அறிவியல் சாதனங்கள் அழிவுக்கா? ஆக்கத்திற்கா?

இந்த நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக செல்போனையும், லேட்-டாப்பையும்(Laptop) கூறலாம். கைக்கு அடக்கமான செல்போன் (Cellphone), இதில்தான் எத்தனைவிதமான பலன்கள்..பயன்பாடுகள்..!

cellphone
செல்போன்

கைக்கு அடக்கமான செல்போனில் எத்தனை வசதிகள்..! இருக்கும் இடத்திலிருந்தே இன்டர்நெட் பெறும் வசதி, சினிமா பாடல்களை (cinema songs)பரிமாறும் வசதி. ஒலி அலைகளை(voice) பரிமாறும் வசதி, ஒலியுடன் கூடிய ஒளிகளையும் (video) பரிமாறும் வசதி, SMS என்று சொல்லப்படுகிற குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதி, முகம் பார்த்து பேசும் வசதி, படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, ரேடியோ கேட்பது கால்குலேட்டர், .. இப்படி நிறையவே.. குறிப்பாக சொல்வதெனில் சமீபத்திய வசதி. வரைபடங்களை செல்போனில் இருந்தே பார்க்கும் வசதி. வழி தெரியாத பகுதிக்கு செல்போனில் இருந்தே வரைபடம் பார்த்து சரியான இடத்திற்கு செல்லும் வசதி (Google maps software உதவியால் சாத்தியமாகியது.).. இப்படி..


கண்ணாடி வடிவ தோற்றம்கொண்ட புதிய செல்போன்
cellphone
புதிய செல்போன்

வசதிகள் பெருக பெருக குற்றங்களும் மக்களிடையே பெருகிவிட்டன என்பது அப்பட்டமான உண்மை.

விஞ்ஞானத்தைப் பற்றி ஒரு வரியில் இப்படி குறிப்பிடலாம். விஞ்ஞானம் என்பது இருமுனையிலும் கூர்மைப்படுத்தப்பட்ட கத்தியைப் போன்றது. பென்சில் சீவவும் பயன்படுத்தலாம். கழுத்தை அறுக்கவும் பயன்படுத்தலாம். கவனமாக கையாளவில்லை எனில் அது நம்மையே குத்தி கிழித்து பதம் பார்த்துவிடும்.

முந்தைய பரப்பரப்பான செய்தி இப்படிப்பட்டதுதானே? கற்பிக்கும் ஆசிரியை மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொல்கிறான் என்றால், அத்தகைய வன்மத்தை தூண்டிவிடக்கூடிய அபாயங்களையும் மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் பரப்புவது இந்த அறிவியல் சாதனங்களையும், திரைப்படங்களையும் சொல்லலாம்.

யார்வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நினைத்த இடத்தில் தேவையில்லாத படங்களைப் பார்ப்பதும், வீடியோவைப் பார்ப்பதும் என்பது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது.

சமீபத்திய செய்தியின் படி கர்நாடக மந்திரிகளின் அட்டகாசம்.. அதுவும் சட்டமன்றத்திலேயே அரங்கேற்றியிருப்பது கேவலமான, அவமானகரமான செய்தி.

உலக அரங்கில் பண்பாட்டுக்குப் பெயர் போன இந்தியன் ஒவ்வொருவனையும் தலைகுனிய வைத்துவிட்டார்கள் இவர்கள்.

அரசியல் சாக்கடையில் மற்றுமொரு முடைநாற்றத்தை வெளிக்கொணர்ந்துவிட்டார் இதைப் படமெடுத்த வீடியோகிராபர்(videographer).

இப்படி தெரிந்த விஷயங்கள் ஒரு சிலதான். வெளி உலகுக்கு தெரியாமல் எத்தனையோ..? அத்தனையும் செய்பவர்கள் மனிதர்கள்தான்.. இவர்களையும் ஒரு பெண்தான் பெற்றெடுத்திருப்பாள்.?

பதவி ஒன்றை தகுதியாகக் கொண்டுவிட்டடால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதையில் இத்தகைய கேவலமான செயல்களில் ஈடுபட்டு, நாட்டுக்கும், நாட்டிலுள்ள மக்களுக்கும் தீராத களங்கத்தை உண்டுபண்ணியிருக்கிறார்கள்.

மந்திரிகளை படம்பிடித்த வீடியோகேமாராவும் அறிவியல் சாதனம் தானே.. ! இது நல்லதிற்கு பயன்பட்டிருக்கிறது.

அதே வீடியோ கேமராவால் எடுக்கப்பட்ட ஆபாச படத்தை பார்த்ததால்.. அதுவும் நாட்டு நடப்பைப் பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கும்போது விவஸ்தை கெட்டத்தனமாக சட்டமன்றத்திலேயே அமர்ந்து... கெட்டதை வெளிச்சம் போடவும் இந்த அறிவியலே பயன்பட்டிருக்கிறது.

முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களே இவ்வாறு நடந்துகொள்ளும்போது சாதாரண குடிமகன்களுக்கு சொல்லவும் வேண்டுமா?

இந்த செல்போனைக் கொண்டு எத்தனை குற்றங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றாக பழகிய பெண்களை ஆபாசப் படமெடுத்து மிரட்டுவது,
பிளாக் மெயில் செய்வது.. தவறான சகவாசத்தால் ஒரு சில பெண்கள் இப்படி சீரழிந்தும் போயிருக்கிறார்கள். இப்படி நிறையப் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்..

அறிவியல் சாதனங்களால் நிறைய நன்மைகள் ஏற்படுகிறதோ இல்லையோ.. வரும் கால சந்ததியினர் ஒழுக்கேடாக நடந்துகொள்ள இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.. இதைத் தவிர்க்கும் விதத்தில், எதிர்காலத்தில் இத்தகைய செயல்பாடுகளை குறைக்கும் வகையில், அறிவியல் சாதனங்களை வடிவமைக்கப்பட வேண்டும்.

எதிர்கால சந்ததியினரை காக்க இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் வெளிவரவேண்டும். அப்போதுதான் சீரழியும் இளைய சமுதாயத்தோடு, நாட்டு மக்களையும், நாட்டையும் நன்முறையில் வழிநடத்தவும், எதிர்காலத்தில் இதைப்போன்ற சிக்கல்களையும் தவிர்க்கவும் முடியும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க