C புரோகிராமிங் - Part 3
சி 1969 முதல் 1973 இடையேயான காலத்தில்
டென்னிஸ்ரிச்சி(Dennis Ritchie) என்பவரால் பெல் (AT&T Bell Telephone
Laboratories) சோதனைக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.
யுனிக்ஸ்
என்பது ஒரே நேரத்தில் பல வேலை செய்யக்கூடிய (Multi-tasking) மற்றும் பல
பயனாளர்கள் (Multi-User) கையாளக் கூடிய இயக்குதளமாகும்(Operating
System).1969ல் முதலில் யுனிக்ஸானது அஸம்பிளி லாங்குவெஜால் (Assembly
Language) AT&T Bell Telephone Laboratories நிறுவன பணியாளர்களால்
உருவாக்கப்பட்டது. அதில் டென்னிஸ் ரிச்சியும் ஒருவர்.
பின்
1973ல் யுனிக்ஸ் முழுமையும் சியால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. இதில்
சியானது மேலும் பல சிறப்புகளை புகுத்த உதவியது. மேலும் வேறுபட்ட
வன்பொருளிளும் யுனிக்ஸை எளிதாக புகுத்தி (Portable)இயங்கும்படி செய்வதில்
சி உதவியது.
சியில்
எழுதப்பட்ட புரோகிராமானது எந்தவொரு ஆப்பரேட்டிங்சிஸ்டத்திலும் கம்பைலர்
உதவிகொண்டு மெசின் கோடாக மாற்றி நாம் இயக்கவல்லது. இதற்கு நாம் கோடில்
ஒருசில மாற்றங்களை செய்தாலே போதுமானது.சியானது எளிதாக வன்பொருளின்
நினைவகத்தை கையாளக்கூடியது. எனவேதான சி-யானது மைக்ரோ கண்ரோலர் (Micro
Controller) முதல் சூப்பர் கம்யூட்டர் (Super Computer) வரை
உபயோகிக்கப்படுகின்றது.
சி-யில்
எழுதப்பட்ட புரோகிராமை இயக்க நமக்கு கம்பைலர் உதவியாக உள்ளது. டாஸ்
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சி கம்பைலர்கள், விண்டோஸ் இயக்கத்தில்
இயங்கும் கம்பைலர்கள், யுனிக்ஸ் இயக்கத்தில் இயங்கும் கம்பைலர்கள் உள்ளன்.
இவற்றிற்குள்ள ஒரே வேறுபாடு பிராசசர் அளவு மட்டுமே.
நீங்கள்
உங்களுக்கு பிடித்த, தகுந்த கம்பைலரை உபயோகித்து புரோகிராம்
எழுதிபார்க்கலாம்.சில கம்பைலர்களை பற்றி அடுத்த பதிப்பில் பார்க்கலாம்..
Comments