பென்டிரைவில் இருக்கும் Autorun.inf Virus கணினிக்கு வராமல் தடுப்பது எப்படி?

how to prevent autorun.inf virus into pc 
 
Pendrive -ல் உள்ள Autorun.inf எனும் வைரஸ் கணினியை பாதிக்காதவாறு தடுப்பது எப்படி என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

1. உங்கள் கணினியில் Run விண்டோ திறக்கவும். (Start+R)
2. அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்
3. புதியதாக ஒரு பாப்அப் விண்டோ திறக்கும்.
4. அதில் Administrative Templates=>System என்பதை தேர்ந்தெடுங்கள்.
5. அடுத்து Turnoff Autoplay என்பதில் double click செய்யுங்கள்.
6. தோன்றும் பெட்டியில் Turnoff autoplay என்பதின் கீழ் உள்ள எனேபில்ட் என்பதை தெரிவு செய்யுங்கள். அதிலேயே Turnoff Autoplay on என்பதில் all drives என்பதை தெரிவு செய்யுங்கள்.

இனி நீங்களே பென்டிரைவை கிளிக் செய்து திறந்தால் மட்டுமே பென்டிரைவ் திறக்கும். ஆட்டோமேட்டிக்காக அதுவே திறக்காது. 

நண்பர்களிடம் வாங்கிய பென்டிரைவ்களையோ, அல்லது உங்கள் நண்பர்களுக்கு இரவலாக கொடுத்த பென்டிரைவை மீண்டும் பெற்று பயன்படுத்தும்போதோ கணினியில் இணைத்தவுடன் இரட்டை கிளிக் செய்து பென் டிரைவ் திறக்க கூடாது. இதனால் அவர்களின் கணினியிலிருந்து உங்கள் பென்டிரைவிற்கு ஏதேனும் வைரஸ் தொற்றியிருந்தால், உடனே உங்கள் கணினிக்கும் பரவிவிடும் அபாயம் உள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட பென்டிரைவை கணினியில் செருகியவுடன், உங்கள் பென்டிரைவிற்குரிய டிரைவரின் பெயரை Start+R அழுத்தி ரன் விண்டோ திறந்து, அதில் பென் டிரைவிற்கான எழுத்தை தட்டச்சிடவும். (எனது பென்டிரைவின் டிரைவர் எழுத்து G: )

பிறகு என்டர் அழுத்துங்கள். அல்லது ok கிளிக் செய்யும்போது உங்கள் பென்டிரைவிற்கான டிரைவ் திறந்துகொள்ளும். இந்த முறையில் நீங்கள் திறக்கும் பென்டிரைவில் ஏதேனும் வைரஸ் இருந்தால் கணினியை பாதிக்காது. செயல்படுத்திப் பாருங்களேன்..!!

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க