சாம்சங் "கேலக்சி கியர் ஸ்மார்ட்வாட்ச்" - தொழில்நுட்பப் பார்வை...

முதலில் கால்குலேட்டர். பிறகு கம்ப்யூட்டர்.. அடுத்து லேப்டாப்.. அடுத்து மொபைல்கள்... அதற்கடுத்து ஸ்மார்ட்போன்கள்... அதற்கு அடுத்ததாக இப்பொழுது ஸ்மார்ட் வாட்ச் என தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் குறுகி சுருங்கி கொண்டே செல்கிறது. 
கால்குலேட்டருடன் மேலதிக பணிகளையும் செய்ய கம்ப்யூட்டரை உருவாக்கினார்கள். முழுமையான ஒரு கம்ப்யூட்டர் கிடைத்ததும் அதை எளிமைப்படுத்த நினைத்து, உருவம், பயன்படுத்தும் அப்கேஷன்களின் எண்ணிக்கை அனைத்தையுமே எளிமையாக்கியது தொழில்நுட்பம். 
samsung-galaxy-gear-smartwatch-uses-and-parts-of-specifications
அதற்கு அடுத்து ஒரு படி மேலே போய் கையடக்க தொலைபேசியிலேயே அனைத்து கம்ப்யூட்டிங் வேலைகளையும் செய்யும் அளவிற்கு கொண்டுவந்தனர். 
இப்பொழுது ஸ்மார்ட்வாட்சிலேயே அனைத்தும் செய்ய ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.. தொழில்நுட்ப வல்லுனர்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும். 
அந்த வகையில் புதிய ஸ்மார்ட் வாட்சை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது சாம்சங் நிறுவனம். 
புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் வாட்சை வடிமைத்துள்ளனர். தற்போதைக்கு அந்த ஸ்மார்ட் வாட்ச் அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் போனுடன் இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டடுள்ளது.
samsung-galaxy-gear-smartwatch-uses-and-parts-of-specifications
அவ்வாறு இணையாக்கப்பட்ட ஸ்மார்ட் வாட்சானது புளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் தொடர்புகொண்டு இயங்கும். இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் (டேப்ளட் பிசி) இரண்டு மீட்டர் தொலைவில் இருக்க வேண்டியது அவசியம்.
சாம்சங் கேலக்சி வாட்ச்-ன் பயன்கள்: 
போனிற்கு வரும் டெக்ஸ்ட் மெசேஜ்களைப் (Text MSG) ஸ்மார்ட்வாட்ச்லேயே பார்த்துக்கொள்ளலாம். போனிற்கு வரும் அழைப்புகளையும் (Phone calls) பார்க்கலாம்.
அழைப்புகளை ஏற்று பேசலாம். தேவையில்லை எனில் நிறுத்திவிடலாம். இதற்காக ஸ்மார்ட்வாட்சில் ஸ்பீக்கர் மற்றும் மைக் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கடிகாரப் பட்டையில் 1.9 மெகா பிக்சல் திறன் கொண்ட கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது. 
samsung-galaxy-gear-smartwatch-uses-and-parts-of-specifications
சாம்சங் கேலக்சியின் சிறப்பம்சங்கள்: 
1.6 அங்குல AMOLED டச் ஸ்கிரீன் அமைந்துள்ளது.
ஸ்மார்ட் வாட்ச்சில் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தவென ஒரு பட்டன் உள்ளது.
பட்டனை அழுத்திய பிறகு Swipe செய்து மற்ற அப்ளிகேஷன்களைப் பார்க்கலாம்.
வாய்ஸ், மேமோ  ரெக்கார்டர், அழைப்புகளின் பட்டியல், போன்புக் , மியூசிக் பிளேயர் போன்ற பல்வேறு பயனுள்ள அப்ளிகேஷன்களை திரையில் காணலாம். 
சாம்சங் ஸ்மார்ட் வாட்சின் குறைகள்: 
இது புதிய புளூடூத் பதிப்பு நான்கில் மட்டுமே இயங்குவதால் புளூடூத் 4 வசதிகொண்ட ஸ்மார்ட் போனுடன் மட்டுமே தொழிற்படும். இதனால் பழைய ஸ்மார்ட்போன்களை இதனுடன் இணைத்து செயற்படுத்த முடியாது. 
இந்த ஸ்மார்ட் வாட்சைப் பயன்படுத்த கண்டிப்பாக இதனுடன் ஒத்திசைந்து இயங்கும் சாம்சங் 5.7 அங்குல டேப்ளட் பிசியும் இருக்க வேண்டும். 
இதன் விலை அமெரிக்க மதிப்பில் 300 டாலர். 
ஒரு வகையில் சொல்லவதெனில் டேப்ளட் பிசிக்களுக்கான சிறிய ரீமோட் இது.  
சாம்சங் கேலக்சி கியர் வாட்ச், சாம்சங் நோட் 3 சாதனத்துடன் இணைவிக்கப்பட்டே இயங்கும். மற்ற நிறுவன போன்களுடனோ அல்லது சாம்சங்கின் பழைய பதிப்பு போன்களுடன் இணைந்து செயல்படாது. 
சாம்சங் நிறுவனத்தாரின் கருத்து: 
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இணையத்திலுள்ள தகவல்களை பெற்றுக்கொண்ட பழக்கப்பட்ட பயனர்கள், ஸ்மார்ட் போன்கள் வந்தவுடன், கையடக்க போன்களில் கம்யூட்டிங் வேலைகளை செய்யவும் - இணையத்தையும் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டதை போல... இனி எதிர்வரும் காலங்களில் ஸ்மார்ட் வாட்சையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்வார்கள். எனவே இதன் தேவை வருங்காலத்தில் மிகுதியாக இருக்கும் என நம்புகிறது சாம்சங். 
உண்மையில் அதுதான் நடக்கப்போகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத் தகவல் தொடர்பு சாதனங்கள் வெளிவந்த பிறகு இவை அனைத்துமே சாத்தியம்தான். 
டிஜிட்டல் சாதனத்தின் உருவத்தின் அளவுகள் குறைவதும், அதில் உள்ள பயன்பாடுகள் அதிகரிப்பதும்தானே டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி.. 
அந்த விதிமுறைகளின் படி பார்த்தால் நிச்சயம் ஸ்மார்ட்வாட்ச்களின் வளர்ச்சியும், பங்களிப்பும், தேவையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
நன்றி.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க