FDM-இல் தரவிறக்கம் முடிந்தவுடன் அலாரம் அடிக்கச் செய்ய
இணைய உலகில் தரவிறக்கம் (Download) என்பது இன்றியமையாத ஒன்று. எத்தனையோ இலவசங்களை நாள்தோறும் தரவிறக்கி மகிழ்பவர் பல கோடி. எம்பி3 பாடல்கள் முதல் மென்புத்தகங்கள் (e-Books) வரை தினமும் தரவிறக்கிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு உதவுவதற்காக இதை எழுதுகிறேன்.
எதையும் தறவிரக்கம் செய்ய ஒரு அற்புதமான இலவச மென்பொருள் ஃப்ரீடவுன்லோட் மேனேஜர் (Free Download Manager) என்பதில் ஐயமில்லை.
ஒரே நாளில் பல்வேறு கோப்புகளை ( File(s) )டவுன்லோட் செய்ய முயன்றிருப்பீர்கள். ஒவ்வொரு டவுன்லோடும் முடிந்தபிறகு ஒரு ஒலி / இசை எழுப்பினால் (Notification)அது இன்னும் வசதியாக இருக்குமே! அந்த இசை ஒலித்தபின் நாம் அடுத்த டவுன்லோடை ஆரம்பித்துவிடலாம்.
நான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஃப்ரீடவுன்லோட் மேனேஜரைப் பயன்படுத்துகிறேன். அதில் டவுன்லோட் முடிந்தவுடன் ஒலியெழுப்ப (அலாரம் அடிக்க்) நாம் என்ன செய்ய வேண்டும்.
வழமை போல தரவிறக்கச் சுட்டி கீழே. ஃப்ரீடவுன்லோட் மேனேஜரை இயக்கவும். அதில் கீழ்க்கண்ட செய்முறையை அப்படியே செய்யவும்.
Options –> Settings –> Notifications –> இங்கே Use Sounds என்கிற check box ஐ tick செய்க.
Customize அழுத்தவும். Customize Sounds டயலாக்பாக்சில் Download Completed தேர்வு செய்க.
Set Sound அழுத்தவும். உங்கள் கணீனியில் உள்ள ஒரு WAV கோப்பை தேர்வு செய்யவும். Open அழுத்தி OK, OK செய்யவும்.
நான் C:\windows\system32\LoopyMusic.wav என்பதை தேர்ந்தெடுத்தேன்.
இனி எப்போதெல்லாம் நீங்கள் எதையாவது இந்த மென்பொருள் வாயிலாக தரவிறக்கம் / டவுன்லோட் செய்கிறீர்க்ளோ அப்போதெல்லாம் தரவிறக்கம் முடிந்த நிகழ்வை இனிய ஒலி / இசையுடன் உங்களுக்கு தெரியப்படுத்த இந்த மென்பொருள் தவறாது.
நன்றியுடன் நானே!
தரவிறக்கச் சுட்டி : http://goo.gl/M8btJ
Comments