விண்டோஸ் 8ல் இயங்கும் ரயில்வே டிக்கட் புக்கிங்

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்படும் இணைய தளங்களில், முதல் இடத்தைப் பிடித்திருக்கும், ரயில்வே டிக்கட் புக்கிங் தளம், தற்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனை நிர்வகிக்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) நிறுவனம், அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்த அப்ளிகேஷனை வடிவமைத்துத் தந்துள்ளது. தற்போது இயங்கும் ஆன்லைன் தளத்துடன், புதிய தளமும் இயங்கும். 

சராசரியாக, நாளொன்றுக்கு 4 லட்சம் டிக்கட்கள் இணையம் வழியாகப் பதிவு செய்யப்படுகின்றன. சென்ற செப்டம்பர் 2 அன்று, மொத்தம் 5 லட்சத்து 72 ஆயிரம் டிக்கட்கள் பதிவு செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 
இதற்கு முன்னர், சென்ற ஆகஸ்ட் 12 அன்று, பதிவு செய்யப்பட்ட, 5 லட்சத்து 4 ஆயிரம் என்ற எண்ணிக்கையே முதல் இடத்தில் இருந்தது. 
விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும், புதிய தளக் கட்டமைப்பினால், டிக்கட் பதிவு இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மொத்தம் ஒரு கோடியே 35 லட்சம் டிக்கட்கள் பதிவு செய்யப்பட்டன. சராசரியாக நாளொன்றுக்கும் 4.34 லட்சம் டிக்கட்கள் வாங்கப்பட்டன. 
சென்ற ஆண்டில், இதே மாத காலத்தில் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளின் எண்ணிக்கை, ஒரு கோடியே 23 லட்சமாகும். ஓராண்டில் இந்த வகையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?