கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்

வணக்கம் நண்பர்களே..!

மின்சாரம் இல்லாமலேயே செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



 
 
வழக்கமாக நாம் மின்சாரத்தை charger மூலம் செல்போன் பேட்டரிகளில் சேமித்து வைப்போம். அவ்வாறின்றி, கையில் பிடித்தபடியே செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் முறையை அமெரிக்காவில் உள்ள வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தின் Nano Technology துறை பேராசிரியர் டேவிட் கரோல் கண்டுபிடித்துள்ளார்.


இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உடல் வெப்பமானது மின்சாரமாக மாற்றப்பட்டு, செல்போன்களில் சார்ஜ் செய்யப்படுகிறது.

இத்தொழில்நுட்பத்தில் மிகச்சிறிய பிளாஸ்டிக் பைபர்கள், மிக நுண்ணிய கார்பன் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்பம் அடங்கிய கருவியை கையில் பிடித்துக்கொண்டாலே போதும். உங்கள் செல்போனில், உங்கள் உடல் வெப்பம் மின்சாரமாக மாற்றப்பட்டு செல்போனில் சார்ஜ் செய்யப்பட்டுவிடும்.

மிக விரைவில் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என இதை உருவாக்கிய வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தின் Nano Technology துறை பேராசிரியர் டேவிட் கரோல் தெரிவித்திருக்கிறார்.

என்ன நண்பர்களே..!

மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, மின்சாரம் இன்றி தவித்துக்கொண்டிருக்கும் நமக்கு, இப்புதிய தொழில்நுட்பத் தகவல்கள் சற்று ஆறுதளிக்கும் என நம்புகிறேன்..


நன்றி நண்பர்களே..!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

ஓவியம் வரையப் பயன்படும் இலவச மென்பொருள்

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க