சாம்சங் கேலக்சி நோட் 3 - "Flexible Display" ஸ்மார்ட்போன்..!
பிளக்சிபிள் டிஸ்பிளேயுடன் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் Samsung Galaxy Note 3 வெளியாகியுள்ளது.
சாம்சங்
நிறுவனம் கடந்த வாரம் புதுடில்லியில் நடந்த சாம்சங் தயாரிப்பு
வெளியீட்டு விழாவில் கேலக்சி 3 மற்றும் சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்சை
வெளியிட்டது. விழாவில் கேலக்சி நோட் 3 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு
இரண்டு மாதத்ததிற்கான 3, 2, EDGE போன்ற நெட்வொர்கில் பயன்படுத்தும்
வகையில் இன்டர்நெட் இலவசமாக வழங்கப்படும் என சாம்சங் விழாவில்
அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பான சாம்சங் வாடிக்கையாளர்களை வெகுவாக
கவர்ந்திழுத்துள்ளது.
புதிய சாம்சங் கேலக்சிநோட் ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பம்சம்:
புதிய சாம்சங் கேலக்சிநோட் ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பம்சம்:
- சாம்சங் கேலக்சி 3 நோட் சாதனத்தை தமிழ் மொழியிலும் இயக்கலாம்.
- தமிழ்மொழியில் இயங்குவதால் இணையத்தில் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே உள்ளீடு செய்து தேடலாம்.
- தமிழைப் பயன்படுத்தியே அனைத்து செயல்பாடுகளையும் Samsung galaxy note 3 ல் செய்ய முடியும்.
- பிளக்சிபல் டிஸ்பிளே (Flexible) வசதியைக் கொண்டது.
- ரப்பர் போல வளைந்து நெளிந்துகொடுக்கும் தன்மை.
- இதனால் இறுக்கமான பாக்கெட்களில் வைத்தாலும் பழுதடையாது.
- கீழே விழுந்து நொறுங்கிவிடும் என்ற பயம் இல்லை..
108 கிராம் எடையுடன் வெளிவந்துள்ள இந்தபோன் தன்னுடைய இலகுத்தன்மையால் சிறப்பு பெற்றுள்ளது. 5.7 இன்ஞ்சில் அளவுள்ள திரையானது முழுமையான HD AMOLED நுட்பத்துடன் அமைந்துள்ளது.
அதிக வேகமான செயலி (1.9 GHz Octa-core processor) இச்சாதனத்தை விரைவாக செயல்பட வைக்கிறது.
13 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமாவின் மூலம் இயற்கை காட்சிகள் மற்றும் விருப்பமான காட்சிகளைப் படம் பிடிக்க முடியும். விருப்பமான நிகழ்ச்சிகளை துல்லியமான வீடியோக்காட்சிகளாக பதிவு செய்யலாம்.
2 மெகா பிக்சல் கொண்ட முன்புறக் கேமரா 3G நெட்வொர்க் பயன்பாட்டின் மூலம் முகம்பார்த்து பேசலாம்.
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், கூகிள் ப்ளஸ் போன்றவைகளில் உள்ள நண்பர்களுடன் Video chat செய்ய முடியும்.
MicroSD Card மூலம் 64 GB வரைக்கும் மெமரியை விரிவாக்கமுடியும். 16GB, 32GB, 64GB ROM போன்ற சேமிப்பு வகை அம்சங்கள் உள்ளன.
இச்சிறப்புமிக்க ஸ்மார்ட் போனின் அதிகப்பட்ச விலை ரூபாய் 49,900.
ஆன்லைன் ஸ்டோர்களில் விலைகள் அந்தந்த நிறுவனங்களின் விற்பனை விதிமுறைகள், சலுகைகளுக்கேற்ப விலையில் சிறிய வித்தியாசங்கள் இருக்கலாம்.
கிடைக்குமிடங்கள்:
FlipKart, Snapdeal, Amazon.in போன்ற பிரபலமான ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
Comments