ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளின் பெயர்களை ஒரே நொடியில் மாற்றுவதற்கு

ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் புகைப்படக் கருவியில் படங்கள் எடுத்துத் தள்ளுவதில் நாம் கில்லாடி. கேமராவில் இருக்கும் நினைவகத்தின் அளவும் மிக அதிகமே. ஒவ்வொரு முறை புகைப்படம் எடுக்கும்போதும், கருவியானது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு ராண்டம் பெயரையே ஒவ்வொரு படத்திற்கும் சூட்டுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளின் பெயர்களை ஒரே நொடியில் மாற்றுவதற்கு
ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளின் பெயர்களை ஒரே நொடியில் மாற்றுவதற்கு
கேமராவின் நினைவகத்தில் பதியப்பட்டுள்ள படங்களை கணினியின் வன்வட்டில் நகல் எடுத்த பிறகு, நாமே அந்த கோப்புகளின் பெயரை மாற்றுகிறோம். இவ்வாறு மாற்றாவிடில், தேவைப்படும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் எடுக்கப்பட்ட படத்தை தேடிக் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கும்.
ஒவ்வொரு படத்தையும் தனித்தனியாக பெயர் மாற்றுவதும் கடினமே. ஒரு குறிப்பிட்ட தினத்தில் / இடத்தில் / பகுதியில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களுக்கும் மொத்தமாக ஒரே பெயரை வைத்துவிடுவது சிறந்தது.
ஒரே நாளில் பல்வேறு பகுதியில் படங்கள் எடுத்திருந்தால் ஒவ்வொரு பகுதியில் எடுக்கப்பட்ட படங்களுக்குமாவது ஒரே பெயரை நாமே சூட்டுதல் நலம்.
இந்த பெயர் சூட்டும் பணியை விரைவில், எளிதாக செய்ய உதவும் பயன்பாடு : PyRenamer .
இதை உபுண்டு லினக்சில் சேர்ப்பதற்கும், மேலதிக விபரங்களுக்கும் உதவும் சுட்டி இதோ : http://bit.ly/f5NvkO

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க