புதிய எல்.ஜி. G2 ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்..!

எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் எல்ஜி. சமீபகாலங்களில் ஆண்டஃராய்ட் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பெருகிவருவதை வைத்து தனது அடுத்தடுத்த படைப்புகளில் ஆண்ட்ராய்ட் போன்களை தயாரித்து வெளியிட்டுவருகிறது LG நிறுவனம்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கும் முன்பு வெளியான எல்.ஜி. G2 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவிலேயே கிடைக்கிறது.

LG G2 ஸ்மார்ட்போனில் 2.26 GHz குவாட்கோர் பிராசசர், கொரில்லா கிளாஸ் டிஸ்பிளே,, LCD IPS மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுக்காப்பமைப்புடன் கூடிய 5.2 அங்குல திரை ( 1920x1080 பிக்சல் திறன் கொண்டது), மேக்னடிக், கைரோ, அக்சல்ரோமீட்டர், லைக் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார்கள் போன்ற சிறப்பு பகுதிகளைக் கொண்டுள்ளது.



மேலும் இப்போன் வேகமாக இயங்குவதற்கான 2.2GHz குவால்காம் சினாப்டிராகன் 800 குவாட்கோர் பிராசசர், ஆட்ரெனோ 330 ஜிபியூ, 2ஜிபி ராம், 32 ஜிபி இன்டர்நல் மெமரி ஆகியவையும் பெற்றிருக்கிறது.

புல் ஹெச்டி ரெக்கார்டிங்கிற்கு பயன்படும் விதமான 13 பிக்சல் கேமரா இதில் உள்ளது. இக்கேமிராவில் இதில் 9 பாய்ண்ட் ஆட்டோ போகஸ், 8x டிஜிட்டல் ஜூம், லெட் ப்ளாஷ் சப்போர்ட் ஆகிய வசதிகளடங்கியுள்ளன.

தகவல் தொடர்பு மற்றும் இணையஇணைப்பிற்கு உதவும் 3G, 2G, wifi, bluetooth, NFC , GPS, A-GPS ஆகிய வசிதகளை உள்ளடக்கிய இச்சிறப்புமிக்க எல்ஜி போன் ஆண்ட்ராய்ட் 4.2 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது.

அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இச்சிறப்பு மிக்க ஸமார்ட்போன் இயங்கத் தேவையான மின்சக்தியை அளிப்பதற்கு இதில் 3000mAh பேட்டரி அமைந்துள்ளது.

இதன் விலை ரூபாய் 40499. பிரபலமான இந்திய ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?