MS Office - இல் Auto Save வசதியை Enable செய்வது எப்படி? [Word, PPT, Excel]


MS Office - இல் வேலை செய்து கொண்டிருக்கும் போது கணினி Shutdown அல்லது Not Responding போன்றவற்றால் திடீர் என்று கணினி இயங்க மறுக்கலாம். ஒரு பெரிய டாகுமென்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தால்  , அது Save செய்யப்படாமல் இருந்தால் அவ்வளவு தான். நமக்கு தலைவலியே வந்து விடும். 
இதை தவிர்த்து அதில் Auto - Save என்னும் ஒரு வசதி மூலம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை தானாகவே டாகுமென்ட் Save ஆகும் படி செய்தால், மேற்சொன்ன பிரச்சினையின் போது நமக்கு கொஞ்சம் தலைவலி குறையும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 
முதலில் எந்த ஒரு டாகுமென்ட் வேலையை ஆரம்பித்தாலும் முதலிலேயே ஒரு பெயர் கொடுத்து Save செய்து கொள்ளுங்கள். 
இப்போது உங்கள் டாகுமென்ட்டில்  File என்பதை கிளிக் செய்ய வேண்டும். (2007, 2010 என்றால் ஒரு Icon இருக்கும்.) அதில் Word Options என்பதை தெரிவு செய்யுங்கள். 
இப்போது வரும் பகுதியில் Save என்பதை கிளிக் செய்யுங்கள். 
இப்போது "Save AutoRecover information every" என்பதில் ஏற்கனவே 10 நிமிடங்கள் என்று இருக்கும், அதை 1 நிமிடம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். இப்போது ஓகே கொடுத்து விடுங்கள். 
அவ்வளவு தான் உங்கள் டாகுமென்ட் இனி ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு முறை தானாகவே Save ஆகி விடும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க