C புரோகிராமிங் Part-2

ஹைகை லெவல் லாங்குவேஜ்(High Level Language)
இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கும் எளிதாக இருக்கும்.
புரோகிராமர்கள் எளிதில் புரிந்துகொண்டு கோடு எழுத வழிமுறைகளை(syntax) கொண்டுள்ளது. இதில் எழுதப்பட்ட புரோகிராமை மெஷின் கோடாக மாற்ற கம்பைலர்(compiler) உபயோகிக்கப்படுகின்றது.

லோ லெவல் லாங்குவேஜ்(Low Level language )
இது படிப்பதற்கும் புரிந்து கொள்ளுவதற்கு சற்று கடினமானது. பொதுவாக இதனுடைய புரோகிராம் கோடானது மெமோனிக் கோடால்(mnemonic code) எழுதப்பட்டிருக்கும்.

மைக்ரோபிராசசர்(microprocessor), மைக்ரோகன்ரோலர்(micro-controller) போன்றவை இந்த லாங்வேஜை உபயோகிக்கின்றன.நேரடியாக கம்யூட்டர் ரிஜிஸ்டர்(register), நினைவகத்துடன்(memory) தொடர்புடைய கோடுகளை கொண்டது. உதாரணமாக அஸம்பிளி லாங்வேஜை(assembly language) நாம் கூறலாம். இதில் எழுதப்பட்ட கோடை மெஷின் கோடாக மாற்ற அஸம்ளர்(assembler) உபயோகிக்கப்படுகின்றது.

சி லாங்குவேஜ்(C Language)
சியானது ஒரு ஹைகை லெவல்(highlevel) லாங்குவேஜ். சியில் நாம் எளிதாக மெம்மரியை(memory) கையாலுவதால் சியானது மிடில் லெவல் லாங்குவேஜ்(middle level language) எனவும் அழைக்கப்படுகின்றது. கம்பைலர் லாங்குவெஜ்(compiler language) எனவும் அழைக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க