கூகுள் நிறுவனத்திற்கு இந்தியா தரும் வாய்ப்பு
இந்தியா, கூகுள் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்புகள் தரும் நாடாக உள்ளது.
இங்கு இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இதற்கான முதன்மைக் காரணம் ஆகும்.
தற்போது
12 கோடி பேர் இனையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 7 கோடி பேர்,
தங்கள் ஸ்மார்ட் போன்கள் வழி, இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஓராண்டில், உலக அளவில் ஸ்மார்ட் போன் வழி இணையப் பயன்பாடு, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 120% உயர்ந்துள்ளது.
சென்ற வாரம், கூகுள் மேப்ஸ், இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடியைக்
காட்டும் வசதியை தன் மேப்ஸ் இணைய தளத்தில் அறிமுகப்படுத்தியது. அப்போது
கூகுள் ப்ராடக்ட் மேனேஜர் டாரன் பேக்கர் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.
எளிதான போக்குவரத்தினைக் குறிக்க பச்சை நிறத்தினையும், சிறிய அளவிலான
தாமதத்தினைக் குறிக்க மஞ்சள் நிறத்தினையும், பெரிய அளவில் போக்குவரத்து
நெருக்கடியைக் குறிக்க சிகப்பு வண்ணத்தினையும், கூகுள் மேப்ஸ்
காட்டுகிறது.
போக்கு வரத்து குறித்த தகவல்களைப் பெற, ஸ்மார்ட் போன் பயன்படுத்தும்
வாடிக்கையாளர்களையே கூகுள் சார்ந்துள்ளது. அவர்களிடம் இது குறித்து பேசி
உதவியைப் பெற்று வருகிறது.
Comments