பணம் எடுப்பதற்கு ஒரு புதிய தொழில்நுட்பம்...

இன்று ATM பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வீட்டில் பணத்தை கத்தை கத்தையாக வைக்காமல், பாதுகாப்பாக வங்கியில் சேமித்துவைத்து, வேண்டும்போது அதை எடுத்துக்கொள்ளும் எளிமையான வசதியை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை ATM மெஷின்கள்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட ATM மெஷின்களிலும், சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, திருட்டுதனமாக போலியான ATM CARD களைப் பயன்படுத்தி பிறர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் எடுத்துவிடும் சாமர்த்திய சாலிகள், தொழில்நுட்ப திருடர்கள் இருக்கவே செய்கின்றனர்.

இந்த படத்தில் கைரேகையைக் கொண்டு எப்படி ATM கண்டுணர்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள். ..

இனி அதுபோல் உங்கள் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை போலியாக ATM CARD பயன்படுத்தி எடுக்க முடியாது.

ஜப்பானில் இதைத் தவிர்க்கும்பொருட்டு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த வசதிக்கு பெயர் Palm Scanning ATM.  

இயற்கையில் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டு இருப்பது கைரேகைகள்தான்..

எனவேதான் பிரபல குற்றவாளிகளின் கைரேகை அடங்கிய ரெக்கார்ட்களை காவல்துறை சேகரித்து வைத்திருக்கிறது. ஏதேனும் குற்றம் நடந்தால், உடனே கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகைகளை சேகரிப்பது இதற்காகத்தான். இயற்கையின் இந்த அற்புத படைப்பை இனி ATM க்கும் பயன்படுத்த முடியும்.

இதனால் உரியவர் தவிர மற்றவர்கள் யாரும் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது. ATM சென்று உங்கள் கைரேகையை பதியும்போது Scanning நடைபெற்று, உரியவர் நீங்கள்தான் என்று உறுதிப்படுப்பட்ட பின்னரே உங்களுக்கு பணம் கிடைக்கும். பயோமெட்ரிகல் தொழில்நுட்பத்தில் (Bio-metric technology) இது செயல்படுகிறது.

இனிமேல் ATM CARD எடுத்துவரவில்லையே, ATM கார்டு தொலைந்துவிட்டதே என்ற கவலையே உங்களுக்கு இல்லை...

இந்த வசதியை ஜப்பானில் உள்ள Regional Bank ஆரம்பித்திருக்கிறது. இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாக போகிறது.

பார்வையற்றோருக்கான ATM வசதி 

ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி இந்த வசதியை அந்நாட்டில் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பார்வையற்றோருக்கான குரல் உணரி மூலம் இந்த வசதியை உருவாக்கியுள்ளது.

ATM சென்று அங்குள்ள பெரிய ப்ரெய்லி கீபோர்ட், பெரிய, நல்ல ரீசொல்யூசன் கொண்ட திரை, பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வித்ததில் அமைந்த தடிமனான எழுத்துகள், மற்றும் HEAD PHONE, SPEAKER ஆகியவற்றைப் பயன்படுத்தி பார்வையற்றவர்கள் யாருடைய துணையுமின்றி எளிதாக பணத்தை எடுக்க முடியும்.

ஷார்ஜாவில் பார்வையற்றவர்களுக்கான Emirates Association தலைமையகத்தில்தான் இத்தகைய அரிய ATM அமைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க