புதிய "டெராபைட் இன்டர்நல் மெமரி" கிராஸ்பார்..!

இன்டர்னல் மெமரி: 
ஐபோன், ஐபேட், டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்றவற்றின் சிறப்புக் கூறுகளைப் படிக்கும்பொழுது Internal Memory என்ற வார்த்தையைப் படித்திருப்போம். இன்டர்நல் மெமரி என்பது NAND based RRAM என்ற பிளாஷ் மெமரியைக் குறிப்பது ஆகும்.  தற்பொழுது புழக்கத்தில் உள்ள வார்த்தை இது ஆகும். 
சாதாரண இந்த வகை ப்ளாஸ் மெமரிகளில் பொதுவாக அதிக பட்சமாக 64GB வரைக்கும் இருக்கும். 
தற்பொழுது இன்டர்நல் மெமரியில் அதிகபட்ச அளவாக ஒரு டெராபைட் (1TB) அளவிற்கு சேமிக்கத் தக்க வகையில் ஒரு புதிய நினைவகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு டெராபைட் என்பது 1024 GB ஆகும். இந்த புதிய வகை நினைவகத்திற்குத்தான் கிராஸ்பார் (Crossbar) என்று பெயர். 
இந்நினைவகத்தை உருவாக்கியவர் Wei LU என்பவர். இவர் அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றுகிறார். 
Crossbar நினைவகத்தின் சிறப்பம்சங்கள்: 
  • மற்ற நினைவகங்களைவிட இதனுடைய பரும அளவு சிறியது. 
  • இந்த நினைவகம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவும் இருபது மடங்கு குறைவு. 
  • இந்நினைவகத்தில் ஒரு வினாடிக்கு 140GB அளவுள்ள டேட்டாவை எழுத முடியும். 
  • இதில் நினைவகக் கொள்ளளவு 200 மடங்கு அதிகமாக இருக்கும். 
கிராஸ்பார் நினைவகத்தின் பதிவுரிமைகள் மற்றும் சிறப்புத் தகவல்கள்: 
  • இந்நினைவகத்திற்கு 100 காப்புரிமைகளை பெற்றுள்ளனர். crosssbar  நிறுவனத்தில் 50 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 
  • Artiman Ventures, Kleiner Perkins Caufield and Byers போன்ற நிறுவனங்கள் இந்த Crosssbar  Memory க்காக 25 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன.
  • இதுபோன்ற நினைவகங்கள் தயார் செய்து வெளியிடுவதற்கு பல வருடங்கள் பிடிக்கும். தொழில்நுட்பங்கள் அதுபோன்ற சிக்கலான அமைப்பைக் கொண்டிருப்பவை. ஆனால் இந்த கிராஸ்பார் நினைவகம் மூன்றே வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS