லெனோவாவின் புதிய படைப்புகள்...

பெர்லின் நகரில் மிகப்பிரமாண்டமான வர்த்தக கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் சாம்சங், ஆசஸ், சோனி உட்பட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் படைப்புகளை வெளியிட்டுள்ளனர.

IFA 2013 வர்த்தக விழாவில் தனது படைப்புகளை வெளியிட்டுள்ள மற்றுமொரு முக்கிய நிறுவனம் லினோவா. இந்நிறுவனம் தனது படைப்புகளான லினோவா யோகா 2 புரோ, திங்க்பேட் எக்ஸ், திங்க்பேட் எஸ், லினோவா திங்க்பேட் டி, லினோவா பிளக்ஸ் 14, பிளக்ஸ் 15 என பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளை இந்தக் கண்காட்சியில் வெளியிட்டுள்ளது.

லேப்டாப், டேப்ளட், மொபைல் என அனைத்து சாதனங்களிலும் புதிய படைப்புகள் வெளியிட்டு வாடிக்கையாளர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. அதில் லினோவா எக்ஸ் என்ற டேப்லட் பிசியும், லினோவா வைப் எக்ஸ் என்ற ஸ்மார்ட் போனும் குறிப்பிடத்தக்கவை.

லினோவா வெளியிட்டுள்ள ஒவ்வொரு சாதனத்தையும், அதில் அடங்கியுள்ள சிறப்பு கூறுகளையும் பார்வையிடுவோம்.


1. Lenovo IdeaPad Yoga 2 Pro

Lenovo IdeaPad Yoga 2 Pro
இதில் புரோ 13.3 இன்ச் டிஸ்பிளேயும், நான்காவது ஜெனரேசன் இன்டல் பிராச்சரும் உள்ளது. டிஸ்பிளேயின் ரொசொல்யூசன் 32,00x1800.
இது ஒரு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்க கூடியது. 
டேப்ளட் பிசியைப் போல பின்புறமாக வளைத்தும் பயன்படுத்த முடியும். 
இந்த கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரியின் திறன் அதிகம். 9 மணி நேரத்திற்கும் குறையாமல்  நீடிக்கக் கூடிய பேட்டரி திறன். 
2. lenovo thikpad S440

 lenovo thikpad S440
லினோவோ திங்க்பேட் 14 இன்ச் திரை கொண்டது. இதில் I7 Hasswel processor உள்ளது.
அதுடன் 8GB RAM சிலாட் கொண்டுள்ளது.

3. Lenovo thinkpad T440



இதில் 512GB HardDisk மற்றும் 1GB ஹஸர்ட் டிஸ்க் என இரண்டு வகைகள் உள்ளன. இதிலும் I7 Hasswel processor உள்ளது.


4. Lenovo thinkpad X240


12.5 இன்ச் திரைகொண்ட இதில் ஐ7 ஹாஸ்வெல் பிராசசரும், 8GB RAM, 10 நேரத்திற்கு தாங்கும் பேட்டரி ஆகியவைகள் உள்ளன.


5.  Lenovo Flex 14, Lenovo Flex 15



இந்த இரண்டு லேப்டாப்களும் 300 டிகிர வரைக்கும் வளையும் தன்மை கொண்டது. இவை இரண்டு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்க கூடியவை.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?