அசத்தலான எட்டு ஆன்லைன் பயன்பாடுகள் ஒரே தளத்தில்
Aviary
உங்கள் புத்தாக்க சிந்தனையை மெருகேற்ற ஒரு அசத்தலான தளத்தை அறிமுகம் செய்கிறேன். Aviary என்பது தளத்தின் பெயர். இசை, புகைப்படம், வண்ணம், வெக்டர், ஒலி போன்ற எட்டுவிதமான அம்சங்களை ஆன்லைனில் எடிட்டிங் செய்யலாம். உங்கள் உலவியின் உள்ளேயே இவை அனைத்தையும் இயக்க முடிவதால், எல்லா இயங்குதளங்களிலும் அப்படியே பயன்படுத்தலாம்.
உங்கள் இணைய உலவியில் Aviary தளத்தை திறந்து அப்படியே பயன்படுத்தலாம். எந்தவித மென்பொருளையும் தரவிறக்கி, நிறுவவேண்டிய அவசியமும் இல்லை. அடோபி ப்ளெக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட பயன்பாடுகள் இவை. அனைத்தும் அசத்தலான பல்லூடக நுட்பங்கள். நீங்கள் இசை விரும்பியாகவோ, புகைப்படங்களை எடிட்டிங் செய்யும் புதுமைப் புயலாகவோ இருப்பின் உங்களுக்கான அசத்தல் தளம் இது என்பது மிகையாகாது.
இணையதள முகவரி : http://goo.gl/YhK13
Comments