சாம்சங் காலக்ஸி எஸ் 4 அதிரடி விலை குறைப்பு

இந்தியாவில், சாம்சங் காலக்ஸி எஸ் 4 மொபைல் போனின் விலை ரூ.29,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த போனின் விலை ரூ. 41,500 ஆக இருந்தது. காலக்ஸி எஸ் 5 மாடல் விரைவில் சந்தைக்கு வர இருப்பதால், இந்த விலை குறைப்பு ஏற்பட்டிருக்கலாம்


சாம்சங் காலக்ஸி எஸ் 4 போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது. மாதந்தோறும் பணம் செலுத்திப் பெறும் திட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. இப்போது ஏற்பட்டுள்ள விலைகுறைப்பினைப் பார்த்தால், காலக்ஸி எஸ்5, காலக்ஸி எஸ் 4 அறிமுக விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

காலக்ஸி எஸ் 4 மொபைலில், 5 அங்குல திரை Super AMOLED டிஸ்பிளேயுடன் உள்ளது. 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேகத்டில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன கிடைக்கின்றன. மேலும் எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா உள்ளது. முன் பக்கமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 2 ஜிபி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜிபி. இதில் உள்ள பேட்டரி 2,600 mAh திறன் கொண்டது.

நன்றி

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

இயங்குதளங்கள் - OPERATING SYSTEMS