உலகின் அதிவேகமான மெமரிகார்ட் (SanDisk Extreme Pro)
மெமரிகார்ட் தயாரிப்பதில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பல முன்னணி
பிராண்டட் கம்பெனிகள் முதல் சிறிய கம்பெனிகள் வரை மெமரிகார்ட்களை தயாரித்து
வருகின்றன. மெமரி கார்ட் குறித்த கடந்த இடுகையொன்றில் மெமரிகார்ட் என்றால்
என்ன? அதுசெயல்படும் விதம் போன்ற தகவல்களையும், எந்தெந்த நிறுவனங்கள்
இவற்றைத் தயாரிக்கின்றன என்பதை தெளிவாக அறிந்துகொண்டோம். பதிவிற்கான
இணைப்பு இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
- இது ஒரு அதிவேக மெமரி கார்ட்.
- மெமரிகார்டின் பெயர்: Extreme Pro CFast 2.0
- இந்த புதிய மெமரிகார்டானது நூறு ஜிபி (100GB) செய்திகளை பரிமாற்றம் செய்துகொள்ள 4 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.
- 450 எம்பி/வினாடி என்ற வேகத்தில் எழுதக்கூடிய திறனைக் கொண்டுள்ளது. 256 ஜிபி சேமிப்பு கொள்ளவு கொண்டுள்ளது.
- இச்சிறப்புமிக்க மெமரிகார்ட்டின் விலை1809 அமெரிக்க டாலர்கள்.
- விரைவில் இந்த மெமரிகார்ட் ஆனது இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
- தற்போது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மெமரி கார்ட் என்றால் என்ன? அது செயல்படும்விதம் போன்ற மெமரிகார்ட் பற்றிய முழுமையான தகவல்களுக்கு "MicroSD CARD பற்றிய பயனுள்ள தகவல்கள்" என்ற தலைப்பில் அமைந்த பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
Comments