ஸ்பீடு பிரௌசிங் செய்ய போஸ்ட் 2...

(புதியவர்களுக்கு)
 
ஸ்பீடு பிரௌசிங் செய்ய பகுதியில் கடந்த போஸ்ட்டில் அட்பாரில் வலைத்தள முகவரியை மௌஸ் பயன்படுத்தாமல் தட்டச்சிட்டு வலைத்தளத்தை திறப்பது எப்படி என்பதைப் பார்த்தோம். 
பிரௌசரில் நீங்கள் வலைத்தளங்களை வரிசையாக திறந்து வைத்திருப்பீர்கள்.  இப்பொழுது ஒவ்வொரு டேபிளிலும் உள்ள வலைத்தளத்தை பார்வையிட மௌஸ் பயன்படுத்தி அடுத்தடுத்த டேப்களில் கிளிக் செய்துதான் பார்வையிடுவீர்கள்.  
அவ்வாறில்லாமல் CTRL+1, CTRL+2 என கொடுத்து அடுத்த டேபிற்கு தாவலாம். உதாரணமாக நீங்கள் நான்காவதாக உள்ள டேபிற்கு செல்வதெனில் CTRL+4 என கொடுத்துப் பாருங்கள்....
easy-shortcuts-for-quick-browsing-without-mouse-part2

நான்காவதாக உள்ள டேபிள் உள்ள வலைத்தளப் பக்கம் காட்சிக்கு கிடைக்கும். செய்து பாருங்களேன்...!
இந்த பயிற்சியை தொடர்ந்து நான்கு நாட்கள் செய்து பயிற்சிப் பெற நீங்கள் ஒரு டேப்லிருந்து மற்றொரு டேபிற்குச் செல்ல மௌசை பயன்படுத்தவே மாட்டீர்கள். முதலில் இப்பயிற்சி மேற்கொள்ள சிரமாக இருக்கும். என்றாலும் தொடர்ந்து செய்து பழகினால் மௌசை விட விரைவாக கீபோர்ட்டைப் பயன்படுத்தியே ஒரு டேபிலிருந்து மற்றொரு டேபிற்கு செல்லலாம்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?