Comodo Internet Security Pro 2011 ஒரு வருடத்திற்கான சோதனை பதிப்பு

Comodo Internet Security Pro 2011 மென்பொருளை சோதனை பதிப்பிற்காக அந்த நிறுவனம் ஒரு வருடத்திற்கு இலவசமாக அளிக்கிறது. சாதரணமாக சோதனை பதிப்புகள் யாவும் 30 முதல் 90 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். ஆனால் இந்த மென்பொருளானது ஒரு வருடத்திற்கு கிடைக்கிறது.

ஆண்டிவைரஸ் மென்பொருள் கணினியில் இருக்கவேண்டிய கட்டாயமான மென்பொருள்களில் ஒன்றாகும். ஆப்ரேட்டிங் சிஸ்ட்டம் நிறுவிய உடனே ட்ரைவர் இன்ஸ்டால் செய்கிறோமோ இல்லையோ ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவிவிடுவோம். இதற்கு காரணம் நம்முடைய கணினிக்கு வைரஸ் தொல்லைகள் ஏற்படாமல் இருப்பதற்காக, ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் மற்றும் இண்டர்நெட் செக்யூரிட்டி மென்பொருள்கள் யாவும், பணம் கொடுத்தே வாங்கள் வேண்டும். ஒரு சில மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கிறது. ஆனால் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயனளிக்க கூடியது ஆகும். ஆனால் Comodo Internet Security Pro 2011 என்ற மென்பொருள் ஒரு வருடத்திற்கு இலவசமாகவே வழங்குகிறனர்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட  தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை பயன்படுத்தி கொள்ளவும். இணைய இணைப்பு இருக்கும் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய இணைய செக்யூரிட்டி மென்பொருள் ஆகும்.  இணைய இணைப்பு இருக்கு கணினியில் ஏற்கனவே ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருள் இன்ஸ்டால் செய்திரிப்பீர்கள். ஆனாலும் கூடுதலாக இந்த இணைய செக்யூரிட்டி மென்பொருளையும் நிறுவிக்கொள்ளுங்கள். இதனால் உங்களுடைய கணினிக்கு பாதுகாப்புதான்.


இந்த மென்பொருளை பயன்படுத்துவதால் நீங்கள் வைரஸ் தொல்லைகளில் இருந்து தப்பிக்க முடியும். இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $49.99 ஆகும். இந்த மென்பொருள் விண்டோஸ் எக்ஸ்பி(சர்வீஸ்பேக் 2), விஸ்டா மற்றும் விண்டோஸ் செவன்(7) போன்ற இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளை சாதரணமாக இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். இதற்குகென எந்தவித லைசன்ஸ் கீயும் கிடையாது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க