Panda Cloud ஆண்டிவைரஸ் 6மாத இலவசமாக பதிவிறக்கம் செய்ய

      கணினியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருட்களில் ஆண்டிவைரஸ் மென்பொருளும் ஒன்றாகும். அதுவும் இணைய இணைப்பு இருந்தால் கண்டிப்பாக ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் நம்முடைய கணினியில் நிறுவியிருக்க வேண்டும். கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவி ஒரு மாதம் கூட இல்லை அதற்குள் கணினியில் பல வைரஸ்கள், கணினியானது மந்தமாக வேலை செய்கிறது போன்ற செய்திகளை நண்பர்களிடம் கேட்டிருக்கலாம். இதற்கு காரணம் அவர்கள் கணினியில் ஆண்டிவைரஸ் இன்ஸ்டால் செய்யாமல் இருப்பார்கள். அல்லது ஆண்டிவைரஸ் மென்பொருளை மேம்படுத்தாமல் இருப்பார்கள். இல்லையெனில் இணையத்தில் இருந்து ஆண்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவர் அது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு வேலை செய்யாது. கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவியவுடனே இன்ஸ்டால் செய்ய வேண்டிய மென்பொருள் என்றால் அது ஆண்டிவைரஸ் மென்பொருள் மட்டுமே ஆகும்.
          இது போன்ற ஆண்டிவைரஸ் மென்பொருட்களை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் மட்டுமே நன்றாக இருக்கும். இல்லையெனில் அவையாவும் சிறப்பாக அமையாது பணம் கொடுத்து வாங்க முடியாத கணினி பயனாளர்கள் இலவசமாக ஆண்டிவைரஸ் நிறுவனமே கொடுக்கும் போது அதனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அதுபோல் தான் தற்போது Panda Cloud ஆண்டிவைரஸ் மென்பொருளானது தற்போது 6 மாத இலவசமாக கிடைக்கிறது.

மென்பொருளை பதிவிறக்க சுட்டி

சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, பேஸ்புக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்து கொள்ளவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். சில நொடிகளில் முகப்புதிரை விலகும், அடுத்ததாக Download NOW என்னும் பொத்தானை அழுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அடுத்ததாக டவுண்லோட் செய்யப்பட்ட மென்பொருளை கணினியில் நிறுவவும்.


அடுத்த சில நொடிகளில் சில பைல்கள் டவுண்லோட் செய்யப்பட்டு, மென்பொருளானது கணினியில் முழுமையாக நிறுவப்பட்டு விடும். இறுதியாக Panda Cloud Anti-Virus Pro ஆக்டிவேட் செய்யவா என்ற ஒரு செய்தி வரும். அதை ஒகே செய்துவிடவும். பின் மென்பொருளானது கணினியில் முழுமையாக நிறுவப்பட்டுவிடும்.

 

இந்த மென்பொருளின் சந்தைவிலையானது $29.95 ஆகும். இந்த விலையானது ஒரு பயனருக்கான மென்பொருளின் சந்தை விலையாகும். இந்த ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கென தனியொரு லைசன்ஸ் கீ எதுவும் இந்த பதிப்பில் சேர்க்கப்படவில்லை. இந்த மென்பொருளானது கணினிக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்டிவைரஸ் மென்பொருள் ஆகும்.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS