இந்திய Android App Developers-க்கு சந்தோஷ செய்தி


ஆன்ட்ராய்ட் பயனர்கள் அனைவருக்கும் Home Page என்றால் அது Google Play தான். கிட்டத்தட்ட 7 லட்சம் Applications இருக்கின்றன. அதில் பல இலவசம் என்ற போதும் சில கட்டண முறையிலும் கிடைகின்றன. அவற்றையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். 
அத்தகைய கட்டண மென்பொருட்களை விற்க இதுவரை குறிப்பிட்ட நாடுகளை மட்டுமே கூகுள் அனுமதித்து வந்தது. அந்த பட்டியலில் கடந்த மாதம் இந்தியாவை இணைத்தது, ஆனால் மறுநாளே இந்தியா நீக்கப்பட்டு விட்டது. இது குறித்து கூகுள் எந்த செய்தியும் வெளியிடவில்லை.
ஆனால் மறுபடியும் இந்தியா Paid Application - களை விற்கும் நாடுகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. October 19 ஆம் நாள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை Google Play Developers வலைப்பூவில் அதன் மேனேஜர் Mr. Brahim Elbouchikhi அறிவித்துள்ளார். 
இது மட்டும் Google Play தளத்தில் இந்தியர்களின் பங்கு குறித்து சுவாரஸ்யமான விசயங்களையும் அவர் சொல்லி உள்ளார். 
  • கடந்த வருடம் Google Play தளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 400% அதிகரித்துள்ளது. 
  • கடந்த ஆறு மாதத்தில் இந்தியாவை சேர்ந்த Android Users டவுன்லோட் செய்த Applications எண்ணிக்கை அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளை அதிகம். 
  • Applications Download செய்வதில் உலக அளவில் இந்தியா நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.  
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே இந்திய Android App Developer களுக்கு தங்கள் Application - களை விற்கும் வசதியை Google Play தந்துள்ளது. 
ஏற்கனவே உங்கள் Apps இலவசமாக கொடுக்கப்பட்டு இருந்தால் இனி அவற்றை Monetize செய்ய முடியும், புதிய Apps களை Paid App ஆக விற்க முடியும். 
அதோடு இந்திய ரூபாயை Google Play தளத்தில் Support ஆகும் படி மாற்றி உள்ளதால் கட்டண App-களை வாங்கும் நபர்களுக்கும் இனி எளிதாக இருக்கும். 
கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை ஆகாது. காரணம் இது அதிகாரப்பூர்வ அறிவுப்பு, அதோடு பல வசதிகள் இந்தியாவிற்கு சாதகமாக மாற்றிய பின் தான் இந்த அறிவிப்பே வந்துள்ளது. 
நீங்களும் ஒரு Android App Developer என்றால் உங்களுக்கு வாழ்த்துகள் :-)

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?