிசு..!

 
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C என இரண்டு சாதனங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜியை கொண்டுள்ளது. நீங்கள் கைரேகை போனை அன்லாக் செய்யும் வசதி இதில் உள்ளது. இந்த போனில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி இருப்பதால் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த டெக்னாலஜி பற்றி தொழில்நுட்ப பரவலாக பேசப்பட்டு வருகிறது.இந்த பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் செக்கியூரிட்டியை ஹாக் செய்ய முடியுமா இல்லை முடியாதா என்று கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.

இதனால் செக்கியூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் சிலர் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு ஒரு போட்டியை அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் டெக்னாலஜி செக்கியூரிட்டியையை தகர்பவர்களுக்கு 13,000 டாலர் அதாவது கிட்டதிட்ட 8 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் இது தான் அறிவித்துள்ள போட்டி.இதை கேள்விபட்ட ஹாக்கர்கள் ஆப்பிள் ஐபோன் 5Sன் விற்பனைக்காக காத்திருக்கின்றனர். இந்த போட்டிக்காக ஆர்டுராஸ் ரோஸன்பேக்கர் என்பவர் 10,000 டாலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த போட்டி ஆப்பிளின் அந்த டெக்னாலஜியில் பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்ய உதவும் (This is to fix a problem before it becomes a problem) என்று அவர் தெரிவித்தார். forbes.com அண்மையாக ஸ்பெயினை சேர்ந்த 36 வயது ராணுவ அதிகாரி ஒருவர் ஆப்பிள் ஐஓஎஸ்7 மொபைல் ஓ.எஸ்.ல் செக்கியூரிட்டி பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்தார் என்ற தகவலை வெளியிட்டுள்ளது அது இங்கு குறிப்பிடதக்கது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க