ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 3...
ஸ்பீடு பிரௌசிங் செய்ய பகுதியில் நாம் அடுத்து கற்விருப்பது கன்ட்ரோல் கீயைப் பயன்படுத்தி அடுத்தடுத்த டேப்களுக்கு செல்வது எப்படி ? கன்ட்ரோல் கீயைப் பயன்படுத்தி ஒரு டேபை குளோஸ் செய்வது எப்படி ? என்பதைப் பற்றித்தான்.
நீங்கள் உங்களுடைய பிரௌசரில் ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்களில்
வலைத்தளங்களைத் திறந்து வைத்திருக்கிறீர்கள். இப்பொழுது ஒவ்வொரு டேபிற்கும்
மாறி மாறிச் செல்ல வேண்டும்.
அடுத்தடுத்த டேப்கள் வரிசையாக மாறி மாறி தோன்றும். தற்பொழுது நடப்பு டேபை மூட வேண்டும் என்றால் CTRL+W அழுத்திப் பாருங்கள். என்ன நடக்கிறது?
எந்த டேப் இயக்கதில் உள்ளதோ அந்த டேப் குளோஸ் ஆகிவிடும். குளோஸ் செய்யப்பட்ட டேபை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர என்ன செய்வது?
CTRL+SHIFT+T அழுத்துங்கள். உடனே மூடப்பட்ட டேபானது மீண்டும் இயக்கத்திற்கு வரும். இந்த பகுதியில் பிரௌசரில்
- ஒரு புதிய டேபை எப்படி திறப்பது என்பதைப் பற்றியும்,
- ஒரு டேபிளிலிருந்து மற்றொரு டேபிற்கு தாவுவது எப்படி என்பதைப் பற்றியும்
- திறந்திருக்கும் ஒரு டேபை எப்படி மூடுவது என்பதைப் பற்றியும்,
- தவறுதலாக மூடிய டேபை மீண்டும் எப்படி இயக்கத்திற்கு கொண்டுவருவது என்பதைப் பற்றியும் தெரிந்துகொண்டோம்.
இந்த பயிற்சியைதும் ஓரிரு நாட்களுக்கு விடாமல் செய்துகொண்டால்... விரைவாக
பிரௌசிங் செய்வது சாத்தியமாகும். மௌசை அசைத்து ஒரு செயலை மேற்கொள்வதைக்
காட்டிலும், கீபோர்ட்டை பயன்படுத்தி விரைவாக வேலைகளைச் செய்ய முடியும்.
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்.
முந்தைய போஸ்டிற்கு ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 1...க்கு செல்ல கிளிக் செய்யுங்கள்.
ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 2... க்கு செல்ல கிளிக் செய்யுங்கள்.
முந்தைய போஸ்டிற்கு ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 1...க்கு செல்ல கிளிக் செய்யுங்கள்.
ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 2... க்கு செல்ல கிளிக் செய்யுங்கள்.
நன்றி.
Comments