புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

நண்பர்கள் பலரும் அலைபேசியில் அழைக்கும் போது, என்ன மாதிரி கணினி வாங்கலாம் என்று ஒரு கேள்வி கேட்கின்றார்கள். நன்றாக கணினியில் இயங்கும் நண்பர்கள் என்ற போதும், நிறைய நண்பர்களுக்கு கணினி Configuration எனப்படும் ஒன்று தெறிவது இல்லை. அவற்றைப் பற்றி இன்று விரிவாக காண்போம். இதில் ஒரு புதிய கணினி, மடிக்கணினி நீங்கள் வாங்கும் போது இவற்றை தான் கட்டாயம் பார்க்க வேண்டும்.
Monitor என்ற ஒன்றை தவிர மேசை கணினிக்கும், மடிக் கணினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே கூறும் அனைத்தும் இரண்டுக்கும் சேர்த்தே. 
 
இவை அனைத்தும் இன்றைய நிலைக்கு (ஜூலை  2013) க்கு சிறந்தவை. நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் புதியதாக மார்க்கெட்டில் என்ன உள்ளது என்று பார்த்து வாங்கவும்.

1. Processor 

இது தான் உங்கள் கணினியின் மூளை போன்றது. நீங்கள் செய்யும் அத்தனை விசயங்களையும் இயக்குவது இது தான். இது இல்லை என்றால் எதுவுமே இல்லை. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள், இதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். 
 
தற்போதைய நிலையில் எது புதியதாக வந்து உள்ளது என்று பார்த்து வாங்குதல் நலம். இப்போதைக்கு (மே 2012), நீங்கள் வாங்கும் கணினியில் Processor Intel Pentium Dual Core 2nd Generation என்பதை கடைசியாக கொள்ளலாம். Pentium (1,2,3,4) வரிசை என்றால் தவிர்க்க முயலவும். அவை கொஞ்சம் பழையவை. சமீபத்திய ஒன்று Core i 7 4th Generation. 
 
அத்தோடு இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், Processor Speed. இதைப் பொறுத்தே உங்கள் உங்கள் கணினியின் செயல்பாடு அமையும். இது குறைந்த பட்சம் 2.2 GHz என்ற அளவில் இருக்க வேண்டும்(ஏன் என்று விளக்க தனி பதிவே எழுத வேண்டும், எனவே அதை தனியே சொல்கிறேன்.). 

2. RAM

உங்கள் கணினியின் இருதயம் என்றால் அது இது தான். Processor சொல்லும் வேலைகளை என்ன வேகத்தில் முடிக்க வேண்டும் என்று தீர்மானிப்பதும் இதுவே. எனவே இது மிகச் சிறந்த அளவில் இருந்தால் மட்டுமே உங்களால் வேகமாக இயங்க முடியும். இல்லை என்றால் SETC Bus கள் போல மெதுவாக தான் உங்கள் கணினி இயங்கும். 
 
தற்போதைய நிலையில் (July 2013) 4GB RAM என்பது சரியான ஒன்று. 2GB என்பது மெதுவான கணினிக்கு என்று மாறிவிட்டது. ஆனாலும் ஏற்கனவே கணினி உள்ளவர்கள் 2GB-யை பயன்படுத்தலாம். அதற்கும் குறைவாக இருந்தால் மாற்ற முயற்சித்தல் நலம்.  Photoshop போன்ற பணிகளில் ஈடுபடுவோர் 8GB RAM உள்ள கணினி வாங்குதல் நலம். 
 
அதே போல DDR என்ற ஒன்றை சொல்லி தருவார்கள் புதியதாக வாங்கும் நண்பர்கள் DDR 3 தெரிவு செய்யலாம்.

இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும், புதிய கணினி வாங்கும் போது Processor  மற்றும் RAM போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும். Intel Pentium Dual Core 2nd Generation என்றால் 4GB RAM போதும், Core i-7 என்றால் 8GB RAM சரியாக இருக்கும். மிகக் குறைந்த அளவு என்றால் 2 GB-க்கு கீழே மட்டும் புதியவர்கள் செல்ல வேண்டாம். 

3. Hard Disk or HDD

உங்கள் தகவல்கள் அனைத்தையும் சேமித்து வைக்கும் இதன் பணி அளப்பரியது. புதியதாக கணினி வாங்கும் நண்பர்கள் குறைந்த பட்சம் 320GB SATA HDD வாங்கவும்.. தகவல்கள் அதிகம் சேகரிக்க குறைந்த பட்சம் இது தேவை. அதிக பட்சம் எவ்வளவு என்பதை தெரிவு செய்வது உங்கள் விருப்பம். 

4. DVD R/W Drive

DVD Drive உங்கள் கணினியில் வன்தட்டு எனப்படும் CD, DVD களை இயக்க உதவுகிறது. இதற்கு Configuration என்று ஒன்றும் சொல்ல இயலாது. ஆனால் கேபிள் மட்டும் SATA எனப்படும் 4-Pin  உள்ளதா என்று கேட்டுக் கொள்ளவும். இன்றும் 40 -pins உள்ள IDE எனப்படும் பழைய டிரைவ்களை தள்ளி விடும் ஆட்கள் உள்ளார்கள். 

5 . Mouse/Kayboard

உங்கள் வேலைகளை நீங்கள் இவை இரண்டையும் பயன்படுத்தியே செய்கிறீர்கள். மௌஸ் இப்போது எல்லா இடத்திலும் optical வகைதான் வருகிறது அதில் பிரச்சினை இல்லை. Keyboard உங்கள் விருப்பம். 

6. Graphics Card

இது Gaming, Graphic Design போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்களுக்கு பயன்படும். இதை 1GB தெரிவு செய்யலாம். 

7. Monitor 

கணினி என்றால் 17 Inch என்பதை மிகக் குறைவாக கொள்ளலாம். மடிக்கணினி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்யலாம். 

8. Pen Drive 

பல ஆயிரம் போட்டு கணினி வாங்கும் பலரும், இதில் தவறு செய்வார்கள். 2GB Pen Drive வாங்கிட்டு வந்துட்டு பத்தாமே போயிடுச்சே என்று யோசிப்பார்கள். எனவே பென் டிரைவ் வாங்கும் போது தற்போதைய நிலையில் 16GB வாங்கலாம். இதனை வாங்கும் போது நல்ல நிறுவனத்தின் பென் டிரைவ் ஆக வாங்கவும். 
 
இவைதான் புதியதாக கணினி வாங்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை. நீங்கள் படிக்கும்போது ஏதேனும் சந்தேகம் என்றால் என்னை g.gowrisankar1391@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் செய்யலாம். [புதிய கணினி குறித்த கேள்விகளுக்கு மட்டும் இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்]. உடனடியாக பதிலளிக்க முயற்சி செய்கிறேன்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க