ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 1...

(புதியவர்களுக்கு)
 
ஸ்பீடு பிரௌசிங் செய்ய  செய்ய என்ற இப்பகுதியில் அட்ரஸ் பாரில் எளிதாக வெப்சைட் யூ.ஆர்.எல் கொடுப்பது எப்படி என்பதையும், அதற்கான குறுக்கு விசைகள் என்னென்ன என்பதையும் பார்க்க இருக்கிறோம். 
எளிதாகவும், விரைவாகவும் பிரௌசிங் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். 
சாதாரணமாக நாம் பிரவுசிங் செய்யும்போது மௌஸ் (Computer mouse) மூலமே கிளிக் செய்து பிரௌஸ் செய்வோம். மௌசை விட  கீபோர்டை பயன்படுத்தும்போமு விரைவாக பிரோசிங் செய்ய முடியும். 
விரைவாக நீங்கள் பிரௌஸ் செய்ய கற்றுக்கொள்ள ஷார்ட் கட் கீ வழிமுறைகளையே. 
எந்த ஒரு பிரௌசருக்கு பொதுவான குறுக்கு விசைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினாலே நீங்கள் விரைவில் பிரௌசிங் செய்ய முடியும். 
easy-shortcuts-for-quick-browsing-without-mouse

வழிமுறைகள்: 

1. இணையதள முகவரியை முழுவதுமாக டைப் செய்வதை (www.google.com) விட்டு இணையதளத்தின் பெயரை மட்டும் (google) டைப் செய்து CTRL+ENTER செய்தால் முழுமையான வலைப்பக்கத்தின் முகவரி வந்துவிடும். 
உ.ம். google என டைப் செய்து CTRL+ENTER கொடுத்துப் பாருங்கள்..என்ன நிகழ்கிறது. அது www.google.com என மாறிவிடுகிறதா? 
ஆம்.. அவ்வாறு மாறிவிடும். 
ஒருவேளை .net என முடிந்தால் அதற்கு என்ன செய்வது?
அதற்கும் ஒரு குறுக்கு விசை உண்டு.. CTRL+SHIFT+ENTER கொடுத்துப் பாருங்கள்..என்ன நடக்கிறது.. www.google.net என மாறிவிடுகிறதா? ஆம் மாறிவிடும். 
அட்ரஸ்பாரில் மௌசை வைத்து கிளிக் செய்து கர்சரை தோன்றியபிறகே இவ்வாறு வெப் அட்ரசை டைப் செய்ய முடியும். நேரடியாக அட்ரஸ் பாருக்கு மௌஸ் வைத்து கிளிக் செய்யாமலே கர்சரை கொண்டு வர முடியும். அதற்கு F6 அழுத்துங்கள்.. இப்போ என்ன நிகழ்கிறது.. 
கர்சரானது அட்பாரில் தோன்றியிருக்கும். 
நீங்கள் ஒரு பிரவுசரை திறந்தவுடன் F6 அழுத்திப்பாருங்கள்.. உடனே அட்ரஸ்பாரில் ஏற்கனவே உள்ள முகவரி செலக்ட் ஆகிவிடும். உங்களுக்கு வேண்டிய இணைய முகவரியை நீங்கள் தட்டச்சிட்டு கன்ட்ரோல் என்டர் கொடுத்தால் அந்த வலைத்தளம் திறக்கும். 
குறிப்பு: இந்த F6 விசைக்குப் பதிலாக CTRL+L அல்லது ALT+D ஆகிய குறுக்கு விசைகளையும் பயன்படுத்தலாம். 
இதுபோன்ற நிறைய குறுக்கு விசைகள் உள்ளன. அவற்றை கற்றுக்கொள்வது முதலில் சிரம்மாக இருப்பினும் கற்றுக்கொண்ட பின் மிக எளிதாக இருக்கும். பிரௌசிங் செய்யும்போது அடிக்கடி மௌசை பயன்படுத்துவதை நீங்களே மறந்துவிடுவீர்கள். 
முக்கியமான குறிப்பு: எந்த ஒரு வெப்சைட் என்றாலும் அதன் முகவரியை (url) அட்ரஸ்பாரில் தட்டச்சிட்டு, அந்த தளத்தை திறந்து பழகவும். அப்பொழுதுதான் அந்த வலைத்தளத்தின் முகவரி (URL) நினைவில் நிற்கும். தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்கு இந்த F6 கீயைப் பயன்படுத்தினால் தானாகவே ஒரு புதிய வலைத்தளத்தை திறக்கும்போது F6 பயன்படுத்த நீங்கள் பழகி விடுவீர்கள். 
இதுபோன்று 50க்கும் மேற்ப்பட்ட குறுக்கு விசைகள் உள்ளன. ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க