ஆடியோ பைல்களை கன்வர்ட் செய்ய ஒரு அற்புத தளம்

உங்கள் ஆடியோ கோப்புகளை ஆன்லைனில் எடிட் இந்த தளம் உங்களுக்கு பயன்படுகிறது.

ஒரு சில கிளிக்குகளில் ஒரு ஆடியோ கோப்பிலிருந்து மற்றொரு ஆடியோ கோப்பாக மாற்றமுடியும்.

சாதாரணமாக ஆடியோ கன்வர்ட்டிங் செய்ய நாம் மென்பொருள்களை (Audio converting software) கணினியில் நிறுவி பயன்படுத்துவோம்.

அவ்வாறு மென்பொருள்களை நிறுவாமலேயே இத்தளத்தின் மூலம் உங்கள் ஆடியோ கோப்புகளை எளிதாக மாற்ற முடியும்.

உங்களிடம் ஆடியோ கன்வர்ட்டிங் மென்பொருள் இல்லாத போது இதுபோன்ற தளங்கள் மூலம் ஆடியோ கன்வர்ட்டிங் (Audio) செய்துகொள்ளலாம்.

1. உங்கள் ஆடியோ கோப்புகளை இணையத்தில் மூலம் கன்வர்ட் செய்ய Switchr.net தளத்திற்கு செல்லுங்கள்.

2. சென்ற பிறகு உங்கள் ஆடியோ கோப்பை அதில் தரவேற்றம் செய்துகொள்ளுங்கள்.. (select a audio file from your computer)

3. பிறகு மாற்ற வேண்டிய ஆடியோ பார்மட்டை தேர்வு செய்யுங்கள்...(Select audio format you want (like WAV, MP3, AAC, AIF, AU, FLAC, OGG, M4A, WMA, iPhone Ringtone) )

4. அடுத்து உங்கள் Email-ஐ உள்ளிடுங்கள்...(Enter Your E-mail)

5. இறுதியாக Switch my file என்னும் பொத்தானை சொடுக்குங்கள்...

6. இப்போது உங்கள் ஆடியோ கோப்பானது நீங்கள் விரும்பிய பார்மட்டிற்கு மாற்றப்பட்டு, மாற்றப்பட்ட ஆடியோ கோப்பை தரவிறக்குவதற்கான இணைப்புச் சுட்டி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டுவிடும்.

7. உங்கள் மின்னஞ்சலைத் திறந்து உங்களுக்கு வேண்டிய கன்வர்ட் செய்த பாடலை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

மிகச் சுலபமான முறையில் நீங்கள் இதுபோல மென்பொருள் இல்லாமலேயே இணையத்தின் மூலம் உங்கள் ஆடியோ கோப்புகளை எளிய முறையில் கன்வர்ட் செய்து பயன்படுத்த முடியும்.

இந்த வீடியோவைப் பாருங்கள்.. இத்தளத்தினரே ஒரு Audio File -ஐ எப்படி கன்வர்ட் செய்வது என்பதை தத்ரூபமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு Format லிருந்து மற்றொரு Audio format-ற்கு மாற்றுவதை ஒரு கிளியை வைத்து நமக்கு வேடிக்கையாக புரிய வைத்திருக்கிறார்கள்.
 
 

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க