அழிக்க முடியாத பயன்பாட்டை கணினியில் இருந்து நீக்க
Uberstaller,
நாம் நம் கணினியில் பல்வேறு பயன்பாடுகளை நிறுவும் பழக்கத்தைக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் எப்போதாவது ஒரு குறிப்பிட்ட வீணான தேவையற்றதை கணினியின் கண்ட்ரோல் பேனலின் ஆட் ரிமூவ் வழியாக நீக்க முயலும்போது பிரச்சினைகளை எதிர்கொள்வதும் உண்டு. விண்டோசின் ஒருங்கிணைந்த அன் இன்ஸ்டாலர் ஆனது தேவையில்லா பயன்பாட்டை நீக்கும்போது உதவி செய்ய மறுக்கும்.
அல்லது அரைகுறையாக நீக்கிவிட்டு என்னால் முடியாது என கையை விரிக்கும். இதை அப்படியே விட்டுவிட்டால் கணினியின் வேகம் மிக குறைந்துவிடும். சில நேரங்களில் கணினியின் விண்டோஸ் இயங்குதளத்தின் இயக்கமே நின்று போகும் அபாயமும் உண்டு.
இந்த நேரத்தில் உதவிக்கு நாம் அழைக்க வேண்டிய ஒரு மென்பொருள் Uberstaller. இதைப் பயன்படுத்தும்போது மின்னல் வேகத்தில் இயங்கும். நீக்கப்படவேண்டிய பயன்பாட்டின் சுவடுகளை கண்டறிந்து ஒன்று விடாமல் அனைத்தையும் அழித்துவிடும்.
தரவிறக்கச் சுட்டி : http://bit.ly/fT7F3G
Comments