விண்டோஸ் (XP) எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7
- உலகலவில் சென்ற ஆண்டு வெளிவந்த விண்டோஸ் 7 பத்தில் ஒரு கணிணியிலும், எட்டுவருடத்திற்கு முன் வந்த விண்டோஸ் எக்ஸ்பி 75 சதவீத கணிணிகளில் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
1) விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி பழகியது
2) அடுத்துவந்த விண்டோஸ் விஸ்டாவின் தோல்வி
3) புதிய விண்டோஸ் 7-ன் கணிணி ஹார்ட்வேர் தேவை
விண்டோஸ் 7-க்கு மாற என்ன செய்யலாம்
விண்டோஸ் 7க்கு மாற உள்ள முக்கிய தடையே, இதனை பயன்படுத்த நம்மிடம் உள்ள பழைய (ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட்)ஹார்ட்வேர் ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7க்கு குறைந்தப்பட்ச கணிணியின் தேவையாக 1 கிகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 1 ஜிபி ராம் மெமரி, 16 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. ஆனால் 600 மேல் மெகாஹெர்ட்ஸ் பிராஸஸர் ஸ்பீட், 512 எம்பி ராம் மெமரி, 8 ஜிபி ஹார்ட் டிஸ்கில் இடம் இருந்தாலே அந்த சிஸ்டத்தில் விண்டோஸ் 7 நிறுவலாம்.
நமது கணிணியில் விண்டோஸ் 7 நிறுவ சரியான ராம் மெமரி, பிராஸஸர் ஸ்பீட் இருக்கிறதா என்று பார்ப்பதற்க்கு,
"Desktop" செல்லவும் --> "My Computer"-ல் வலப்பக்கம் கிளிக் செய்யவும் --> "Properties" தேர்ந்தெடுக்கவும் --> "General" டேப்பில் கீழே தகவல்கள் இருக்கும்.
256 எம்பி ராம் மெமரி மட்டுமே நமது சிஸ்டத்தில் இருந்தால், நமது மெமரியை 512 க்கு உயர்த்தி விண்டோஸ் 7 நிறுவிய பின், அதை 256 எம்பிக்கு குறைந்தாலும் விண்டோஸ் 7 நன்றாக இயங்கும். இல்லையென்றால், விண்டோஸ் 7 நிறுவ வேண்டிய ஹார்ட் டிஸ்கை 256 எம்பி ராம் மெமரி உள்ள கணிணியிலிருந்து 512 ராம் மெமரி உள்ள கணிணிக்கு மாற்றி, விண்டோஸ் 7 நிறுவிய பின் மீண்டும் பழைய கணிணிக்கே மாற்றலாம்.

விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி போலவே பயன்படுத்த எளிதாகவே உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பியை விட மனம் இல்லையென்றால், விண்டோஸ் 7-ஐயும் விண்டோஸ் எக்ஸ்பியையும் டூயல்பூட் முறையில் பதியலாம். அதாவது ஏற்கனவே உள்ள விண்டோஸ் எக்ஸ்பி C டிரைவிலும், புதிதாக பதியும் விண்டோஸ் 7-ஐ D டிரைவிலும் பதிந்தால் இரண்டு ஆப்ரேடிங் சிஸ்டத்தையும் பயன்படுத்திக் விண்டோஸ் 7 பயன்படுத்த பழகி கொள்ளலாம். இதோடு விண்டோஸ் 7-ல் விண்டோஸ் எக்ஸ்பியில் பழகியவர்களுக்கு ”விண்டோஸ் எக்ஸ்பி மோட்” உள்ளது.
கணிணியில் விண்டோஸ் எக்ஸ்பி நிறுவ 50 நிமிடங்களும், விண்டோஸ் 7 நிறுவ 15 நிமிடங்களும் ஆகின்றன. விண்டோஸ் 7 பயன்படுத்துவதால் விண்டோஸ் 7 அழகிய தோற்றம் மற்றும் அனிமேஷன் செயல்பாடு, கணிணி பாதுகாப்பு, புதிய ஹார்ட்வேர்களின் இணைப்பு போன்றவைகளை பெறலாம்.
Comments